முதல் நாள் பள்ளிக்கூடம்

தன் பழைய பள்ளிக்கூட நாட்களின் நினைவுகளோடு
மகனின்

புத்தக பையை
தோளில் சுமந்து சென்றாள் தாய்
தெரு முனை வரை !!

நினைவுகளில் சில
என்றும்
மறக்க முடியாதவை

அழுது அடம் பிடித்த முதல் நாள் .

வகுப்பறை நித்திரை

காற்றில் பறக்க விட்ட பட்டம்

மழை நீரில் விட்ட கப்பல்

மரத்தில் ஏறி விழுந்த நாட்கள்

சிறு காயங்கள்

சைக்கிள் பயணங்கள்

கணக்கு டீச்சர்

மார்கழி மாத சர்க்கரை பொங்கல்

இன்னும் எத்தனையோ

குழந்தையாய் மட்டும் இருந்திருந்தால்
அறுபது வயது வரை

வாழ்க்கை இனித்திருக்குமோ !!


Close (X)

0 (0)
  

மேலே