ஒரு எழுத்தாளன் உருவாகிறான்

எழுத வேண்டும் என்ற ஆர்வமும், கற்பனையும் எப்போதும் எந்த நேரமும் எல்லோருக்கும் தோன்றுவதில்லை. காலமும் சந்தர்ப்பமும் தான் தூண்டுகிறது.

கணக்காளர் பட்டம் பெற்ற அறுபது வயதான ரவீந்திரன், பண முதலீடு செய்யும் நிறுவனம் ஒன்றில் மனேஜராக, நல்ல சம்பளத்திலும் சலுகைகளோடும் பல வருடங்கள் வேலை செய்துவருபவர்.. அவருக்கு அமைதியான குணமுள்ள அழகிய மனவி பவித்ரா. அவள் ஒரு அறிவியல் ஆசிரியை. எதையும் நேர்மறையாகச் சிந்திப்பவள்.

ரவீந்திரன் தம்பதிகளுக்கு இருப்பத்திரெண்டு வயதில் விஜயன் என்ற மகனும் இருபதுவயதில் விஜயா என்ற மகளும் இருந்தனர்.. ராஜேந்திரனுக்கு. ரவீந்திரன் மட்டுமே ஒரு மகன். அவர் சம்பாதித்த சொத்து ரவீந்திரனை அடைந்தது பெற்றோர் வாழ்ந்த “இந்திரபவனம்” என்ற முதுச வீட்டில், மனைவி இரு பிள்ளைகளோடும், தாயோடும் ரவீந்திரன் வாழ்வில் கவலை இல்லாமல் வாழ்ந்தார். வீட்டில் சமையலுக்கு ஒரு வேலைக்காரி. டிரைவரோடு உயர்ந்த ரக டொயோட்டா கார். பிள்ளைகள் இருவருக்கும் பாவிப்பதுக்கு தனியாகக் கார் வேறு. ரவீந்திரனின் மனைவி பவித்திராவோ புதுமையான போக்குள்ள ஆசிரியை. எளிமையான, ஆடம்பரம் இல்லாத வாழ்வை விரும்புபவள்... வாசிப்பது அவளின் பொழுது போக்கு. பல ஆங்கில தமிழ் நூல்களை அலுமாரியில் வைத்திருந்தாள். பிள்ளைகள் இருவரையும் வாசிக்க எவ்வளவோ அவள் சொல்லியும் அவர்கள் தாயைப் போல் சிரத்தை காட்டவில்லை. மகன் விஜயனுக்கு நண்பர்களோடு காரில் ஊர் சுற்றுவது விருப்பம். மகள் விஜயாவுக்கு சினேகிதிகளோடு சினமாவுக்கு போவதும்,. ஷோபிப்ங் போவதும் விருப்பம். இளைஜர்களோடு பழகுவதை அவள் பெரிதும் விரும்பினாள்

ரவீந்திரனின் பொழுது போக்கு நண்பரகளோடு பிரிட்ஜ்,. கோல்ப்பும் விளையாடுவது. மாலையில் வேலை முடிந்து வீடு வந்ததும் விஸ்கியை சுவைத்ததபடி டிவி பார்ப்பது. காலையில் பீச்சில் ஒரு’ மைல் தூரம் நண்பர்களோடு அரட்டை அடித்த படி நடப்பது. ஒரு போதும் தினசரி பத்திரிகையோ, அல்லது புத்தகங்களையோ அவர் வாசிப்பதில்லை.

ரவீந்திரனுக்கு கற்பனைக்கும் எழுத்துக்கும் வெகு தூரம்.. அனால் தினமும் டயரி எழுதுவதை தனது மறைந்த தந்தை ராஜேந்திரனிடம் இருந்து பழகியவர், பழைய’ டயரிகள் எல்லாம் கட்டுக் கட்டாக வைத்திருந்தார். சிலசமயம் பழைய சம்பாவத்தை நினைவூட்ட பழைய டயரிகளை எடுத்துப் பார்ப்பார். வாழக்கையில் ஏற்படும் சமபவங்கள் மனிதனில் மாற்றத்தைக் கொண்டு வரும்.

