பேருந்து காதல்
எத்தனை முகங்கள் இருந்தாலும்
உன் முகம் மட்டும் காண
என் கண்கள் துடிக்குது
உன் சிறு புன்னகை கூட
என் இதயத்தை
காயப்படுத்தி விடுகிறது
உன் கூந்தல்
என்ன ஓசோன் படலமா
உன்னை அழகை மறைக்க
உன் உதடுகள் கூட
காதல் மொழி பேசுகிறது
என் இரண்டு காதுகள்
பத்தவில்லை உன் பேச்சை கேட்பதற்கு !!
என் கைகள் இரண்டும்
தாளம் போடுகிறது தன்னாலே
கால்கள் இருந்தும் நொண்டி ஆனேன்
நடக்க இயலாமல்
புவி ஈர்ப்பு விசை என்னவென்று புரிந்தது
உன்னை பார்த்ததால் தான்
பேருந்து பயணத்தில்
ஒலிக்கும் பாட்டை கேட்டு
உன் கம்மல் கூட ஆட்டம் போடுதடி
மனதை திருடி விட்டாய்
திருப்பி தந்து விடாதே
பேருந்து பயணம் தொடரட்டும்
என் இமை மூடும் வரை !!