என் உயிரினும் மேலான நெடுந்தொடர் - - - பாகம் 64

இரவு காயத்ரிக்கு போன் செய்தாள் விஜி.

"ஹலோ காயத்ரி, என்ன டி, ட்ரெயினிங் எப்படி இருக்கு டி? தனியா இருக்கியே, லாங்க்வேஜ் எல்லாம் பிரச்னையா இருக்கா, காவேரி பிரச்சனை தமிழ் ஆளுங்கள அடிக்கிறாங்கன்னு நியூஸ் ல போடறான், ஏதும் உனக்கு பிரச்சனை இல்லையே?" என்றாள் விஜி.

"இல்ல டி, அதெல்லாம் இங்க இல்ல, இன்னிக்கு மேட்ச் எப்படி இருந்துது, கடலூர் தானே வின்னிங் டீம்?" என்றாள் காயத்ரி.

"ஆமாம் டி, எக்ஸ்பெக்டேட் ரிசல்ட் தான், காயத்ரி...உன்கிட்ட கொஞ்சம் பேசணும் டி, ஆனா..." என்றாள் விஜி.

"என்ன டி ஆனா......சொல்லு" என்றாள் காயத்ரி.

"இரு ஒரு நிமிஷம், ரம்யா தூங்கிட்டாளான்னு பாக்கறேன்", லைன் ல இரு டி" என்றாள் விஜி.

"ம்ம் சரி சரி" என்றாள் காயத்ரி.

"தூங்கிட்டா..." என்றபடி திரும்ப பேச ஆரம்பித்தாள் விஜி.

"என்ன டி, என்ன இவ்ளோ அனீஸியா இருக்க?" என்றாள் காயத்ரி.

"இல்ல டி, எனக்கென்னமோ பிரவீனை ரொம்ப மிஸ் பண்றேன், அவனை பத்தியே தான் நெனச்சுட்டு இருக்கேன், ஏன் டி இப்படி ஒரு சென்டிமென்டல் டச் அவன்மேல...ஒண்ணுமே புரில டி......ஒவ்வொரு நாளும் நரகவேதனையா இருக்கு, அவன் என்னடான்னா என்கூடவே தான் இருக்கற மாதிரி ஒரு மாயை கிரியேட் பண்ணிட்டான், அவனை நான் லவ் பண்றேனா டி? அப்டியே நான் பண்ணினேன் னா அவன் எந்த மாதிரி ஆஸ்பெக்ட் ல பழகறான் னு தெரில டி, ஏதாவது தப்பா நான் பெர்செப்ட் பண்ணிட்டு அவன்கிட்ட பேசிட்டா அவன் எப்படி எடுத்துப்பான், ஒண்ணுமே புரில டி, அழுகை அழுகையா வருது, இதுல இப்போ ரம்யா வேற என் கூடவே இருக்கா, எல்லா மேட்சும் பாக்க வரா, பிரவீன் கூட என்னால தனிமை ல பேச வாய்ப்புகள் கம்மி ஆயிட்டே இருக்கு டி, அவன்கூட ஒரு பத்து பேர் எப்பவும் இருக்காங்க, என்கூட இந்த ரம்யா.....இதுல அந்த டேவிட் வேற எல்லா மேட்சையும் பாக்க வந்துடுவான் போல இருக்கு, ஒரு விஷயம் டி, அவனை என்னால விட்டுட்டு தனியா என் வாழ்க்கை நெனச்சுக்கூட பாக்க முடில, இப்போ என் அப்பா, அம்மா, ரம்யா, நீ, எல்லோராவிட அவன் தான் முக்கியம் னு தோணுது டி, ஆனா இந்த முடிவு தப்பா போனா...பிரவீன் என்னை லவ் பன்ரானான்னு தெரில டி....என்ன பண்றது.....யார்கிட்டயாவது சொல்லி ஓன்னு அழணும் போல இருக்கு" என்றாள் விஜி.

