பர்மா படுகொலைகள்

மியான்மருக்கு நானும் என் நண்பனும் செல்வதென்று முடிவு செய்து ...அங்கே அரசிடம் முறையிட வேண்டும்... உன் உயிர் போகும் பொழுது உனக்கு வலிக்குமல்லவா ? என்று கேட்க வேண்டும்...
உயிர் போகும் வலிகளை அனுபவித்திருக்கிறோம்...
கண் முன்னே கண்டதெல்லாம் ஆறாத இரணமாய் மனதில் ஆணியாய் அறைந்து வலித்துக்கொண்டே இருக்கிறது...
எதுவும் செய்யாத பாவியாய்
குற்ற உணர்ச்சி கொன்று புதைக்கிறது...
இனி இன்னொரு குற்ற உணர்வு வேண்டாம்.

இருக்கும் வரை கேட்பேன்
நீதியை...
தவறு செய்தவன் எவனாக இருந்தாலும் தட்டிக் கேட்பேன்.

வெள்ளைக் கொடி
சிவப்பாக மாறும் என்றால்
எங்கே உங்கள் மனிதம்?
எங்கே உங்கள் நீதி?
எங்கே உங்கள் நியாயம்?

பால் மாறா பச்சிளம் குழந்தை என்ன பாவம் செய்தது...

விளையாடிக்கொண்டிருந்த இந்த மழலை என்ன பாவம் செய்தது?

சொந்த நாட்டை விட்டு அகதியாக போகும் வலி
உயிர் போகும் வலியை விட கொடுமையானது...
அந்த வலியை நீ அறிவாயா...

இந்த பூமி
உனக்கோ எனக்கோ மட்டும் இல்லை...
இயற்கையுனுடையது...
இங்கே எல்லோரும் வாழப்பிறந்திருக்கிறோம்..
எல்லோருக்குமானது இந்த பூமி...

மனிதனாக பிறந்தவன் எல்லாம் மனிதனாகிட முடியாது...
மனிதநேயம் இருந்தால் தான் மனிதன்...
என்ன சொன்னாலும்
உங்களுக்கு நேரும் வரை நீங்கள் உணரமாட்டீர்கள்...
உங்களிடம் பேசி என் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை...
நீங்கள் செய்யும் தவறை ஒரு காலமும் செய்யமாட்டேன்...
அப்புறம் உங்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்...
நீங்க செய்த தவறுக்கு காரணம் நீங்க மட்டும் தான்...
என் உயிர் போன்றது தான் உன் உயிரும்...
நான் பெறாத என் மழலை தானப்பா ..
உன் குழந்தை ...

நண்பா
நேரம் இல்லை ...
வா சீக்கிரம் அங்கே போகணும்.
அந்த இடமே சுடுகாடாய் ...
அவலங்களும்...அழுகைகளுமாய்...இரத்தமும் சதையுமாய்...என் உறவுகள்...துடிதுடிக்கும் உடல்கள்...ஐய்யோ...இந்த குழந்தைக்கு இறக்கும் வயதா..வெறியின் கோரத்திற்கு இரையாக வேண்டுமா...?
அம்மா என்ன இது கொடுமை...
நண்பா உடனே மருத்துவமனைக்கு
குழந்தைகளை கொண்டு செல்வோம்...

நீ அங்கே போய் பார்....

அம்மா
என்று ஒரு மழலையை அணைத்துக்கொண்டாள். அன்பிற்கு மொழி தேவையே இல்லை...
தூக்கிக் கொண்டு
வைத்தியசாலைக்கு ஓடினாள்...
வைத்தியரிடம் என் மகளை பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு மீண்டும் அவ்விடம் வந்தாள்...
தன் நண்பன் அவனுடைய தங்கையை சுமந்து வருகிறான்...
மீண்டும் ஒவ்வொரு மூலையும் சென்று தேட
ஏதார்ச்சையாக நண்பன் இருக்கும் திசை திரும்ப
நண்பன் ஒரு குழந்தையை தூக்கிக் கொண்டிருக்க
நண்பனை நோக்கி குறிவைத்தான் ஒருவன்...
நண்பனை நோக்கி கீழே குனி நண்பா என்று கத்தினேன்.
நண்பனும் கீழே குனிய ...
சத்தம் வரும் திசை பார்த்தான்...
வேகமாக அருகில் சென்று
துப்பாக்கியை பிடுங்கி விட்டேன்.நண்பனும் குழந்தையை தூக்கிக் கொண்டு அருகில் ஓடிவர
தன்னிடம் இருந்த இன்னொரு துப்பாக்கியால் சுட்டு விட்டான்.
நண்பன் கையை தட்டிவிட்டான்.
ஊரில் இருந்தவர்கள் ஒன்றாக வர ஓடிவிட்டான்.
நண்பா...சீக்கிரம் போ...
நீயும் வா ...
என்னால நடக்க முடியல நண்பா நீ போ...
என்று சொல்லிக்கொண்டே மயங்கிவிட்டாள்.
உடனே தன் இரண்டு மகள்களையும் தூக்கி கொண்டு வைத்தியசாலை அடைந்தான்.
பிரபா எழுந்திரு என்று எழுப்புகிறான்.
எழுந்துவிட்டாள் சிறிது நேரம் எடுத்து.
நண்பா ஏன் இங்கே இருக்கிறாய்..
சீக்கிரம் போய் எல்லோரையும் காப்பாத்து.
உனக்கு அடிபட்ருக்கு பிரபா...
என் உயிர் மட்டும் தான் உயிரா...
போ நண்பா..சீக்கிரம் போ...

மருத்துவமனையின்
பக்கத்து பெட்டில் ஒரு குழந்தை ...
தன் தாயின் மார்பை தேடி
மார்பில் வாய் வைத்து பால் குடிக்க
மாறாக
இறந்த அந்த தாயின் மார்பில் இருந்து ரத்தம் வழிகிறது...
குழந்தையை தூக்கி முத்தமிட்டு
தன் மார்பில் வைத்து பால் கொடுக்கிறாள். ஐந்து மாத குழந்தையின் தாயவள்.
தன் குழந்தையின் சிரிப்பை கேட்டுக்கொண்டே உறங்கிவிட்டாள்.


Close (X)

10 (5)
  

மேலே