இங்கேது திராவிடம்
கேப்பையில் நெய்வழி கிறதென் றாரே
கேப்பவர் புத்தி மழுங்கிப் போனதா
அகத்தியன்சொன்னான் அன்றேத் தமிழர்
சுகமான வெகுளி நம்பிடும் வெகுளி
தெற்கு முழுதும் பறங்கியின் மதராஸ்
தெற்கில் தேசம் பத்தெனக் கண்டோம்
தெற்கில் சேரசோ ழபாண்டியும்
தெற்கில் பெரும்படை தென்தமிழ் வேந்தரே!
மொத்தத் தெற்கும் திராவிட மாம்கேள்
ஒத்திருக் காம்தமிழ் திராவிட எழுத்தை
பித்தனாய் சரித்திர ஆசிரி யனொருவன்
எத்தனாய் அலெக்சாந் தர்விளக் கியதாம்
ஒத்தன் எழுதிய தாலே
ஒத்தயெ ழுத்தால் திராவிட ராமோ?
--- ராஜ பழம் நீ (11-Sep-2017)