விவசாயின் வாழ்க்கை

உழவு செய்ததும் விவசாயி
உறங்குவதில்லை...
பயிரிட்டதும் பசியைப் போக்கி
படுப்பதுமில்லை...
களையெடுத்துவிட்டு
கண்மூடுவதுமில்லை...
அயராது உழைத்து
அன்னத்தை அள்ளி தரும்
தொழிலே
வேளாண் தொழில்....

காலையில் பணி முடித்து
மாலையில் உறங்கும்
மாந்தர்களுக்கு இடையில்
விவசாயம் செய்யும் இவர்கள்
கொஞ்சம்
விசித்திரமானவர்கள் தான் போல...

பசுமை நிறைந்த பூமியை
பரிசளித்தவர் எவரோ?-ஆனால்
சாரல் மழைக்கு இங்கு-
சாமம் முழுதும் காத்து
வாழ்கின்றனர்
விவசாயி....

பயிரிடும் கரங்கள் ஒன்றும்
பணத்தை எதிர்நோக்கவில்லை
பஞ்சம் தீர்க்க ஏங்குகிறது...

உணவை தரும்
விவசாயின்
வாழ்க்கையை
உதிர வைக்கின்றனர்
அந்நியர் மனம் கொண்ட
இந்திய மனிதர்கள்....

சாரல் மழையில் நனைய
பயிர்களும்,
மழைநீர் கொட்டும் சப்தம் கேட்க
விவசாயும்,
பல மயில் தூரம் கடந்து வரும்
மழைத்துளிக்கு-தினமும்
கண்ணிர்துளிகளுடன்
வேளாண்மை தன்
உயிரைக் காக்க மன்றாடுகிறது...

காலங்கள் மாறின
கனவுகள் அடுக்கு மாடியே!-என
காண்கின்றனர்...
அறிந்தும் அறியாமல் போல்
ஆடிகிறான்
அழிவைத் தேடி....

என்று மாற்றம் உண்டாகுமோ????

எழுதியவர் : தீபிகாசுக்கிரியப்பன் (18-Sep-17, 6:44 pm)
பார்வை : 1664

மேலே