என் உயிரினும் மேலான - நெடுந்தொடர் - - - பாகம் 37

விஜிக்கு தந்தையின் இந்த மாற்றம் மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு தந்தையின் அருகில் உட்கார்ந்து அந்த அழகிய மாலை பொழுதில் அவளது உணவு....என்ன ஒரு அழகிய தருணம். புவனாவும் ரம்யாவும் கூட இந்த தருணத்தை மிகவும் சந்தோஷமாக கழித்தனர்.

"அப்பா, கண்டிப்பா இனிமே தண்ணி அடிக்க மாட்டிங்க இல்லப்பா" என்றாள் விஜி.

"என்ன டா பட்டும்மா, கண்டிப்பா அடிக்க மாட்டேன், என் செல்ல குட்டிங்களுக்காக இந்த ஆப்ட்ரால் குடியை விட மாட்டேனா டா" என்றார் விஜியின் தந்தை.

என்ன ஒரு ஆனந்தம், புவனா புன்னகைக்க, ரம்யா சந்தோஷப்பட, விஜியை தனது மார்பில் சாய்த்து உச்சந்தலையில் ஒரு முத்தம் கொடுத்தார்.

தனது தந்தை தான் எதிர்பார்த்தபடி மாறிவிட்டதை உணர்ந்தாள் விஜி.

"கண்டிப்பா விஜி, நம்ம குடும்பம், என் செல்ல பிள்ளைகள் ரெண்டு பேர், அன்பான மனைவி...நீங்க தான டா எனக்கு எல்லாம், என் பொண்ணுங்கள இவ்ளோ நாள் மனசால எவ்ளோ சங்கடப்படுத்திருக்கேன் னு வேற ஆளுங்க எல்லாம் சொல்லி தெரிஞ்சுக்கிட்டது எவ்ளோ ஒரு அசிங்கமான விஷயம் டா. நீ என்கிட்ட பேசி புரிய வெச்சுருக்கலாம் இல்ல டா செல்லம்" என்றார் விஜியின் தந்தை.

"விடுங்கப்பா, நீங்க எங்க அப்பா, நீங்க இப்போ எங்களை புரிஞ்சுக்கிட்டது போதும், சந்தோஷமா இருக்கு பா" என்றாள் விஜி.

அதே சந்தோஷத்தில் வீடு வந்து சேர்ந்தனர் அனைவரும்.

விஜி காயத்ரிக்கு கால் செய்தாள்.

"காயத்ரி, நாங்க வந்துட்டோம், பட் லேட் ஆயிருச்சு, நாளைக்கு காலேஜ் ல பேசலாம்" என்றாள் விஜி.

"சரி டி" என்று சொல்லிவிட்டு நஸ்க்ரீனுக்கு கால் செய்தாள் காயத்ரி.

"அக்கா, நாம எக்ஸ்பெக்ட் பண்ணின மாதிரி ப்ரவீணோட அந்த முயற்சி வீணாகலக்கா,முபாரக் அண்ணா பக்கத்துல இருக்காரா?" என்றாள் காயத்ரி.

"இல்லம்மா, அவன் காரை வித்துட்டான், சோ, இனிமே அடுத்த கார் வாங்கற வரைக்கும் அவனோட அப்பா கார் தான், சோ, நெனைச்சா நேரத்துக்கு வர முடியாது. ஏன்னா நான் டூ வ்ஹீலர் ல அவன் வந்தா கோச்சுக்குவேன், பட் அவனை பாக்கணும் போல தான் இருக்கு, சரி விஷயத்துக்கு என்ன ஆச்சு" என்றாள் நர்கீஸ்.

"விஜியோட அப்பா, தண்ணி அடிக்க மாட்டேன் னு ப்ராமிஸ் பண்ணி இருக்காரு, எல்லாரும் அர்ச்சனா ரூப் கார்டன் போயிட்டு வந்திருக்காங்க, விஜி பயங்கர ஹேப்பி. ஆனா இதுக்கு காரணமான பிரவீன் பத்தி அவளுக்கு எந்த ஐடியாவும் இல்லையே அக்கா, பாவம் பிரவீன். அவமேல இப்படி உயிரா இருக்கான், அவளுக்காக நேத்து எவ்ளோ பேசி இருக்கான் அவ அப்பாகிட்ட, ஆனா இவ இப்டி அவனை கஷ்டப்படுத்தி இருக்காளே" என்றாள் காயத்ரி.

