ஓ மேகமே

உன்னை தொட்டுவிட
எத்தனிக்கும் இந்த
ஒற்றை மரத்தைபோலத்
தான் நானும்
உன்னை எப்போதும்
ரசித்துப் பார்க்கும்
என் கண்களும் !

ஓ மேகமே
என்று என்
கைகுட்டையாவாய் ...

ஓ மேகமே
என்று நான்
உன்னில் முகம்
புதைத்திடுவேன் ....

ஓ மேகமே
என்று உன்னை
என் கரங்கள்
தழுவிடுமோ ....

ஓ மேகமே
என்று என்
கையணைப்பில் தூங்கும்
தலையணையாவாய் ...

ஓ மேகமே
என்று என்
இதயத்தோடு ஒட்டிக்கொள்ளும்
டெட்டி பொம்மையாவாய் ...

ஓ மேகமே
என்று என்
மென் உதடுகள்
உனக்கு முத்தங்கள்
பதித்திடுமோ ...

ஓ மேகமே
என்று என்
காதல் கவிதைகளை
உன்னில் எழுதிடுவேன் ...

ஓ மேகமே
தூர மேகமே
ஓ மேகமே
வெகுதூரமிருக்கும்
குட்டி மேகமே
மெல்லகொஞ்சம் என்
அன்பில் இறங்கி
அருகில் வந்தாலென்ன ...

ஓ மேகமே
உன்னை மெத்தையாக்கி
உன்னில் புரண்டு
உன்னில் புதைந்து
தூங்கிடும் என்
பேராசை தீர்ப்பாயோ ...

ஓ மேகமே
நீயும் நானும்
வெட்கம் களைந்து
ஒன்றாக கலந்து
ஒரு கருப்பு வெள்ளை
ஓவியம் வரைந்திடுவோமா ...,
காலங்களெல்லாம் பேசிட
கண்ணிமைக்காமல் நாம்
காதலர்களாக உறைந்திடுவோமோ ...

ஓ மேகமே
வெள்ளையும் கருப்புமாய்
நீயும் நானும்
அங்கும் இங்கே
கனவுகள் கரைத்து
காதல் குழைத்து
வண்ணங்கள் கொண்ட
வானவிலாக மாறிவிடுமோ ....

வண்ணங்கள் எங்களுக்கு
வேண்டாம் என்று
கருப்பும் வெள்ளையுமாகவே
கரம் கோர்த்து
காதல் கொண்டு
கனவுகள் கோர்த்து
கவியில் லயித்து
அண்டம் மறந்து
அதிசய வரிகுதிரையாய்
ஒன்றாகத்தான் மாறி
ஒரு காட்டில்
மறைந்துடுவோமா ....

ஓ மேகமே
உன்னை தலையணை
என்றாவது ஆக்கி
தூங்கி கொள்ளட்டுமா ..

மயிலென தொகை
ஆட்டி ஆட்டி
அசைந்து போகுறியே
மனசை மனசையும்
பிசைந்து போகிறாய்
சிறுதுகள் என
இறகொன்று வீசி
சென்றாவது என்னை
ஆற்றுப்படுத்தி செல்வாயா

ஓ மேகமே
நான் காற்றோடு
சேர்த்து அனுப்பும்
என் மூச்சுக்காற்று
உன்னிடம் என்காதல்
சொல்லிப் போகிறதா...

ஓ மேகமே
நீ என்றாவது
கொஞ்சம் பரிதாபத்தோடும்
கொஞ்சம் நேசத்தோடும்
கவியென வீசிச்செல்லும்
மழைத்துளிககளில்
முத்தங்களில் வாழ்கிறது
முடிவுதெரியா என் ஜீவன் ...

ஓ மேகமே
ஓடுகிற மேகமே
வெட்கப்பட்டு தூர
ஓடுகிற மேகமே
என்று நின்று
என் காதலுக்கு
பதில் சொல்வாயோ ....

ஓ மேகமே
கீழே வர அனுமதி
உனக்கு இல்லை
என்றால் மேலுலகுக்கு
என்னை எடுத்து செல்
நான் அங்கு வந்து
ஒளிந்து கொள்கிறேன் ...

முழுநிலவுக்கு பின்
கொஞ்ச நேரம்
முழுஅழகி உன்
தோகைக்கு பின்
கொஞ்ச நேரம் என
வாழ்ந்து கொள்கிறேன் ....

இருக்கும் இடத்தைவிட்டு
இடம்பெயர முடியாமல்
இருக்கும் ஏக்கத்தை
இதயத்தில் விழுங்கி
இறுகியபடி வாழ்கிறேன்...

இறுக்கமாய் இருந்தாலும்
இளகிய மனம்கொண்ட
இறகுகள் இல்லாத
இந்த இமயமலை
இதயத்தின் ஆசைகளை
இயம்பி தானும்
இளங் காற்றிடம்
கொடுத்து அனுப்பிய
காதல் கடிதம்
தான் இது .
****************************************

நேசிக்கும் அவ்விரு இதயங்களுக்கு
வாசிக்கும் இவ்விரு விழிகளுக்கும்
இக்கவி சமர்ப்பணம்...

எழுதியவர் : சஹாயா சாரல்கள் (16-Sep-17, 5:45 pm)
Tanglish : o megame
பார்வை : 694

மேலே