என் உயிரினும் மேலான நெடுந்தொடர் - - - பாகம் 63

விடிந்த பொழுது கோலாகலமாக இருந்தது. எல்லா அணி வீரர்களும் ஒரே இடத்தில் கூடி இருந்தனர். ஏற்கனவே பலமுறை போட்டிகளில் விளையாடிய வீரர்கள் அணிகள் பேதமின்றி நட்பு பரிமாறிக்கொண்டனர். பல அணி வீரர்கள் நடப்பு சாம்பியன் கடலூர் அணி தான் மிக வலுவான அணி என்றும் அவர்களோடு வரும் போட்டியை எப்படி சந்தித்து வெற்றி பெற வேண்டும் என்பதை தான் மிக கவனமாக வரையறுப்பதாக கூறினர்.

ஆனால் கடலூர் அணியோ எந்த ஒரு சலனமும் இன்றி எங்களுக்கு மிகவும் டப் கொடுக்கப்போகும் அணி நெய்வேலி லிக்னைட் அண்ட் டால்மியா க்ரூப் , நாங்க அவங்களுக்கான ஸ்ட்ரைடெஜி தான் போட்டுட்டு இருக்கோம், முதல் ரவுண்டில் அவர்களோடு எங்களுக்கு ஆட்டங்கள் இல்லை, சோ, முதல் ரவுண்ட் எந்த பாதிப்பும் இருக்காது" என்று பிரவீன் ஓபனாக சொன்னது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

"இவன் எவ்ளோ ஓவர் கான்பிடெண்டா இருக்கான் பாரு" என்று பலர் வெளிப்படையாகவே பேசினர்.

"அவன் அப்டி பேசற டைப் தான், ஏன் னா அவன் அவ்ளோ டேலண்ட்டட், ரஞ்சி செலெக்ஷன் கு நாமினேட் ஆயிருக்கான் ன்னா சும்மாவா?" என்றனர் ஒரு சாரார்.

முதல் நாள் ஆட்டங்கள் முடிந்தன.

விழுப்புரம் அணி ஆடிய ஆட்டத்தில் மிகச்சுலபமாக மத்திய சென்னை அணியை வென்றது, டேவிட்டின் ஆட்டம் மிக அபாரமாக இருந்தது, என்ன ஒரு மாற்றம் விழுப்புரம் அணியிடம் இருந்தது. வடக்கு சென்னை, கோவை, நெய்வேலி, டால்மியா உள்ளிட்ட பலம் வாய்ந்த அணிகளே சற்று மிரண்டுவிட்டன. அப்படி ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினர் விழுப்புரம் அணி வீரர்கள். டேவிட் பேட்டிங்கிலும் சரி பவுலிங்கிலும் சரி, என்ன ஒரு வெறியான ஆட்டம், முபாரக் பிரவீனிடம் சொன்னான், "டேய், உன்னை பாக்கற மாதிரி இருக்கு டா, டேவிடோட பெர்பார்மன்ஸ்" என்றான்.

"ஒரு நல்ல பிளேயர் வளர்ரான் டா, சந்தோஷமான விஷயம், சூப்பர் கேம் டா" என்றான் பிரவீன்.

ஆட்டம் முடிந்து மாலையில் டேவிட் பிரவீன் சந்தித்தனர். "டேவிட், நீ இன்னிக்கு எங்ககூட டின்னர் சாப்பிடணும்" என்று அழைத்தான்.

"ஓ தாராளமா பிரவீன்" என்றான் டேவிட்.

"டேய் மச்சான், நெஜமாவே ஆச்சர்யமா இருக்கு டா, உன்கிட்ட அந்த ஈகோ ஆடிட்டுட் இல்லாம நார்மலா பாக்கறது ரொம்ப சந்தோசம் டா, நீ பின்னுக்கு சூப்பரா விளையாடின டா, இப்டியே நீங்க எல்லா மேட்ச் பெர்பார்ம் பண்ணினா இந்த வருஷம் கப் உங்களுக்கு தான்" என்றான் பிரவீன்.