"என்ன டி சொல்ற, யு மீன் நீ பிரவீனை லவ் பண்றியா...தெளிவா பேசு டி...மொதல்ல நீ ஒரு முடிவுக்கு வா, அப்புறம் பிரவீன் முடிவை பத்தி யோசிக்கலாம்,தெளிவா பேசு விஜி" என்றாள் காயத்ரி.

"தெரியல டி, இது லவ் ஆஹ், ப்ரெண்ட்ஷிப்ப்பா...என்ன எழவுன்னு தெரியல, ஒண்ணு மட்டும் உண்மை டி, எனக்கு பிரவீனை விட்டு பிரிஞ்சுடுவேனோன்னு ஒரு பயம் வர ஆரம்பிச்சுருச்சு டி, நைட் தூக்கமே வரல டி, பைத்தியக்காரி மாதிரி உக்காந்துட்டு இருக்கேன், ஆனா அவன் என்னடான்னா கேர் எடுத்துக்கறான், எனக்காக எல்லாம் பண்ரான், என்னோட சந்தோசம் தான் அவன் சந்தோசம் னு எல்லாம் சொல்றான், ஆனா லவ் பண்ணறானான்னு என்னால கெஸ் பண்ண முடில டி" என்றாள் விஜி.

"சரி விஜி, ரொம்ப கொழப்பிக்காத, நான் வந்துடறேன், இரு, என்னோட ட்ரெயினிங் ஒரு மாசம் ல இருந்து கம்மி பண்ணிருக்காங்க, ட்யூ டு காவேரி ப்ராப்ளேம், சோ நான் 24 அங்க வந்துடுவேன். அப்புறம் இதப்பத்தி பேசலாம், பட் நீ உன்னை க்ளியரா தயார் படுத்திக்கோ, கரெக்ட்டா டிசைட் பண்ணு" என்றாள் காயத்ரி.

"தெரில டி, இப்பவே நான் அழுதுட்டு தான் இருக்கேன், எங்க வீட்ல என்ன சொல்ல போறாங்க எனக்கு எந்த நெனப்புமே இல்ல டி, பிரவீன் கூட இருக்கணும், அவன் என்னை உயிரா நெனைக்கறான், நானும் அவனை உயிரா நினைக்கறேன், அவ்ளோ தான் எனக்கு தோணுது, எனக்கு இந்த உலகத்துலயே முக்கியமான ஆட்கள் என்னோட அப்பா, அம்மா, ரம்மி தான், ஆனா இப்போ ப்ரவீனும் தான் டி, என் குடும்பம் ஒரு கண்ணுன்னா அவன் இன்னொரு கண்ணா இருக்கான் டி, ஒண்ணுமே புரில, நீ சொல்லிட்டு இருந்த அதே சிச்சுவேஷன் ல தான் நான் இருக்கேன், செத்துடலாம் னு தோணுது" என்றாள் விஜி.

"ஏய் விஜி, என்ன பேசற நீ, உன்னோட நல்ல மனசுக்கு நீ நெனச்சது போலவே எல்லாம் நல்லதா நடக்கும் டி, நீ முதல்ல குழப்பத்துலேந்து வெளில வா, முடிவு பண்ணு, இது உன்னோட வாழ்க்கை, என்ன ன்னு டிசைட் பண்ணு, எனக்கு நாளைல இருந்து சைட் ஒர்க், தார்வாட் கிட்ட ஏதோ ஒரு வில்லேஜ்ல பெரிய பிளான்ட் ல, சோ மொபைல் நெட்ஒர்க் பத்தி தெரில, லேண்ட் லைன் தான் இருக்கும் னு சொல்லிருக்காங்க, சோ நான் உன்னை காண்டாக்ட் பண்றேன், ஓகே? மனச போட்டு கொழப்பிக்காம தூங்கு" என்றாள் காயத்ரி.

"சரி டி, உன்னை டிஸ்டர்ப் பண்றத நினைக்காத காயத்ரி" என்றாள் விஜி.

