கவிதைக்குப் பொய்யழகு -- எண்சீர் விருத்தம்

கவிதைக்குப் பொய்யழகு ! -- எண்சீர் விருத்தம்

கவிதைக்குப் பொய்யழகு கவிஞன் தானும்
------- கற்பனையின் ஒளிவிளக்காம் ஏற்போம் நாமும்
புவிதனிலே ஒலிக்கின்ற கவிதை யாவும்
-------- புதுமைகளின் ஒருங்கிணைந்த கீத மாகும் .
செவிதனிலே விழுகின்ற சொற்கள் பாரில்
-------- செந்தமிழின் சிறப்புதனை நிலையும் நாட்டும் .
கவிதனிலே நனைந்திடுவோம் அழகாம் பொய்மை
-------- கருத்தோங்க வாழுதற்கே வழியும் அஃதே !!

ஆக்கம் :- சரஸ்வதி பாஸ்கரன்


  • எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன்
  • நாள் : 13-Sep-17, 10:05 pm
  • சேர்த்தது : sarabass
  • பார்வை : 43
Close (X)

0 (0)
  

மேலே