முபாரக் மிகவும் ஆச்சர்யமும் அதிர்ச்சியும் ஆனான்.

"ஓகே டா, ஈவினிங் உன்னை வந்து பிக்கப் பண்ணிக்கறேன்" என்றான் பிரவீன்.

திரும்பும்போது முபாரக் கோபமாக கேட்டான் "டேய் என்னடா, என்னிக்குமே கப் நமக்குன்னு ஓவர் கான்பிடெண்டா பேசற நீ, இன்னிக்கு டேவிட் கிட்ட இந்த சேம் பெர்பார்மன்ஸ் குடுத்தா கப் அவங்களுக்கு தான் னு சொல்ற, என்னதான் அவங்க பெர்பார்மன்ஸ் சூப்பர் அவுட் ஷ்டாண்டிங்கா இருந்தாலும் நீ எப்படி டா நம்மள விட்டுட்டு கப் அவங்களுக்குன்னு சொல்லலாம், ஐ ஆம் நாட் கண்விண்ஸ்ட் டா, ஐ ஆம் ஹர்ட்," என்றான் முபாரக்.

"டேய், ஒரு நல்ல பிளேயர் இன்னொரு பிளேயர் அவுட் ஸ்தாண்டிங் பெர்பார்மன்ஸ் தரும்போது பாராட்டணும், இப்போ நான் அப்டி சொல்லிட்டதுனால கப் அவங்களுக்கு போய்டுமா, நான் இருக்கற வரைக்கும் எந்த டோர்னமெண்ட்டும் சாம்பியன் னு வந்தா அது கடலூர் தான் டா, இது தான் நான்" என்றபடி பைக்கை வீலிங் செய்தபடி வேகமாய் ஓட்டினான்.

"சரி இப்போ எங்கடா போற" என்றான் முபாரக்.

"சஸ்பென்ஸ், பேசாம வா" என்றான் பிரவீன்.

வண்டி நேராக ராஜராஜன் மோட்டார்ஸ் வாசலில் நின்றது.

"எதுக்கு டா ராஜராஜன் மோட்டர்ஸ்க்கு வந்துருக்க, என்ன விஷயம்?" என்றான் முபாரக்.

"டேய், விஜிக்கு ஒரு ஆக்டிவா இல்லனா பெப் ஆர்டர் பண்ணனும், பாவம் டெய்லி பாண்டி விழுப்புரம் பஸ் ல ரொம்ப நெரிசல் ல டிராவல் பண்ரா டா, சோ, அவளுக்கு ஒரு வண்டி வாங்கி அவளோட பர்த்டே இந்த மந்த் பிப்ட்டின் வருது இல்ல அப்போ கிப்ட் பண்ணனும் டா, காயத்ரிக்கு ஆல்ரெடி ஸ்கூட்டி பெப் இருக்கு, சோ, ரெண்டு பெரும் போகலாம் வண்டிலேயே, ரம்யாவும் சேம் கான்செர்ன் ல தான் வொர்க் பண்ண போறா, சோ இது அவங்களுக்கு ஈஸி ஆய்டும் டா" என்றான் பிரவீன்.

ஆச்சர்யமானான் முபாரக்.

"டேய் ஏது டா பணம்" என்றான் முபாரக்.

"விஜிக்காக கொஞ்சம் கொஞ்சமா செத்து வெச்ச பணம் டா, அது மட்டும் இல்ல, என் சாலரி ல எனக்கு ஏது டா அவ்ளோ செலவு? அது போக எல்லாம் என் அக்கவுண்ட்லயே தான் இருக்கு" என்றான் பிரவீன்.

"டேய் இந்த கிப்டுக்கு விஜி டிசேர்வா டா" என்றான் முபாரக்.

"டேய் என்ன டா, இப்டி சொல்ற, எல்லாம் தெரிஞ்சே நீ இப்டி பேசலாமா" என்றான் பிரவீன்.

"அது சரி டா, நீ தான் இன்னும் ப்ரபோஸ் பண்ணவே இல்லையே" என்றான் முபாரக்.