"காயத்ரி, விஜி சந்தோஷமா இருக்காளா, அதான் வேணும்" என்றாள் நர்கீஸ்.

"ஆனா இதுக்கு காரணமான பிரவீன் சந்தோஷமா இருக்கானா அக்கா" என்றாள் காயத்ரி.

"ஏன்...அவனுக்கு என்ன அவன் சந்தோஷமா தான் இருக்கான்" என்றாள் நர்கீஸ்.

"எல்லாம் தெரிஞ்சும் ஏன் பொய் சொல்றீங்க நர்கீஸ் அக்கா" என்றாள் காயத்ரி.

"இல்ல டா, நிஜமா தான். அவன் சந்தோஷமா தான் இருக்கான்" என்றாள் நர்கீஸ்.

"உங்ககிட்ட பேசி ஜெயிக்க முடியாது அக்கா" என்றாள் காயத்ரி.

"சரி...நீ என செல்ல வர, சொல்லு" என்றாள் நர்கீஸ்.

"ஐ திங்க் பிரவீன் விஜியை லவ் பண்ராருன்னு நினைக்கறேன் அக்கா பட் ஐ ஆம் நாட் ஷ்யூர்" என்று கூறினாள் காயத்ரி.

நர்கீஸ் ஒரு நிமிடம் மௌனமாகிவிட்டாள்.

"என்ன சொல்ற காயத்ரி, எப்படி நீ இதை பீல் பண்ணின" என்றாள் நர்கீஸ்.

"அக்கா, நேத்து கார் ல பிரவீன் என்னை பிக்கப் பண்ணிட்டு போகும்போது விஜி எனக்கு கால் பண்ணினா, நான் ரொம்ப நேரம் பேசிக்கிட்டே வந்தேன். அப்போ விஜி என்கிட்டே அந்த டேவிட் அவகிட்ட அடிக்கடி லவ் ப்ரபோஸ் பண்ணிட்டே இருக்கான் னு சொன்னா, " என்றாள் காயத்ரி.

"யாரு, அந்த விழுப்புரம் டீம் டேவிட் ஆஹ்" என்றாள் நர்கீஸ்.

"ஆமாம் அக்கா, அவன் தான், அவன் அடிக்கடி விஜியை காலேஜ் ல மீட் பண்ணி லவ் பண்றேன் னு அவளை தொல்லை கொடுத்துட்டே இருப்பான்" என்றாள் காயத்ரி.

"சோ..." என்றாள் நர்கீஸ்.

"அவ அப்டி போன் ல சொன்னதும் நான் திருப்பி அவன் உன்னை லவ் பண்ணறேன்னு சொன்னா நீயும் அவனை லவ் பண்றேன் னு சொல்லி ப்ரபோஸ் பண்ணிடுன்னு சொன்னேன்....சடனா ஒரு பிரேக் போட்டாரு பாருங்க, நான் பயந்தே போய்ட்டேன், அப்புறம் அவர் நார்மல் கு வர பத்து செகண்ட் ஆச்சு" என்றாள் காயத்ரி.

"அப்புரம்" என்றாள் நர்கீஸ்,

"அதுக்கப்புறம் அவர் அவரை கண்ரோல் பண்ணிக்க ரொம்ப கஷ்டப்பட்டார், கண்ணு எல்லாம் கலங்கி போச்சு" என்றாள் காயத்ரி.

"ஓஹோ, அதான் அன்னிக்கு நம்மகூட உக்காந்து சாப்பிடலையா அவன்" என்றாள் நர்கீஸ்.

"ஆமாம் ஐ திங்க் சோ" என்றாள் காயத்ரி.

"சரி டா, நான் பாத்துக்கறேன், அது இருக்கட்டும், விஜி என்ன நெனைக்கிறானு ஏதாவது ஐடியா" என்றாள் நர்கீஸ்.

