உன்னால் பெண்ணே

இறந்தபின் நரகம் எப்படி இருக்கும்
என்று வாழும் போதே
அறிந்து கொண்டேன்
உன்னால் பெண்ணே

தேவைக்குப் பார்த்து
திகதி முடிந்ததும்
காலேண்டரைப்போல்
தூக்கி எரிந்து விட்டாள்...

அருந்தாத விஷம்தான்
உன் அன்பு

நீ விட்ட வார்த்தைகளால்
தாயிழந்த குழந்தையாய்
அழுகிற இதயத்தை
வந்து அணைத்துகொள்
இல்லையேல் அணைத்து கொல்.

எழுதியவர் : கஸ்டன் (23-Sep-17, 12:58 pm)
Tanglish : unnaal penne
பார்வை : 79

மேலே