"இந்த வண்டி கிப்ட் குடுத்துட்டு கண்டிப்பா ப்ரபோஸ் பண்ணுவேன். நம்ம டோர்னமெண்ட் செகண்ட் ரவுண்ட் லாஸ்ட் டே தான் விஜி பர்த்டே, இங்கேஸ் நமக்கு அன்னிக்கு மேட்ச் இருந்தா விஜி வருவா, அன்னிக்கு அவளுக்கு பர்த்டே விஷ சொல்லிட்டு ப்ரபோஸ் பண்ணுவேன்" என்றான் பிரவீன்.

"ஆல் தி பெஸ்ட் டா, மேட்ச் ஜெயிச்சுருவோம், இதுல நீ ஜெயிக்கணும் டா, விஜி போல ஒரு நல்ல பொண்ணு நீ கல்யாணம் பண்ணிக்கணும், உன்னோட அம்மா அப்பா எல்லாருமே சொர்க்கத்துல இருந்து உன்னை வாழ்த்தட்டும், வா டா, செலெக்ட் பண்ணலாம்" என்றான் முபாரக்.

"எல்லத்தைவிட நீ ஒரு ஹெல்ப் பண்ணனும், நம்ம ஆர்.டீ.ஓ. ல ரெஜிஸ்டர் பண்ணும்போது "1504 " னு வண்டி நம்பர் வாங்கி தரணும், 15 தேதி நாலாம் மாசம், விஜியோட பிறந்த நாள் டா" என்றான் பிரவீன்.

"டேய் நீ எப்போ டா இப்டி எல்லாம் மாறின, ஆச்சர்யமா இருக்கு டா, அரை ட்ரவுசர் போட்டுக்கிட்டு சின்ன புள்ளையா எங்ககூட விளையாடின பிரவீன் இப்படி மாறி இருக்கான், எவ்ளோ வேகமா காலம் ஓடுது டா" என்றான் முபாரக்.

பிங்க் நிற ஸ்கூட்டி பெப் செலெக்ட் செய்து ஏப்ரல் பதினான்கு அன்னிக்கு இந்த அட்ரஸ் ல டெலிவரி பண்ணனும்" என்றான் பிரவீன்.

"முபாரக், யார்கிட்டயும் சொல்லாத, சஸ்பென்ஸா இருக்கட்டும்" என்றான் பிரவீன்.

"சரி டா, ஆனா இப்போ டேவிட் எதுக்கு பார்ட்டிக்கு?" என்றான் முபாரக்.

"இல்ல டா, அவனும் விஜியை சின்சியரா லவ் பண்ரான் னு அடிக்கடி விஜி கிட்ட சொல்லிட்டே இருக்கான், அவன்கிட்ட சொல்லணும் இல்ல அதான்" என்றான் பிரவீன்.

"டேய், லூசு, எதையாவது ஒளராத, அதெல்லாம் அவன்கிட்ட எதுவும் சொல்லவேணாம், மூடிட்டு இரு, ஆனா கூப்டுட்டே, ஜஸ்ட் ஆனந்த பவன் ல சாப்பிட்டு அவனை டிராப் பண்ணிடலாம், நேர என் வீட்டுக்கு விடு, வந்து=ஐயா அங்க போட்டுட்டு கார் எடுத்துட்டு வரலாம், நீ தான் நைட் ஹோட்டல் ல சாப்பிட மாட்ட, திரும்பி எங்க வீட்டுக்கு போய் அங்க சாப்பிட்டு வேண்டிய எடுத்துட்டு ரிட்டர்ன் ஆய்டு" என்றான் முபாரக்.

இதற்கிடையில், டேவிட் விஜிக்கு கால் செய்தான்.

"விஜி இன்னிக்கு நல்ல மேட்ச், என்னால முடிஞ்சா பெஸ்ட் பெர்பார்மன்ஸ் குடுத்தேன், வின் பண்ணிட்டோம், மேன் ஆப் தி மேச் விஜி" என்றான் டேவிட்.

"ம்ம்ம் ஆல் தி பெஸ்ட் டேவிட்" என்றாள் விஜி.

