காலையின் கண்ணீர்

கீச்சிடும் அணில்களின் சத்தம். .
சோம்பலை பழித்து சிறகடிக்கும் பறவை..
வண்ணத்தை ஜாலமாக்கி அங்கும் இங்கும் திரியும் வண்ணத்துப்பூச்சி ..
கிழக்கை செந்நிறமாக்கி தகிப்பூட்டும் கதிரவன்..
பரபரப்பாய் மிதிவண்டியில் பயணப்படும் பால் கேன்.
உண்ட மயக்கம் தீராத சாம்பல் நிற பூனை..
எல்லாம் இயற்கையோடு இயைந்து போக நான் மட்டும் கண்ணீருடன் இந்த நாளை வரவேற்கிறேன்..
எனை இயக்கும் இயற்கை நீ இல்லாமல்..


Close (X)

5 (5)
  

மேலே