ஒரு நாள் தீடிரென்று அவரது எண்பது வயதுத் தாய் விசாலாட்சி காச்சல் என்று’ படுத்தவள் தான் அவள் எழும்பவே இல்லை. அந்த சம்பவம் தாயின் மேல் அதிக பாசம் வைத்திருந்த ரவீந்திரனுக்கு பெரும் கவலையைக் கொடுத்தது. தாயின் மறைவு பற்றிய விபரத்தை தன டயரியில் “ என்னை வளர்த்து ஆளாக்கிய என்அன்பு அம்மாவின் பிரிவை நான் எதிர்பார்க்கவில்லை. என்னை டேய் ரவி என்று அன்பாக கூப்பிட்ட ஒருத்த்தியும் எனை விட்டுப் போய்விட்டா”: என்று குறித்துக் கொண்டார்.
இந்த சம்பவம் நடந்து ஒரு மாதத்துக்குள் இன்னொரு சம்பவம் அவரைக் குலுக்கியது
மகன் விஜயன் ஹைவேயில் கார் ஒட்டி செல்லும்போது ஓரு லோரியாடு மோதி பெரும் விபத்தை’ சந்தித்தான். இரு கிழமைகள் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி இருந்தான். ஒரு காலை எடுக்கவேண்டும் என்று டாக்டர்கள் சொல்லி விட்டார்கள் ரவீந்திரனும்’ பவித்திராவும் அதை எதிர்பார்க்கவில்லை. மகன் முடமானது ரவீந்திரனுக்கு மனதில் ஒஎரும்’; தாக்கத்தை ஏற்பபித்து
ரவீந்திரன் அந்த சமபவத்தை தனது டயரில் எழுதினார் :” இது என் தவறு. நான் விஜயனுக்கு கார் வங்கிக் கொடுத்திருக்கக் கூடாது”
அந்த சம்பவத்தின் பின் நண்பர்களோடு ப்ரிட்ஜ விளையாடுவதை நிறுத்தி விட்டார். அவர்களோடு அதிகம் பேசுவதும் இல்லை.
விஜயனுக்கு கார் விபத்து நடந்து மூன்று மாதத்தில் ரவீன்திரன் வாழ்வில் இன்னொரு சம்பவம். அவரின் ஆசை மகள் விஜயாவை பெரிய இடத்தில டாக்டருக்கு திருமணம் செய்து கொடுக்க திட்டமிட்டிருந்தார். நடந்ததோ வேறு. விஜயா பெற்றோருக்கு சொல்லாமல் தான் காதலித்த பஞ்சாபி பையன் ஒருவனோடு ஓடிப்போய் விட்டாள்.
அடுத்து அடுத்து நடந்த மூன்று சம்பவங்கள் ரவீந்திரனில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தது.. நண்பர்களோடு வாக்கிங் போவதை நிறுத்தி விட்டார். தனது டயரியில் குறிப்பு எழுதினர்
“என் செல்ல மகளுக்கு நான் அதிக சுதந்திரம் கொடுத்து வளர்த்து விட்டேன். அது என் பிழை அவள் என்னை ஏமாற்றி விட்டாள்” .
கடவுளே என்னை மேலும் சோதிக்காதே. என்று தன் மனதுக்குள் சொல்லிக் கொண்டார். கடவுள் நம்பிக்கை இல்லாதவர் கோவிலுக்கு போகத் தொடங்கினார். பவித்ராவுக்கு கணவனின் போக்கில் ஏற்றப்பட்ட மாற்றதைக் கண்டு மனதுக்குள் சந்தோஷம். டிவி பார்ப்பதை நிறுத்தி விட்டார். யாரோடும் அதிகம் பேசுவதில்லை. ஒரு மூலையில் கதிரையில் அமர்ந்தவாறு சிந்தித்தபடியே இருப்பார். எது வாழ்வில் நடக்க வேண்டுமோ அது நடந்தே தீரும்.
******
அன்று கையில் ஒரு கடிதத்தோடு சோகமான முகத்தோடு வீட்டுக்கு வேலையில் இருந்து ரவீன்திரன் வந்தார்
அவரின் நிலை கண்டு பவித்திரா அவரைப் பார்த்து கேட்டாள் “ என்ன அத்தான் சோகத்தோடு கையில் கடிதத்தோடு வந்திருக்கிறீர்கள்?
“ கடவுள் என்னை இன்னும் சோதிக்கிறார். நான் வேலை செய்த கம்பனியை ஆதாயம் இல்லை என்பதால் மூடி விட்டார்கள். எனக்கு வேலை போய் விட்டது”: என்றார் கவலையோடு.
“ இந்த வேலை போனால் என்ன? உங்கள் அனுபவத்துக்கும் படிப்புக்கும் வேறு வேலை கிடைக்கும் தானே அத்தான். எங்களுக்கு இருக்கும் செல்வம் போதும் எங்கள் குடும்பம் வாழ. எனக்கு வேலை இருக்குது” என்று கணவனைத் தேற்றினாள் பவித்திரா.
“ முப்பது வருடங்கள் வேலைசெய்த 60 வயதான எனக்கு இனி யார் வேலை தரப் போகிறார்கள். .இனி என்ன வாழ்க்கை எனக்கு”? தன் டயரியில் எழுதினார் ரவீந்திரன்.
*****
ஒரு நாள் ரவீந்திரன் தனது பழைய டயரிகளைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்
“அப்படி என்ன அத்தான் டயரியில் பார்க்கிறீர்கள்”? பவித்ரா கணவனைக் கேட்டாள்
“ எல்லாம் நான் வாழ்ந்த கடந்த கால வாழ்க்கையும். இப்பொது என் நிலையையும் பற்றி யோசித்துக் கொண்டு இருக்கிறேன். என் அம்மா இன்னும் சில காலம் வாழ்ந்திருக்கலாம். எனது மகன் சிறு வயதிளேயே முடமாகிவிட்டான். என் ஆசை மகள் என்னை எம்மாற்றி விட்டுப் போய் விட்டாள். எனக்கு இருந்த நல்ல உத்தியோகமும் போய்விட்டது. இனி என்ன வாழ்க்கை என்று எனக்கு ஆகிவிட்டது பவித்திரா” என்றார் அலுப்போடு ரவீன்திரன்.
“ அத்தான். நான் ஓன்று சொல்லுகிறன் கேட்பியலா”?
:”:சொல்லு. அப்படி என்னத்தை சொல்ல வருகிறாய்”
“ பல வருடங்களாக டயரியில் உங்கள் வாழ்கையில் நடந்த சமபவங்களை குறித்து வைதிருக்கிறீர்கள்.. அவ்வாற்றை’ கருவாக வைத்து கற்பனையும் சேர்த்து சிறு கதைகள் எழுத தொடங்குகள். அது உங்களுக்கு மன நிம்மதியைத் தரும். நான் அக்கதைகளில் பிழைகள் இருந்தால் திருத்தித் தருகிறேன்.”
“நான் சிறு கதை எழுதுவதா?. எனக்கு அந்தத் திறமை உண்டா பவித்திரா”?
:”ஏன் உஉங்களுக்கு இல்லை?. போசிட்டிவ்வாக சிந்தியுங்கள். பல காலமாக டயரிகளில் குறிப்பு எழுதி வருகிறீர்களே. அந்த எழுதும் அனுபவம் போதும்” என்றாள் பவித்திரா.
“எத்தனையோ சம்பவங்கள் என் வாழ்கையில் நடந்திருக்கு எதை வைத்து எழுதுவது”?
“ஏன் உங்களின் மகள் ஒருவனோடு ஒடிப் போனதை கருவாக வைத்து கற்பனையும் கலந்து எழுதுங்கள். பெயரை விஜயா என்று மட்டும் எழுத வேண்டாம்”.,
“அப்ப என்ன பெயர் வைக்க”?
“ஏன் என்னை நீங்கள் திருமணம் செய்ய முன் நீங்கள் காதலித்த ஜமுனாவின் பெயரை வையுங்களேன். அவள் தான் இப்பொது திருமணமாகி அமெரிக்காவுக்குப் போய் விட்டாளே. அவளைப் பற்றிய முழு விபரமும்,. அவளை வர்ணித்து டயரியில் நிட்சயம் எழுதி இருப்பியளே” என்றாள் சிரித்தபடி பவித்திரா