"பிரவீன் அண்ட் முபாரக்கே வந்து விஷ பண்ணாங்க, இப்டி பெர்பார்ம் பண்ணினா கப் எங்களுக்கு தான் னு பிரவீன் சொல்லிட்டு போனான்" என்றான் டேவிட்.

விஜிக்கும் ஆச்சர்யமாக இருந்தது. அதை மறைத்துக்கொண்டு "ஓ அவ்ளோ சூப்பர் பெர்பார்மன்ச்சா, நைஸ் டு ஹியர் டேவிட்" என்றாள் விஜி.

"ம்ம் நாளைக்கு கடலூர் மேட்ச் இருக்கு" என்றான் டேவிட்.

"தெரியும் டேவிட்" என்றாள் விஜி.

"இன்னிக்கு நைட் பிரவீன் அண்ட் முபாரக் என்னை டின்னர் க்கு கூப்ட்டிருக்காங்க" என்றான் டேவிட்.

"ஓஹோ வெறி குட், ப்ரெண்ட்ஸ் ஆயிட்டிங்களா" என்றாள் விஜி.

"எப்பவோ நாங்க ப்ரெண்ட்ஸ் ஆயிட்டோம் விஜி" என்றான் டேவிட்.

"சந்தோசம் டேவிட், ஓகே நான் அப்புறம் பேசறேன்" என்றாள் விஜி.

அடுத்து ப்ரவீனுக்கு போல் செய்தாள், " டேய் என்ன டா பெரிய இவனா நீ, எதுக்கு கப் டேவிட் கு ன்னு அவன்கிட்ட சொல்லி இருக்க, நீ தோத்துருவன்னு சொன்னா கூட எனக்கு பிடிக்காது" என்றாள் விஜி.

"அதுக்குள்ள அந்த டேவிட் போட்டு குடுத்துட்டானா, விஜி, சொன்னா தோத்துட்டேனா, அவனை என்கரேஜ் பண்ண தான் டா சொன்னேன்" என்றான் பிரவீன்.

"அதெல்லாம் ஒண்ணும் என்கரேஜ் பண்ணவேணாம், நீ ஜெய்க்கற, இதேபோல இன்னொரு வாட்டி ஏதாவது ஓவர் கான்பிடென்ட் டாக் பேசினேன்னு வேய், கொன்னுடுவேன் டா உன்னை" என்றாள் விஜி.

"உன்னோட கையால சாகறது சந்தோசம் தான டா எனக்கு, என்ன....செத்த அப்புறம் நீ என்னை உன்னோட மடில போட்டு நீ விடற ரெண்டு கண்ணீர் போதும் எனக்கு ஸ்ட்ரெய்ட் சொர்கம் தான், அது மட்டும் இல்ல, சொர்கத்தை தனியா பாக்கவேணாம், உன்னோட மடில உயிர் ponaa adhuve எனக்கு சொர்கம் தான்" என்றான் பிரவீன்.

"வாய மூடு டா, நேர்ல இல்லை நீ, இப்போ நேர்ல இருந்தன்னு வை, செவுள் திரும்பி இருக்கும்" என்றாள் விஜி.

"நீ கோவத்துல கூட எவ்ளோ அழகா பேசற தெரியுமா விஜி" என்றான் பிரவீன்.

"போதும், ரொம்ப ஐஸ் வெக்கவேணாம், மிஸ் யு டா, நாளைக்கு எத்தனை மணிக்கு மேட்ச்?" என்றாள் விஜி.

"நாளைக்கு ஆப்டர்நூன் 3 பி.எம். வரியா டா?" என்றான் பிரவீன்.

"ட்ரை பண்றேன் டா, வந்தா ரம்யாவோட வரேன்" என்றாள் விஜி.

"சரி டா, எக்ஸ்பெக்டிங் யு டுமாரோ, பை டா" என்றான் பிரவீன்.

"ம்ம்ம் மிஸ் யு எ லாட் டா, வெயிட்டிங் டு சி யு சூன் அகைன்" என்றாள் விஜி.

