தெரசாவே வாழியவே

வெண்ணிறத்தில் ஆடைபோல் வெள்ளைமனம் கொண்டவராம்
கண்ணிறைந்த உலகத்திலே கருணைமழைப் பொழிபவராம்.
விண்ணகத்து மாரியென விரைந்துயிரைக் காப்பவராம் .
மண்ணுலகின் மாதாவாம் மாற்றமில்லை தெரசாவே !
எண்ணமெல்லாம் குழந்தைகளாம் ஏற்றத்தின் அன்னைக்கே .
வண்ணமிகு உயிர்தனையும் வாட்டமின்றிப் பேணிடுவார் .
உண்ணுதற்கும் உணவளிப்பார் உருவத்திலே மானிடராம்.
பண்ணுகளுமே பலபாடிப் பக்தியுடன் வணங்கிடுவேன் !

ஆக்கம் :- சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (18-Sep-17, 10:28 pm)
பார்வை : 85

மேலே