கடமை கணினி கட்டுப்பாடு

கடமை கணினி கட்டுப்பாடு

கணினிகள் நம்மை ஆட்கொண்டு பலஆண்டுகள் ஆகின்றன.இன்று நாம் கைபேசியும் கணினியும் இல்லாமல் வாழ்வது சாத்தியமா என்ற நிலைக்குத் தள்ள பட்டிருக்கிறோம்.
ஆண்டு 2020 கணினியை அடிப்படையாகக் கொண்டு அமைத்த நகரம் ஒன்று. அதில் நகரத்தின் எல்லா வகையான முக்கிய பணிகளும் கணினி வழியாக செய்யும் திறனுடன் அமைக்க பட்டிருந்தது.
அடிப்படை சேவைகள்யாவும் மத்திய கணினி மையத்தில் ஒன்றாக்கி,அங்கு கடும் காவலும் விடப்பட்டிருந்தது. நகரத்தின் எல்லா பகுதிகளையும் கண்காணிக்க புகைப்பட கருவிகளும்,அதிலிருந்து வரும் படங்களை உடனுக்குடன் செய்தியாக பதிவு செய்து மத்திய கணினிக்கு அனுப்பும் திறணார்வும் அமைத்து,அந்த செய்திகள் மூலம் நகரம் நல்ல நிலையில் இயங்குவதை அதிகாரிகளுக்கு
கைகணினியில் தெரிவித்து நகரம் எவ்வித தடையும் இல்லாமல் இயங்குவதை காண வழிவகுக்க பட்டிருந்தது.
உலகத்தில் அணைத்து நகரங்களிலும் தொழில் நுட்பமும் ,
மென்பொருளும் ஒன்றாகசேர்ந்து படைக்கப்பட்ட முதல் நகரமாக பறைசாற்றப் பெற்று விளங்கியது. இந்நகரத்தை வெல்ல யாராலும் முடியாது என குறிப்பிட்டு ,இம்மாதிரி நகரம் உங்களுக்கு வேண்டுமா அணுகவும் என ஒரு தொலைபேசி எண்ணையும் கொடுத்து வைத்திருந்தது.
உலகத்து எல்லா நாடுகளும் தங்கள் நாட்டிலும் ஒரு நகரம் இவ்வாறு அமைக்க படவேண்டும் என என முடிவு செய்தன.
இனி இந்நகரம் எவ்வாறு செயல் படுகிறது அதன் முக்கிய அம்சங்களை ஆராய்வோம்.
தண்ணீர் தேவைகளை வீட்டில் இருக்கும் நபர்களை வைத்து கணக்கெடுத்து எல்லோருக்கும் வேண்டிய அளவு சென்றடைய விநியோகிக்கும் பாங்கும்,மின்சாரத்தை கணக்கெடுத்து ஒளிக்கேற்றவாறு எந்த இடங்களுக்கு தேவையோ அங்கு சென்றுஅடைய அனுப்பும் நேர்த்தியும்,அன்றாட சேவைகளான காவல் துறை,தீ அணைப்பு படை,மருத்துவமனை ஆம்புலன்ஸ் முதலியவற்றை தன் கண்காணிப்பில் வைத்து செயல்படுத்தும் அழகும் யாவரையும் கவர்தது. வசித்தால் இந்நகரத்தில் வசிக்க வேண்டும் என சொல்லும் அளவிற்கு பேச வைத்தது.
மிகவும் துரிதமாகவும்,துல்லியமாகவும் சேவைகளை நடைபெற உதவும் கணினியை கவனிக்க பொறுப்புள்ள அதிகாரிகளை தேர்தெடுத்து நியமித்து அவர்கள் இந்த பதவியில் கவனத்துடன் செயலாற்ற எல்லோரும் வியக்கும் வண்ணம் நகரம் செழிப்புடன் விளங்கியது.
நாம் கேள்விப்பட்ட "ராம ராஜ்யம்" இன்று நம் கண்முன்னில்.
இவ்வாறு எல்லாம் சீராக நடக்கையில்,ஒரு நாள் அலுவலகத்தில் முக்கிய பொறுப்பில் உள்ள அதிகாரி தன் மகனுடன் அலுவலகத்திற்கு வந்தார்.
அவனுக்கு தன் அலுவலக்கத்தில் உள்ள கண்ணாடி திரைகளை பற்றி விளக்கி,தன் கடவு சொல்லை தட்டினார். கண்ணாடி திரைகளில் வண்ண மயமாக நகரத்தின் அணைத்து சேவைகளும் தெரிந்தன.
சிறுவனின் கண்கள் வியப்பில் விரிந்தன.
