அண்ணலும் நோக்கினாள் அவனும்,,,,,,,,

கல்லூரியில் ஆணும் பெண்ணும் நட்பு காதல் கொள்வது சரிதானா? என்று கேட்டமாத்திரம் எனக்கு நியாபகம் வந்தது 'அண்ணலும்நோக்கினாள் அவளும் நோக்கினான்' என்று கல்லூரியில் எடுக்கப்படும் காதல் பாட வரிகள்தான்,,,,,


ஆக, கல்லூரியில் பாடமாக எடுக்கப்படும் ஆண் பெண்ணுக்கான காதலை அந்த கல்லூரியிலேயே நடைமுறைப்படுத்துவது சரிதானா என்ற கேள்வி வியக்க வைக்கிறது,,,,

பெரியாரின் கனவு சுயமரியாதை திருமணங்களை தந்ததும்,,,சாதி மதங்களை தூக்கி எறிந்ததும் இந்த கல்லூரி காதல் தானே,,,,

கல்லூரியை பொறுத்தவரை செய்முறைக்கூடம் என்ற ஒன்று இருக்கும்,,,அங்கே தாங்கள் வகுப்பில் படித்த வேதியல், இயற்பியல், உயிரியல் பாடங்களை செயல் முறையில் செய்து பார்த்து புரிந்துகொள்வார்கள்,,,அது அவர்களுக்கு வாழ்நாள்முழுக்க கைகொடுக்கும் மறக்காது,,,,,அதே போன்றுதான் இதுவும்,,,,கல்லூரிக்காதல் வாழ்நாள் முழுக்க மறக்காது,,,,நட்பும் அதே போலத்தான்,,,நட்பாக இருந்து பின் காதலாக உருமாறினாலும் சரியே,,,,,


ஆக, கல்லூரியில் ஏற்படும் காதல் என்பது ஏற்கத்தக்கது தான், மற்ற இடங்களில் காதல் என்றபெயரில் அநாகரீகமான செயலை செய்வார்கள்,,,ஆனால் கல்லூரியில் படிக்கின்ற காதலர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்துகொண்ட எதிர்கால லட்சியங்களிலும் திட்டங்களிலும் ஒருவருக்கொருவர் பரஸ்பர துணையாகநின்று ஒரு தரமான உறுதியான அறிவார்ந்த காதலை கல்லூரி வளாகத்தில் மட்டும்தான் பார்க்க முடியும் என்பதோடு மட்டுமல்லாமல் அதற்க்கு பல தமிழ் சினிமாக்களையே உதாரணம்காட்ட முடியும்,,,,,பெரும்பாலான தமிழ் சினிமாக்கள் கல்லூரிக்காதல் கதைகளையே மையமாக வைத்து கல்லாக்கட்டி இருக்கிறார்கள் என்றால் அதற்க்கு என்ன பொருள்,,,,மக்கள் அதை பெருமளவு விரும்புகிறார்கள், வரவேற்கிறார்கள் என்றுதானே பொருள்,,,,,

ஆனால், அதே சமயம் தற்போது வரக்கூடிய சினிமாக்கள் ஒருபடிக்கீழே சென்று பள்ளிப்பருவ காதலை வெளிச்சம்போட்டு காட்டி பிஞ்சுமனங்களில் விஷயத்தை விதைக்கிறார்கள்,,,இது கண்டிக்கத்தக்கது,,,,கல்லூரி காதல் கதைகளுக்கும்,,,பள்ளி காதல் கதைகளுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது,,,,,

காதல் என்பது ஐந்து அடி கொண்ட நீச்சல் பயிற்சிக்கான குளம் போன்றது,,,,இதில் ஆறடி இளைஞர்கள் நீச்சல் அடிக்கலாம்,,,,சிறிது நேரம் ஓய்வுக்காக நிற்கவும் செய்யலாம்,,,,,ஆனால் 4 அடி பள்ளி மாணவர்கள் நீச்சல் அடித்துக்கொண்டே தான் இருக்கவேண்டும்,,,,ஓய்வெடுக்க நினைத்து காலூன்ற முயற்சித்தால் மூச்சையாகிவிடுவார்கள் என்பதை ஒவ்வொரு இயக்குனர்களும் கவனத்தில்கொண்டு அறிவார்ந்த காதல் கதைகளை மையமாக கொண்டு இனியாவது நல்ல சினிமாக்களை தரவேண்டும் என்ற வேண்டுகோளோடு நிறைவு செய்கிறேன்,,,எழுத்து.காம் க்கு நன்றி,,,,,,,

எழுதியவர் : (14-Sep-17, 12:38 pm)
சேர்த்தது : naasaa
பார்வை : 90

மேலே