நேற்று இருந்தவன்

நேற்று இருந்தவன் !

நேற்று இருந்தவன் இன்று
இல்லை,

நினைவுகள் என்றும் நிழற்படமாய்
உண்டும் உறங்கியும் ஒன்றாய்
இருந்தவன் எதிரியாய் போனாலும்
எதிரில் இருந்தான், இன்று
இல்லாமலே போனான். ஒன்றாய்
எதிரியாய் மாறிய காலம்
எல்லாம் நினைவுகளில் தோன்றும்
நிழற்படங்களாய் !

நேற்று இருந்தவன் இன்று
இல்லை.

இதில் நான் மட்டும்
என்ன விதி விலக்கா

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (14-Sep-17, 12:45 pm)
Tanglish : netru irundhavan
பார்வை : 123

மேலே