இரவு டேவிட்டுடன் ஒரு நல்ல சந்திப்பாக அமைந்தது.

மறுநாள் போட்டிக்காக டேவிட் ஆல் தி பெஸ்ட் சொன்னான்.

மறுநாள், விடியலில் ஆல் தி பெஸ்ட் மெசேஜ் அணைத்து அணி வீரர்களுக்கும் விஜி காயத்ரி இருவரும் அனுப்பி இருந்தனர்.

மதியம் இரண்டரை மணி இருக்கும்,

"என்ன டா பிரவீன், ஒரு மாதிரி டல்லா இருக்க" என்றான் விஜய்.

"இல்ல டா, விஜி வரேன் னு சொன்னா, பட் போன் இல்ல மெசேஜ் இல்ல, நான் கால் பண்ணினாலும் எடுக்கல" என்றான் பிரவீன்.

பேசிக்கொண்டிருக்கும்போதே விஜியும் ரம்யாவும் வந்தனர்.

பிரவீனின் முகத்தில் என்ன ஒரு பிரகாசம், "வா விஜி, என்ன போன் பண்ணினா எடுக்கல" என்றான் பிரவீன்.

"இல்ல டா, பஸ் ல ஒரே கூட்டம், பேக் ல இருந்த போன் சத்தம் கேக்கல, சாரி டா" என்றாள் விஜி.

"சாரி எல்லாம் எதுக்கு டா, வா, வா ரம்யா எப்படி இருக்க, எப்போ ஜாயின் பண்ற ஜாப் லே?" என்றான் பிரவீன்.

"ரிசல்ட்டுக்கு அப்பறம் தான்" என்றாள் ரம்யா.

"சரி, டேவிட்டும் மேட்ச் பாக்க வருவான், நீங்க அவனோட எங்க ட்ரெஸ்ஸிங் ரூம் ல இருந்து மேட்ச் பாருங்க" என்றான் பிரவீன்.

சற்று நேரத்தில் டேவிட் வந்தான்.

"ஹாய் பிரவீன், ஹை முபாரக்" என்று இருவரையும் கட்டி பிடித்து வாழ்த்து சொன்னான், பிறகு "ஹாய் விஜி, எப்படி இருக்க, ரம்யா...எப்படி இருக்க?" என்றான் டேவிட்.

"ம்ம், ஓகே டேவிட்,, ஓகே பிரவீன் நீங்க போய் உங்க வேலைய பாருங்க, நாங்க உங்க கேலரிக்கு போறோம்" என்றாள் விஜி.

சற்று நேரத்தில் டாஸ் போடப்பட்டது.

நெல்லை டாஸ் ஜெயித்து பேட்டிங் செய்தது.

முதல் பாதி ஆட்டத்தில் அந்த அணி இருபத்தி ஐந்து ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு நூற்றி எழுபத்தி ஆறு ரன்கள் எடுத்தது.

மிக சுலபமான வெற்றி இலக்கு, வெறும் ஒரே விக்கெட் இழப்பில் பதினெட்டு ஓவரிலேயே ஜெய்த்துவிட்டனர் கடலூர் அணி.

டேவிட் முதலில் உள்ளே வந்து பேட்டிங் செய்துவிட்டு வரும் பிரவீன் மற்றும் ரியாஸுக்கு கைகொடுத்து வாழ்த்து சொன்னான்.

சற்று நேரத்தில் டேவிட் சென்றுவிட, விஜி மற்றும் ரம்யா வந்து வாழ்த்து தெரிவித்தனர்.

"விஜி எப்படி நம்ம ஆட்டம்" என்றான் பிரவீன்.

"சூப்பர் டா" என்றாள் விஜி.

"சரி....விஜி, இப்போ எப்படி ரிட்டர்ன்?" என்றான் முபாரக்.

"பஸ் ல பொய்க்கறேன் அண்ணா, இப்போ எஸ்.எஸ்.டீ. வரும்," என்றாள் விஜி.