"விஜி, இப்டி லூசு மாதிரி ஏதாவது பேசாத, நீ என் பிரென்ட் டி, அப்டி எல்லாம் நான் நினைக்கல, ஓகே, நீ சமத்தா இப்போ தூங்கு, குட் நைட்" என்றாள் காயத்ரி.

"காயத்ரி...நாம இப்போ பேசினதை நீ முபாரக் பிரவீன் நர்கீஸ் யார்கிட்டயும் சொல்லிடாத, ப்ளீஸ்" என்றாள் விஜி.

"சொல்லமாட்டேன் டி, எனக்கு தெரியும்" என்றாள் காயத்ரி.

"ம்ம்ம், சரி டி, குட் நைட்' என்று சொல்லி போனை கட் செய்தாள் விஜி.

இந்த சார்ஜ் வேற உயிரை எடுக்குது என்றபடி ரம்யா போட்டு வைத்திருந்த கனெக்டரை எடுத்துவிட்டு தனது மொபைலை சார்ஜில் போட்டாள் விஜி. இவளுக்கு மொதல்ல சார்ஜர் வாங்கிட்டு வரணும் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டாள்.

உறக்கம் வரவில்லை, புரண்டு புரண்டு படுத்தாள் விஜி. அப்போது தான் நினைவுக்கு வந்தது, கழுத்தில் இருந்து பிரவீன்-விஜி என்ற டாலர் போட்ட சங்கிலியை அவிழ்த்து வைக்கவே இல்லை என்று, இனி இதை போடவேண்டாம், ரம்யா கூட இருப்பாள், பார்த்தால் தவறாக எண்ணுவாள், என்று நினைத்தபடியே அதை கழற்றி அதற்க்கு ஒரு முத்தமிட்டு தனது ஹேண்ட் பேக்கில் ஒரு சிறிய டப்பாவில் வைத்தாள் விஜி.

விடிய விடிய தூங்காமல் தவித்தாள் விஜி.

என் மனம் ஏன் இப்படி போராடுகிறது, ஏன் என்னால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. என்னென்னவோ மனம் எண்ணியது. விடிந்தும் விட்டது பொழுது. ஒரு நொடி கூட உறங்காமல் படுக்கையில் இருந்து எழுந்து வந்தாள் விஜி. கண்கள் சிவந்து உறங்கவில்லை என்று வெளிச்சம் போட்டு காட்டியது.

"என்ன விஜி, சரியா தூங்கலையா, கண்ணு ஏன் செவந்திருக்கு" என்றாள் புவனா.

"ஒண்ணும் இல்லம்மா, இந்த சிஸ்டம் மானிடர் பாத்துட்டே வேலை செய்யறோம் இல்ல அதான், கண்ணு டெஸ்ட் பண்ணனும்" சமாளித்தாள் விஜி.

"அதுனால தான் நான் காமர்ஸ் படிச்சேன், ஆனாலும் தலை விதி, கம்ப்யுட்டர் இல்லாம இன்னிக்கு எந்த வேலையும் இல்லையே, பட் உன்னோட அளவுக்கு கம்ப்யுட்டர் பாக்க வேணாம்" என்றாள் ரம்யா.

விஜி தான் என்ன செய்கிறோம் என்ற கட்டுப்பாடே இல்லாமல் போனாள்.

ஏப்ரல் 12 வரையிலான முதல் சுற்று ஆட்டங்கள் அனைத்தும் முடிந்தன. அணைத்து கடலூர் ஆட்டங்களை விடாமல் சென்று பார்ப்பதும் இரவில் குழம்பி தவித்து உறக்கமற்று இருப்பதுமாய் விஜியின் வாழ்க்கை ஆனது.

கடைசி ஆட்டம் முடிந்ததும் பிரவீன் விஜியிடம் கேட்டான், "விஜி என்ன உன்னோட கண் எல்லாம் இவ்ளோ ரெட் ஆஹ் இருக்கு, சரியா தூங்கறது இல்லையா" என்றான்.

