பெருமை இருவருக்கும் உண்டு

அத்தி பூத்தாற்போல
அரியதொரு புதுவரவு
பழங்கால பாட்டிபோல—அனைவரையும்
பாங்குடனே அரவனைப்பாள்
கதை சொல்லுவாள்
கற்பதற்குக் கைகொடுப்பாள்

பிறந்தபோது அழகாய்
பருத்து இருந்தவள்
வயது ஏற ஏற
உடல் மெலிந்துபோவது
வேண்டுதலா இல்லை
பருவக்கோளாறா!

இயற்கை படைத்த பெண்போல
அறிவியல் உருவாக்கிய மங்கையிவள்,
மணம் கண்ட பெண்ணுக்கு--நாளும்
மதிப்பு குறையும்,
மங்கையோ ஆண்டுதோறும் தன்னை
மெருகேற்றி மின்னுவாள்
மதிப்பு உயரும், விலையும் கூடும்

ஏற்ற இறக்கம்
எல்லாவற்றிலும் உண்டு
அறிவை பெருக்க உதவும் மங்கை
ஆசையை தூண்டிவிட்டு
அழிக்கவும் செய்திடுவாள்--ஆனால்
கற்பிப்பதில் கைதேர்ந்தவள்

காட்டு விலங்கையும் வட்டியில்
கட்டி எடுத்து வந்து
வீட்டில் ஓட வைப்பாள்,
விரல்களை ஆட்டுவித்து
உலகை சிறைபிடிப்பதை
கண் இனி காணும்

வேற்றுமை பார்க்காமல்
வாழும் ஆண், பெண் அனைவரின்
மடியிலும் தவழ்ந்திடுவாள்,
பாரத இளைஞர்கள் மேல்
பற்று காட்டுவதால்
பெருமை இருவருக்கும் உண்டு

எழுதியவர் : கோ. கணபதி. (14-Sep-17, 8:22 am)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 59

மேலே