உரையாடலின் உள்ளடக்கம்

​வைகறைப் பொழுதில்
நதிக்கரை யோரமாய்
வந்தமர்ந்த ​வாலிபங்கள் !
கூடிக்குலவிட அல்லாது
கூச்சலிலா இடமொன்றில்
ஆய்ந்தலசும் நெஞ்சங்கள் !

நகர்ந்திடும் தலைமுறை
தளர்ந்திடும் மூத்தோர்கள்
தகர்ந்திடும் பந்தப்பாசம்
மறந்திடும் உறவுமுறை
சிதைந்திடும் சமூகநீதி
மறைந்திடும் மனிதநேயம்
சீர்கெடும் சமுதாயம்
உள்ளங்களின் ஆக்கிரமிப்பு
உரையாடலின் உள்ளடக்கம் !

சிந்தனைகளின் சிறுதுளியும்
சிதறாமல் தேங்கிட்டால்
பகிர்ந்தளிக்கப் பயன்படும்
பயனாளிகளும் பெருகிடும்
வளர்கின்ற தலைமுறையும்
சிந்தித்து செயலாற்றும்
சீரழிவும் தடுக்கப்படும் !

எழுகின்ற எண்ணமும்
துளிர்விடும் விருப்பமும்
தூய்மையுடன் வாய்மையும்
பகுத்தறிவும் எழுத்தறிவும்
கலந்திட்ட நெஞ்சமானால்
நல்வழிப் பாதையில்
பயணங்கள் அமைந்திடும் !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (14-Sep-17, 7:41 am)
பார்வை : 189
மேலே