தத்துவ மின்னல்கள்

தத்துவ மின்னல்கள் !
கவிதை by : கவிஞர் பூ.சுப்ரமணியன்


உலகில்
தவறும் பொருளை
உரியவரிடம் கொடுத்தால்
தவறாமல்
நன்றி கூறுகிறோம் !

உலகில்
பலகோடி உயிர்களை
படைத்திட்ட
கடவுளுக்கு நன்றி
கூறாமல் இருக்கலாமா ?

உலகில்
உண்மை பேசி
நல்வாழ்வு வாழ்வதற்கு
சில நேரங்களில்
ஆபத்து வரலாம்
பயந்து விடாதே !

சில நேரங்களில்
சில மனிதர்களிடம்
உண்மை பொய்
இரண்டுமே பேசாமல்
மவுனமாக இருந்தால்
ஆபத்து விலகி விடும் !


உலகில்
பேச்சின் ஆற்றல் தீப்பொறி
புரிந்து கொண்டு
பேச்சைக் குறைத்து
நல்ல எண்ணங்களை
நம்மிடம் வளர்த்தால்
உலகமே உன் வசப்படும் !

உலகில்
ஒவ்வொரு உயிரும்
தன்னுயிர்போல்
நினைத்து வாழ்ந்தால்
நிம்மதி என்றும்
உன்னைத் தேடி வரும் !

பூ.. சுப்ரமணியன்,
பள்ளிக்கரணை சென்னை


Close (X)

4 (4)
  

மேலே