விழிப்பு வந்து திரும்ப உறங்கினேன்

எதுக்குத்தான் என் பிறந்த நாள் பரிசாக
இந்த "சேலை "யை வாங்கி தந்தாயோ !

பெரும்பாலான இரவுகள்
அதை உடுத்திக்கொண்டே உறங்கி
விடுகிறேன் !

நடு நிசியில் சட்டென்று விழிப்பு
வந்து ஆடை சரிசெய்து உறங்கி விடுகிறேன் !

நீதான் வந்துவிட்டாயோ என்று !

விழிப்பு வந்து திரும்ப உறங்கினேன்
என்று சொன்னதைத்தான் நீ !
நம்ப மறுக்கிறாய் !

எழுதியவர் : முபா (15-Sep-17, 5:23 pm)
பார்வை : 116

மேலே