எம் ஜி ஆர்

ஆயிரம்
கைகளால் மறைக்க முடியாத
சூரியனை
இவன் இரண்டே இல்லை கொண்டு
தான் மறையும்வரை மறைத்தவன்
மக்களே என்று சொல்லிக்கொண்டே
தன இன்னுயிரை மரித்தவன்


சூரியனிடமிருந்து
பிரிந்து வந்த
சந்திரன்
எம் ஜி இராமச்சந்திரன்

இவனை அனைத்தது
மரணம்
ஏழைகளை நனைத்தது
மா ரணம்

அனைவரும்
பூக்களை நேசிக்கும் வயதில்
இவன் மட்டும்
மக்களைப்பற்றி
யோசித்துக்கொண்டிருந்தான்

அவைவரும் பேனாவில்
நீல மை ஊற்றி எழுத
இவன் மட்டும்
ஏழைகளின் நிலைமை
வறுமை வெறுமை ஊற்றி எழுதினான்

அன்று
தங்கம் மதிப்பு கூடியது
பொன்னால் அன்று
இவன் பிறந்த
பொன் நாள் அன்று

இவன்
கைகள் சற்றே குட்டையானது
ஏழை மக்கள்
கண்ணீர் துடைப்பதில்
கைக்குட்டையானது

அன்று
ஏழை மக்கள்
இறைவா எங்களை
காப்பது யார்
என்று வேண்டியபோது
பிறந்தவர் தான் எம் ஜி ஆர்


அனைவரும்
தாயின் கருவறையில் தோன்ற
இவன்மட்டும்
கோயில் கருவறையில் தோன்றியவன்

மக்கள் பணத்தை
கொள்ளை அடிப்போர்க்கு மத்தியில்
இவன் மக்கள்
மனத்தைக் கொள்ளையடித்தான்


இவன்
சூரிய கூட்டின் பெரிய பகல் அல்ல
வரியோன் வீட்டின் சிறிய அகல்

ஏழையின் அடி வயிற்று நெருப்பை
அணைக்க இவன்
முதலில் வந்ததனால் இவன் முதல்வன்

இவன்
ஏழைப் பிள்ளைகளின் மாமன்
இவனால் தமிழகம்
ஆனது மா மண்

கேட்போர்க்கோ உதவிகள் பண்ணவனே
தமிழகத்தை ஆண்ட மன்னவனே
அண்ணாவிற்குச் சின்னவனே
வடக்கே வியந்து பார்த்த தென்னவனே
ஏழைகளின் கண்ணவனே
மக்கள் பணியே உயிர் எனச் சொன்னவனே
நான் விரும்பும் என்னவனே
நேர்மைக்குமட்டும் தலைவணங்கி நின்னவனே
எங்களைவிட்டு என் ஆனாய் விண்ணவனே

தலைவா
வணங்குகின்றேன் என் தமிழை
வாழ்த்துகின்றேன் உன் புகழை

புதுவைக் குமார்

எழுதியவர் : குமார் (22-Sep-17, 7:59 am)
Tanglish : yem ji aar
பார்வை : 142

மேலே