"இல்ல டா, சிஸ்டம்ஸ் ல வேலை செய்யறேன் இல்ல அதான்" என்றாள் விஜி.

"இதை எவனாவது பட்டிக்காட்டான் கிட்ட சொல்லு, சிஸ்டம்ஸ் ல வேலை செஞ்சா கண்ணு ரெட் ஆகாது, இப்டி ஸ்வெல் ஆகாது கண்ணுக்கு கீழ, இது பிராபரா தூக்கம் இல்லாதவங்களுக்கு தான் இப்டி ஆகும் ஏன் பொய் சொல்ற?" என்றான் பிரவீன்.

அமைதியாய் இருந்தாள் விஜி. ஆனால் அவள் மனமோ, "பிரவீன் கண்கள் எல்லாம் ரெட் ஆஹ் இல்ல, சோ அவன் நார்மலா தூங்கறான், என்னை மாதிரி தவிக்கல, நான் மட்டும் ஏன் இப்படி என்னையும் கொழப்பிக்கிட்டு என் உடம்ப வருத்திக்கறேன், பேசாம சொல்லிடலாமா" என்று எண்ணியது.

"சரி சரி, ப்ராபெரா தூங்கு டா, உன் ஹெல்த் தான் டா முக்கியம், ஓகே? ப்ராபெரா நைட் தூங்கலைன்னா நெறையா ப்ராப்ளேம் வரும், எஸ்பெஷாலி லேடிஸ்க்கு டயாபெட்டீஸ், ஹார்ட் ப்ராப்ளேம், அனீமியா, இம்பேலன்ஸ், பி.பி., இர்ரெகுலர் பீரியட்ஸ், செகண்டரி அமேனோரியா எல்லாம் வரும், இது லைப் த்ரெட்டேன் டா" என்றான் பிரவீன்.

ஏற்கனவே என் லைப் த்ரெட் ல தான் டா இருக்கு என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டாள் விஜி.

"சொல்ல மறந்துட்டேன் பிரவீன், நாளைக்கு எனக்கு சென்னை மெய்ன் ஆபீஸ் ல ஒரு மீட்டிங், சோ நாளான்னிக்கு மார்னிங் தான் வருவேன், கால் பண்ண முடியுமா தெரில, என்ன எதுன்னு மெசேஜ் பண்றேன்" என்று சொல்லிவிட்டு கிளம்பினாள் விஜி.

"பட் நல்லா ரெஸ்ட் எடு விஜி" என்றான் பிரவீன்.

"ம்ம்ம், ட்ரை பண்றேன்" என்றாள் விஜி.

சிரித்துக்கொண்டான் பிரவீன்.

மறுநாள் விஜியிடம் இருந்து பகல் முழுதும் எந்த அழைப்பும் இல்லை, இரண்டாம் சுற்று தொடங்கி இருந்ததால் ஒரு அணி இரண்டு ஆட்டங்களை ஒரே நாளில் ஆடும் விதம் அமைந்திருந்தது மேட்ச் கார்ட்.

இரவு பதினோரு மணிக்கு கால் செய்தாள் விஜி.

"என்ன பிரவீன், தூங்கிட்டியா, டிஸ்டர்ப் பண்ணிட்டேனா" என்றாள் விஜி.

"ச்ச ச்ச, அப்டி எல்லாம் இல்ல, இன்னும் தூங்கவே இல்ல, கொஞ்சம் வேலை இருந்துச்சு, சொல்லு டா, மீட்டிங் எப்படி போச்சு?" என்றான் பிரவீன்.

"ம்ம்ம்ம் ஓகே, மேட்ச் எப்படி போச்சு சொல்லு டா" என்றாள் விஜி.