"ஓ, ஓகே ஓகே," என்றபடி போனை எடுத்தான் ரியாஸ், "டேய் சங்கர், ரியாஸ் பேசறேன் டா, உன்னோட பஸ் ல பர்ஸ்ட் சீட் ரெண்டு பேருக்கு போட்டுட்டு வா, இங்க போஸ்ட் ஆபீஸ் ல ரெண்டு பேர் நிக்கறாங்க, நான் ஏத்திவிட வரேன், நீ வண்டிய ஸ்டார்ட் பண்ணும்போது எனக்கு ஒரு போன்னே பண்ணு" என்றான் ரியாஸ்.

"அண்ணா...இப்டி எல்லாருமே என்னை கஷ்டப்படுத்தாம, கம்போர்ட் சோன்ல வெச்சுருக்கீங்களே, இப்டி இருந்தா இன்கேஸ் நீங்க இல்லாத டைம் ல நான் இந்த கஷ்டம் எல்லாம் பேஸ் பண்ண முடியாம கஷ்டப்படுவேன் அண்ணா" என்றாள் விஜி.

"நீ ஏன் அப்டி நெனைக்கற விஜி, நாங்க எப்பவுமே உனக்கு சப்போர்ட்டா உன் கூட இருப்போம், நாங்க ஏன் உங்கள விட்டு பிரியப்போறோம்?" என்றான் முபாரக்.

"ரொம்ப தேங்க்ஸ் அண்ணா" என்றாள் விஜி.

"சரி வாங்க சாப்பிடலாம்" என்றான் லெனின்.

"சோத்து பானை சாப்பாடு பத்தி பேச ஆரம்பிச்சுட்டான்" என்றான் விஜய்.

"ஆமாம் இவங்க எல்லாம் சாப்பிடாம தான் இருப்பாங்க" என்றான் லெனின்.

"அண்ணா, ஒரு சேஞ்சுக்கு வெளில அந்த கை ஏந்தி பவன் ல மசாலா பொறி சாப்பிடலாம் அண்ணா" என்றாள் ரம்யா.

"ரம்யா, ச்சீ, அன்ஹைஜினிக்" என்றாள் விஜி.

"என்ன அன்ஹைஜினிக், அதெல்லாம் இல்ல, அண்ணா ப்ளீஸ்" என்றாள் ரம்யா.

"ஓகே ஓகே, வாங்க நம்ம கை ஏந்தி பவன் போகவேண்டாம், நம்ம யூஷுவல் ராகவேந்திரா ஸ்நாக்ஸ் கு போகலாம்," என்றபடி போனை எடுத்து "சுரேஷ் அண்ணா, முபாரக் பேசறேன், பதினஞ்சு மசாலா பொறி, அப்புறம் ஒரு எட்டு பானி பூரி..."என்றபடி ஆர்டர் தர ஆரம்பித்தான் முபாரக்.

"ஓகே, டேய், விஜய், நீ என்ன பண்ற, கார எடுத்துக்கோ நீ, கார்த்திக், ஷாகுல், ரகு, ஹரி அஞ்சு பேரும் ராகவேந்திரா போங்க, வெற்றி கதிர், நீங்க உங்க வண்டி ல கிளம்புங்க, ஜோஸ்,மணி, நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க, மணி...ஜோஸ் வண்டில போ, லெனின் நீ ரியாஸ் கூட வா, ரம்யா நீ என்கூட வா, விஜி நீ பிரவீன் கூட வா, விஜய், நீ உன்னோட பைக் கீ குடு டா" என்றான் முபாரக்.

"கேச் இட்" என்றபடி சாவியை தூக்கிப்போட்டான் விஜய்.

வண்டிகள் ராகவேந்திரா ஸ்னாக்ஸ் நோக்கி பறந்தது.

முடிந்தபிறகு, எஸ்.எஸ்.டீ.பேருந்தில் ஏற்றிவிட்டான் ரியாஸ்.

"அக்கா, பிரவீன் சூப்பரா ஆடினார் இல்ல?" என்றாள் ரம்யா.

"அவன் எப்பவுமே சூப்பரா தான் டி ஆடுவான்" என்றாள் விஜி.

