முதியோர் இல்லங்கள்

முதியோர் இல்லங்கள் முற்றிலுமாய் சோகங்கள்
அதிகமாகப் பெருகியதே அன்பில்லாப் பிள்ளைகளால் .
விதிதானோ இவர்களுக்கும் விருந்துண்ண மனையில்லை .
மதிகெட்ட மானிடரே மண்ணுலகம் நிலையில்லை .
சதிகளும் செய்கின்றீர் சந்ததியைத் தந்தவரை
மதிக்காது அனாதைகளாய் மாற்றிடமே சேர்க்கின்றீர் .
துதிக்காது போனாலும் துவளாமல் காப்பாற்றுங்கள் .
பதியுங்கள் இக்கருத்தை பண்புடனே வாழ்ந்திடுங்கள் !

ஆக்கம் :- சரஸ்வதி பாஸ்கரன்


  • எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன்
  • நாள் : 13-Sep-17, 9:41 pm
  • சேர்த்தது : sarabass
  • பார்வை : 46
Close (X)

0 (0)
  

மேலே