"என்ன நீ இல்லாத குறை தான், ரம்யா வந்து பாத்தா, முபாரக் தான் அட்வைஸ் பண்ணினான், இப்டி எல்லாம் சொல்லாம தனியா எல்லாம் வரக்கூடாதுன்னு, சொல்லி இருந்தா நாங்க அந்த ரூட்ல வர்ற பஸ் ல சீட் போட்டு பத்திரமா கூட்டிட்டு வருவோம் னு கோச்சுக்கிட்டான், அப்புறம் என்ன, உன் தங்கை சாரி கேட்டா, எட்டு மணிக்கு சேம் எஸ்.எஸ்.டீ ல தான் ஏத்தி விட்டோம்" என்றான் பிரவீன்.

"ம்ம்ம், என்கிட்டே சொல்லிட்டு தான் வந்தா, நான் வேணாம் னு தான் சொன்னேன், பட் அடம்புடிச்சா, அதான் சரி பொண்ணு சொன்னேன், பாவம் அவளுக்கும் என்ன என்டேர்டைன்மெண்ட் இருக்கு, அது இருக்கட்டும், மேட்ச் என்ன ஆச்சு, சொல்லவே இல்ல," என்றாள் விஜி.

"இன்னிக்கு எங்களுக்கு 2 மேட்ச், டேவிடுக்கும் ரெண்டு மேட்ச், கலக்கிட்டோம், எங்க மேட்ச் விட விழுப்புரம் மேட்ச் தான் அனல் பறந்துச்சு, டேவிட் அண்ட் டீம் செம்மயா வெளயாடுறாங்க, நல்லா டப் குடுப்பாங்க போல" என்றான் பிரவீன்.

"டேய், ஆனா நீங்க தான் ஜெயிக்கணும் டா" என்றல் விஜி.

"பாக்கலாம், பட் நாட் கன்பார்ம்" என்று விஜியின் ஆஸ்தான டயலாக்கை கூறி சிரித்தான் பிரவீன்.

"அய்ய....ஜோக்கு, ச்சீ ப்ப....டுபுக்கு" என்றாள் விஜி.

"என்ன விஜி, சென்னை போய் ஒரே நாள் ல டுபுக்குன்னு எல்லாம் பேசற?" என்றான் பிரவீன்.

"சும்மா பேசி பாத்தேன் டா" என்றாள் விஜி.

"சரி சாப்டியா டா" என்றான் பிரவீன்.

"ம்ம்ம், சாப்பிட்டேன், நீ?" என்றாள் விஜி.

"சாப்பிட்டேன் டா, சரி எப்போ கெளம்பர?" என்றான் பிரவீன்.

"எர்லி மார்னிங் பர்ஸ்ட் பஸ் ல" என்றாள் விஜி.

"சரி சரி வா, வி ஆர் வெயிட்டிங்" என்றான் பிரவீன்.

"சரி டா, குட் நைட், தூங்கு" என்றாள் விஜி.

"நான் தூங்கறது இருக்கட்டும், நீ நல்லா தூங்கு, புரியுதா" என்றான் பிரவீன்.

சிரித்துக்கொண்டே "சரி டா செல்லம், மிஸ் யூ டா" என்றாள் விஜி.

"மிஸ் யு டூ செல்ல பாப்பா, தூங்கு, நாளைக்கு டிராவல் வேற இருக்கு" என்று கூறிவிட்டு கட் செய்தான் பிரவீன்.

மனசுக்குள் நினைத்துக்கொண்டாள் விஜி, நாளன்னிக்கு என் பர்த்டே, எப்படி இருந்தாலும் அவன்கிட்ட அன்னிக்கு ப்ரபோஸ் பண்ணிடனும், இதுக்கு மேல என் இதயத்தால் இந்த பாரத தாங்கற சக்தி இல்ல என்று மனதிற்குள் முடிவெடுத்துக்கொண்டாள்.

பல நாட்களுக்கு பிறகு அன்று இரவு நல்ல உறக்கம் இருந்தது விஜிக்கு.

பகுதி 64 முடிந்தது.

-----------------------தொடரும்-----------------------

எழுதியவர் : ஜெயராமன் (24-Sep-17, 12:06 am)
பார்வை : 231

மேலே