சாரல் -- எண்சீர் விருத்தம்
சாரல் -- எண்சீர் விருத்தம்
சாரலாகித் துளித்துளியாய் மேனி தன்னைச்
------- சாந்தமாக்கும் விண்ணுலகத் தேனின் இன்பம் .
வாரங்கள் பலகழிந்தும் அணைத்துக் கொள்ளும்
-------- வானமங்கை பொழிகின்ற பூக்கள் எல்லாம்
தாரமாகி மன்னவனைத் தழுவிச் செல்லும்
-------- தாயாகிப் பால்மழையும் அமுத மாகும் .
பாரங்கள் ஏதுமின்றி நனைந்தே ஆடப்
-------- பாசமிகு நற்கருணை வியனாம் போற்றி !!
ஆக்கம் :- சரஸ்வதி பாஸ்கரன்