“ நீ போல்லாதவள் அவளை நீ இன்னும் நீ மறக்கவில்லை..அது சரி என்ன தலைப்பு கதைக்கு வைப்பது”? என்று கேட்டார் ரவீன்திரன்
சில வினாடிகள் சிந்தித்து விட்டு ”ஒடிப்போய்விட்டாள்”: என்று வையுங்களேன். பொருத்தமாக இருக்கும்” பவித்திரா சொன்னாள்.
****
மனைவியின் ஆலோசனைக்கு பின். ரவீன்திரனின் முழு நேரமும் எழுதுவதில் இருந்தது. அவரின் மனக் கவலைகள் ஒடி மறைந்தது . நூல்கள் வாசிக்கத் தொடங்கினர். ஒரு பிரபல மாதாந்த சஞ்சிகை நடத்திய சிறு கதைப் போட்டியில் “ஒடிப்போய்விட்டாள்” சிறு கதைக்கு இரண்டாம் பரிசு’ 100௦ ரூபாய் கிடைத்தது. அகை அவர் எதிர்பர்கவிலை ரவீன்திரன் கவலைகள் மறந்து, ரவி என்ற புனைபெயரில் சிறு கதை எழுத்தாளனாக மாறினான்.

******




.

எழுதியவர் : பொன் குலேன்திரன் – கனடா (16-Sep-17, 5:45 am)
பார்வை : 152

மேலே