"அக்கா, ஸ்டார்டிங்க்ல அந்த டேவிட் முதல் வாட்டி ப்ரபோஸ் பண்ணும்போது விஜி அவனை ரொம்ப திட்டிட்டா, அதுக்கு அவனும் பிரவீன் கூட விஜியை லிங்க் பண்ணி தப்பா பேசிட்டான், அதுக்கு விஜி சொன்ன பதில் எல்லாம் பாத்தா விஜி அவரை லவ் பண்ணின மாதிரி தோணுச்சு" என்றபடி விஜி டேவிட்டிடம் சொன்ன பதில்களை சொன்னாள் காயத்ரி. "அனால் இப்போ ஏன் அப்டி பிரவீன் கிட்ட இவ்ளோ டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் பண்ரானு தான் தெரில" என்றாள் காயத்ரி.

"ஓஹோ, அப்டியா, சரி விடு நான் பிரவீன் கிட்ட பேசி பாக்கறேன்" என்றாள் நர்கீஸ்.

"சரி அக்கா" என்று போனை வைத்தாள் காயத்ரி.

உடனே ப்ரவீனுக்கு போன் செய்தாள் நர்கீஸ்.

"டேய்....எங்கடா இருக்க" என்றாள்.

"நான் இப்போ தான் பிராக்டிஸ் முடிச்சுட்டு வீட்டுக்கு வந்தேன், முபாரக் இல்ல, அவனுக்கு கால் பண்ணாம எனக்கு பண்ணிருக்க" என்றான் பிரவீன்.

"உன்கிட்ட தான் டா பேசணும்.நாளைக்கு நீ முபாரக்க கூட்டிட்டு விழுப்புரம் வா" என்றாள் நர்கீஸ்.

"ஹலோ, கார் இல்ல, என் பைக் இல்லன்னா அவன் பைக் ல தான் வர முடியும்" என்றான் பிரவீன்.

"டேய், முபாரக் அவனோட அப்பா கார் ல வருவான், அவன்கூட நீ வா" என்றாள் நர்கீஸ்.

"சரி" என்று போனை கட் செய்தான் பிரவீன்.

அடுத்து முபாரக்கிற்கு போன்....

"முபா....நான் ஒண்ணு சொன்னா தப்பா நெனைக்க மாட்டியே....சொல்லலாமா" என்றாள் நர்கீஸ்.

"ஏய்...என்ன புதுசா கேக்கற...சொல்லு" என்றான் முபாரக்.

"நீ பிரவீன் பத்தி என்ன நெனைக்கற" என்றாள் நர்கீஸ்.

"ஏன் என்ன ஆச்சு, அவனை பத்தி நான் என்ன நினைக்கணும், அவன் என்னோட பெஸ்ட் பிரென்ட்" என்றான் முபாரக்.

"அது இல்ல முபா...ரீசெண்டா அவன்கிட்ட ஏதாச்சும் மாற்றங்கள் இருக்கா?தனிமையா இருக்கானா?" என்றாள் நர்கீஸ்.

"அவன் எப்பவுமே கொஞ்சம் ஐசோலேட்டா தான் இருப்பான், என்ன விஷயம் சீக்கிரம் சொல்லு, அவனுக்கு சாப்பாடு எடுத்துட்டு போகணும்" என்றான் முபாரக்.

"இல்ல டா, காயத்ரி போன் பண்ணினா" என்றபடி விஜி டேவிட் இடையே நடந்த உரையாடலையும் காரில் பிரவீனின் செயலையும் சொன்னாள் நர்கீஸ்.

"என்ன டி சொல்ற....." என்று ஆச்சர்யமாக கேட்டான் முபாரக்.

"ஆமாம் டா, நானும் உன்ன மாதிரி தான் ஷாக் ஆனேன்" என்றாள் நர்கீஸ்.

"எனக்கும் ஒரு சின்ன சந்தேகம் இருந்துட்டு தான் இருந்துது. ஆனா இப்போ அதை நாம எப்படி...." என்றான் முபாரக்.

