எங்கே இருக்கின்றாய்

நீ ஒருவள்(ன்) இல்லையென்று யார் யாரோ
கேலி செய்கிறார்கள் என்னை :(

உனக்காக மட்டுமே எனது உடலும் மனதும் அனைத்து
வலிகளையும் தாங்கி கொள்கிறது

நான் அவ்வளவு எளிதாக எதன் மீதும் ஆசை
கொள்ள மாட்டேன்

என்றாவது ஒருநாள் ஆசை பிறந்தாலும் என் மடியில் கிடைக்க
பல ஆண்டுகள் தேவைப்படும்...

இப்பொழுது தான் உன் மீது எனக்கு ஆசை பிறந்துள்ளது

இந்த ஒரு ஆசை மட்டுமாவது விரைவில் கிடைக்க
சீக்கிரம் வந்துவிடு

உனக்காக என் மனமும் இல்லமும் இடம் வைத்து
காத்து கொண்டிருக்கின்றது

எங்கே மறைந்து கொண்டு விளையாட்டு காட்டுகிறாய்
ஓடோடி வாஉன்னை ஆசைதீர கொஞ்சி மகிழ

எழுதியவர் : ஷோபனா (14-Sep-17, 9:59 pm)
சேர்த்தது : Shobana
Tanglish : engae irukkinraai
பார்வை : 156

மேலே