"நான் ரொம்ப நாள் கழிச்சு பாக்கறேன் இல்ல, அதான்" என்றாள் ரம்யா.

"ம்ம்ம், என்ன ரம்மி, எல்லா டைம்லயும் என்கூட வரேன் னு அடம்புடிக்க கூடாது, புரியுதா?" என்றாள் விஜி.

"என்னக்கா, நீ தான சொன்ன, நானும் உங்க க்ரூப் னு" என்றாள் ரம்யா.

"இல்ல டி, அடிக்கடி நீ இப்டி வர்றது அம்மாக்கு பிடிக்காது டி" என்றாள் விஜி.

"அது எப்படி, நீ மட்டும் அடிக்கடி பிரெண்ட்ஸை மீட் பண்ண வர, என்னை மட்டும் அம்மா திட்டுவாங்களா?" என்றாள் ரம்யா.

"இல்ல ரம்மி...நான் என்ன சொல்றேன் னா?" என்று முடிப்பதற்குள் "அக்கா, ப்ளீஸ் டாபிக் மாத்து" என்றாள் ரம்யா.

இவளுக்கு எப்படி நான் சொல்லி புரியவெப்பேன், சொன்னாலும் புரிஞ்சுப்பாளா? இக்கட்டான நெலமை ல இருக்கேனே, இப்பப்பாத்து இந்த காயத்ரி கூட இல்ல, என்ன பண்ணறது? என்று யோசித்தபடி மெளனமாக பயணித்தாள்.

ரம்யா பூமாக்கு கால் செய்தாள், "ஏய் கடலூர் டீம் வின் பண்ணிட்டாங்க டி சூப்பர் கேம்" என்றாள் ரம்யா.

"பிரவீன் கு ஆல் தி பெஸ்ட் சொல்லு டி" என்றாள் பூமா.

"பிரவீன் கு மட்டும் தான் ஆல் தி பெஸ்ட் சொல்லணுமா, இல்ல மொத்த டீம் கு சொல்லணுமா" என்றாள் ரம்யா.

"மொத்த டீமுக்கும் சொல்லு, ப்ரவீனுக்கு ஸ்பெஷலா சொல்லு" என்றாள் பூமா.

"ஓகே டி" என்றபடி போனை கட் செய்துவிட்டு ப்ரவீனுக்கு போன் செய்தாள் ரம்யா, "ஹலோ பிரவீன், பூமா உங்களுக்கு ஆல் தி பெஸ்ட் சொன்னா, மொத்த டீமுக்கும் சொன்னா, உங்களுக்கு ஸ்பெஷல் னு சொன்னா" என்று பேசிக்கொண்டிருக்கும்போதே பொறாமை தாங்காமல் போனை வெடுக்கென பிடுங்கி கட் செய்துவிட்டு "பேசாம வாடி, மூடிக்கிட்டு, ஆல் தி பெஸ்ட்டாம், ஆல் தி பெஸ்ட், இவ விஷ் பண்ணலேன்னா அவன் ஜெயிக்க மாட்டானா," என்று கோபமாக முணுமுணுத்தாள்.

"அக்கா, இது ரொம்ப ஓவர் அக்கா" என்றபடி ரம்யாவும் கோபமாக மெளனமாக வந்தாள்.

"ஏய் ரம்மி, சாரி டி, ரியலி சாரி, பஸ் ல கத்திட்டு வந்தியா அதான் டி, சாரி டி" என்று மன்னிப்பு கேட்டாள் விஜி.

"சரி சரி மன்னிச்சுட்டேன், வா" என்றாள் ரம்யா.

"எங்க சிறி பாப்போம்" என்றாள் விஜி.

அழகான ஸ்மைல் செய்தாள் ரம்யா.

பேருந்து வளவனூரில் நின்றது. இருவரும் இறங்கி வீட்டை நோக்கி நடந்தனர்.

பகுதி 63 முடிந்தது.

-----------------------தொடரும்-----------------------

எழுதியவர் : ஜெயராமன் (23-Sep-17, 10:36 pm)
பார்வை : 275

மேலே