புறநானூறு 191

யாண்டு பலவாக நரையில வாகுதல்
யாங்கா கியரென வினவுதிராயின்
மாண்டவென் மனைவியொடு மக்களும் நிரம்பினர்
யான்கண் டனையர் என் இளையர்: வேந்தனும்
அல்லவை செய்யான் காக்கும் அதனதலை
ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர்
பலர் யான் வாழும் ஊரே

எழுதியவர் : (14-Sep-17, 12:17 pm)
பார்வை : 96

மேலே