எல்லோர் விழிகளிலும்

எல்லோர் விழிகளிலும்
வலிகளும்
வழிகளும்
இருக்கும்.....இன்பத்திலும்
துன்பத்திலும்
கண்ணீரின்
பிரசவம்.....ஆனாலும்
ஒருசில
உள்ளங்களில்
இனம்புரியாத
பரவசம்.....!!

நீ....சூடிய
பூச்சரம்
வாடிய
போதும்....என்னைத்
தேடும்
பூவாசம்.....இது
இவன்
வாங்கும்
சுவாசம்......!!

உன்
நேசம் தீராது
நான்
தேசங்கள்
கடந்தாலும்.....
கண்ணசைவில்
கண்டங்கள்
தாண்டுவேன்.....உனைக்
காணாதபோது
மண்ணைத்
தொட்டு
மாண்டுபோவேன்.....!!

தூதுபோன
தென்றலும்
நின்றே
போனது.....நீ
போனதிசை
புரியாமல்......
புதிர் போடும்
பெண்ணே......
என்னுயிர்
தொலைவதை
அறியாயோ....????

நீ..... நலமா
சுகமா.....நானறியேன்
உன்னை
மறந்து
நான் இல்லை.....
நான்
அறிவேன்.....!!

காற்றில்
கலந்திடும்
ராகம்
என்
சோகத்தையும்
கலைத்துவிடும்
என்று
இருந்தேன்.....என்னோ
இன்னும்
சோகத்தை
விதைத்துப்போனது
என்னுள்.....!!


  • எழுதியவர் : thampu
  • நாள் : 14-Sep-17, 4:14 am
  • சேர்த்தது : தம்பு
  • பார்வை : 173
  • Tanglish : ellor vizhikalilum
Close (X)

0 (0)
  

மேலே