"நாளைக்கு நீ பிரவீன் அண்ட் ரியாஸ் ஓர் விஜய் யாரவது ஒரு ஆள கூட்டிட்டு விழுப்புரம் வா, நான் காயத்ரி கிட்ட சொல்லி விஜியை கூட்டிட்டு வர சொல்றேன், விஜய்கிட்ட என்ன எதுன்னு சொல்லாம நார்மல் ஷாப்பிங் மாதிரி வர செல்றேன், எதேச்சையா மீட் பண்ற மாதிரி மீட் பண்ணுவோம், லெட் அஸ் ட்ரை டு கெட் சம்திங் பிரம் தேர் மவுத்" என்றாள் நர்கீஸ்.

"எல்லாம் ஓகே, ஆனா ஏதாவது சொதப்பலான ஆயிருச்சுன்னா மனக்கஷ்டம் எல்லாம் பிரவீன் கு ஆய்டும்" என்றான் முபாரக்.

"நாம எதுக்கு டா இருக்கோம், சமாளிப்போம், இது நீ நான் காயத்ரி நம்ம மூணு பேருக்கு தான் பிளான் அண்ட் எக்சிக்யூஷன் னு தெரியும் மத்த எல்லாருக்கும் ஒரு ஆக்சிடென்டல் மீட்டிங். ஓகே?" என்றாள் நர்கீஸ்.

"சரி, ஆனா ரொம்ப கேர்புல்லா பண்ணு" என்றான் முபாரக்.

அடுத்து மீண்டும் காயத்ரிக்கு போன்....

"என்ன அக்கா, என்ன ஆச்சு, திருப்பி போன்?" என்றாள் காயத்ரி.

"இல்ல டா, ஒரு சின்ன பிளான்...."என்றபடி பிளானை சொல்லி முடித்தாள் நர்கீஸ்.

"அக்கா, என்ன வெளயாடுறீங்களா......விஜிக்கு உண்மை தெரிஞ்சா என் முகத்துல கூட முழிக்க மாட்டா, அவளப்பத்தியும் அவ கோவத்தபதியும் உங்களுக்கு தெரியாது. இது பெரிய ரிஸ்க் அக்கா" என்றாள் காயத்ரி.

"ஏய்...நாம ஆக்சிடெண்ட்டா மீட் பண்ற மாதிரி தான் பண்ண போறோம்" என்றாள் நர்கீஸ்.

"என்ன லாஜிக் இது, அவங்க கடலூர் ல இருந்து வந்து ஆக்சிடென்டல் மீட்டிங்கா?" என்றாள் காயத்ரி.

"ஏய், லெட் அஸ் ஹாவ் எ ட்ரை" என்றாள் நர்கீஸ்.

"அக்கா, விஜி பயங்கரமான ஆளு, எல்லாத்தயும் ஈஸியா அண்டர்ஸ்டேன்ட் பண்ணிடுவா" என்றாள் காயத்ரி.

"நீ கூட்டிட்டு வா டா, பாத்துக்கலாம், ஆனா ரம்யாவ கூட்டிட்டு வராத, ஒன் மோர் திங், உன்னோட லெக்ச்சரர் அண்ட் விஜி அப்பா கேஸ் ரெண்டு விஷயத்துலயும் பிரவீன் அண்ட் முபாரக் டீம் இருக்குன்னு விஜிக்கு தெரிய வேணாம், அது முபாரக் கு தெரிஞ்சா ரொம்ப பிரச்சனை ஆய்டும், ஞாபகம் வெச்சுக்கோ, பை பை" என்று போனை கட் செய்தாள் நர்கீஸ்.

தர்மசங்கடமான நிலைமைக்கு தள்ளப்பட்டிருப்பதை உணர்ந்தாள் காயத்ரி. எப்படியும் நாளைக்கு ஒரு பெரிய களேபரம் இருக்கும் என்பது அவள் மனதில் ஆணித்தனமாய் தோன்றியது.

பகுதி 37 முடிந்தது.

---------------------தொடரும்---------------------

எழுதியவர் : ஜெயராமன் (13-Sep-17, 9:13 pm)
சேர்த்தது : ஜெயராமன்
பார்வை : 216

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே