கண்ணுக்கு கண்ணீர்

மண்ணை இரும்பாக்காதே
இரும்பை ஆயுதமாக்காதே
ஆயுதத்தால் உயிர்விடாதே

கல்லை சிலைளாக்கு அதில்
கல்லைப் பார்க்காதே அன்பு
கடவுளை மட்டும் பார்ப்பாய்

மெய்யை பொய்யாக்காதே
பொய்யை பூதமாக்காதே நீ
வஸ்திரமற்று வீதிவீதியாய்
சுற்றிச்சுற்றி சுயமிழக்காதே

கோபம்கொண்டு சாடாதே
மனஸ்தாபம் உருவாக்காதே
அன்னமாகும் நெல்லினை
பதற்றத்தில் பதறாக்காதே
பசிக்க புசிக்க இழக்காதே

நிலத்திற்கு தண்ணீர்
சொந்தமில்லை போல்
கண்ணுக்கு கண்ணீர்
சொந்தமாகிட க்கூடாது

மனதிற்கு மனம்தான்
ஆறுதல் கூறிட வேண்டும்
இனத்திற்கு இனம்தான்
உதவி புரிந்திட வேண்டும்
பூதங்கள் ஒன்றுக்கொன்று
உதவிக்கொள்வது போலவே

ஏய்ப்பதை மாய்ப்பதை விட்டு
வாய்ப்பதை வைத்து வாழவோம்
பூப்பதோர் நாள் காயாகலாம்
காய்ப்பதோர் நாள் கனியாகலாம்
கனியாலோர் நாள் பசியாறலாம்

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (17-Sep-17, 2:38 pm)
Tanglish : kannaku kanneer
பார்வை : 88

மேலே