தொலைதூரம் சென்றாயே

தொலைதூரம் சென்றாயே
தொலைத்த பொருளை நியாபகபடுத்தினாயா
உனக்காக சாப்பாடு வேளையில்
காத்திருந்து காத்திருந்து
காலங்கள் சென்றதடி
உரத்த குரல் உரைக்கவில்லையே
எங்கே சென்றாயோ ?
காலம் ஓடிப் போனதே
கடல் கடந்த தேசம் சென்றாயோ
மலை கடந்து நின்றாயோ
ஒரு வார்த்தை பேசியிருக்கலாம்
என்ன கோவமோ ?
என்ன நியாயமோ
உனக்காக கேட்ட குரலெது
எல்லா உறைவிடமும் கேட்காத நாளிலையே
அழகாக இருப்பாயாக
அழகென்றால்
தோற்றம் அல்ல தோழியே
வாழ்க்கையை அழகாக வாழ்வாயாக
வாழ்க பல்லாண்டு

எழுதியவர் : கவிராஜா (16-Sep-17, 9:14 am)
பார்வை : 717
மேலே