புதிதாய் ஒரு சாசனம் எழுதிடுவோம்

கிழக்கே இருள் சூழ
மேற்கே மறைந்ததென்ன..?
உதிப்பாய் சூரியனே
உலகம் விழித்திடவே...!

உயிரை விலை தந்து
உணர்வை ஊட்டி விட்டாய்
உரிமை வேட்கையினை
உளமதில் விதைத்து விட்டாய்...!

கதைகளில் வருகின்ற
காற்றே இல்லாத
தேசத்தில் வாழும்
கடவுளை நம்பி
முறையிடப் போனாயோ....!

வீழ்ந்தாய் நீயே..
எழுந்தோம் நாமே..
சூழ்ந்தழுத்தும் கொடும்
சூழ்ச்சியை சுடுவோம்...!

விலையெனவே உழைப்பினைத் தந்து
மலையின் உச்சியை தொடும் நேரம்...
திடுமெனவே கிடுகிடுவென்று
உயர்ந்தது மலை உயரம்...!

சிகரம் தொட ஏங்கிய சிறகுகள்
சிறகடித்தே அதை தீண்டிவிடும்...
சிகரம் தொட சிறகுகள் இருக்க
கயிறும் எதற்கய்யா...?

உன் உயிரை எழுதுகோலாக்கி
உன் கனவு மையதில் தொட்டு
மறத் தமிழராய் எழுந்து
அறவழி இணைந்து
வரலாறு படைக்க
புதிதாய் ஒரு
சாசனம் எழுதிடுவோம்....!

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (13-Sep-17, 8:51 pm)
பார்வை : 63

மேலே