அப்பாவின் திறமையை கண்டு அவன் மனம் பெருமை கொண்டது.அப்பாவின் அனுமதியுடன் தான் கணினி முன் உட்கார்ந்து ஒவ்வொரு சேவையாக ஆராய,மகனின் ஆர்வத்தை கண்டு மனம் பூரித்து அவரும் விளக்கலானார். நேரம் கடந்ததை இருவரும் அறியாமல் வேலையில் மூழ்கினர்.
அப்பாவிற்கு தண்ணீர் அருந்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட,மகனிடம் இப்பொழுது வருகிறேன் எனக்கூறி தன் கண்ணாடி அறைக்கு வெளியே வர, மகன் தான் அன்று காலையில் கற்ற பாடங்களை நடைமுறை படுத்த கணினியில் உள்ள எழுத்துக்கள் நிறைந்த அந்த மேடையில் தன் திறமையை வெளிப்படுத்த, கண்ணாடி திரைகளில் வண்ணங்கள் மாற ஆரம்பித்தன.சிறுவன் அதைக்கண்டு களைத்து மேலும் சில மாற்றங்களைச் செய்ய அமைதியாக இருந்த அந்த இடம் ஒலிபெருக்கிகள் சத்தமிட சிவப்பு விளக்குகள் எரிய பதட்டம் மிகுந்த பகுதியாக மாறியது.
தண்ணீர் பாட்டிலுடன் தன அறைக்கு வந்து கொண்டிருந்த அதிகாரி நடையை ஓட்டமாக மாற்றி தன் அறைக்குள் நுழைய மகன் தன் செயலால் நிகழ்ந்தவற்றை கண்டு பயந்து பிரமிப்புடன் அவர் அலுவுலகத்தில் இருப்பதை கண்டார்.
கண்ணாடி திரையில் தாம் கண்டதை அவராலே நம்பமுடியவில்லை.மருத்துவ ஆம்புலன்ஸ்கள் தாறுமாறாகச் செல்ல,தீ அணைப்பு படை தீ இல்லாத பகுதிக்கு விரைய,காவல்படை வீதியில் ஓலமிட்டு ஓட,தண்ணீர் தேவைகள் வீடுகளுக்கு அதிகரிக்க ஒரே குழப்பம்.
தான் செய்த தவறினை அதிகாரி பூர்ணமாக உணர சிறிது நேரம் பிடித்தது. அவர் தன் மகனை நகர்த்தி கணினி முன் அமர்ந்து முன் இருந்த நிலைக்கு எல்லாவற்றையும் கொண்டுவர முயற்சியில் சில நிமிடங்கள் கழிய,அதிகாரியின் மகனின் செயகையால் விளைத்த நஷ்டங்கள்,பல நாட்கள் நகரம் சேமித்த பணத்தை இழக்க செய்தது.
அதிகாரி தன் மகனை உடனே வீட்டிற்கு திரும்பி அனுப்ப வேண்டிய நடவடிக்கைகளை செய்தார்.
அன்றைய தினம் வேறு எந்த அசம்பாவிதமும் இல்லாமல் முடிந்தது.
மறுநாள் காலை அதிகாரியை சந்தித்த நகரத்தின் பிரதிநிதிகள்,அவரை கோர்ட்டில் ஆஜராகுமாறு பணித்தனர்.
அதிகாரியும் உடனே கோர்ட்டிற்கு சென்றார்.
கோர்ட்டில் உள்ள கண்ணாடி திரையில் தன் முகம் பெரிதாக தெரிவதை கண்டு கடுவு சொல்லை தட்ட அது செயல் படவில்லை
நீதிபதியின் கைகனிணியில் அவரின் குற்றங்கள் செய்திபோல் தெரிந்தன.
 கடவுசொல்லை யாருக்கும் கொடுப்பதில்லை என்பதை மீறியது
 தன் கனிணியில் இன்னொருவர் பயன்படுத்த விட்டது.
 தான் கனிணியை விட்டு விலகும் கால் அதை செயலிழக்க செய்யாமல் சென்றது.
அதிகாரியிடம் இக்குற்றங்களை திரையில் காண்பித்து அதற்கு ஒப்புதல் பெற்றவுடன்
நீதிபதி மூன்று மொழிகளை அதிகாரி முன் தண்டனையாக கூறி அதை திரையில் யாவரும் பார்க்க ஒளிபரப்பினார்.
1. மகனை ஒரு வருடம் பயிற்சி முகாமில் படிக்க விட வேண்டும்.
2.நகரின் நஷ்டங்கள் அனைத்தையும் அதிகாரி ஏற்கவேண்டும்
3.பதவியில் இருந்து அதிகாரி கீழ் பதவிக்கு செல்லவேண்டும் என உத்தரவு.
நகரின் பிரமுகர்கள் இதை பரிசீலிக்க வேண்டி கோர்ட்டில் கூறினார்.
அதிகாரி சொல்லுவதற்கு வார்த்தைகளின்றி கோர்ட்டில் இருந்து தலை குனிந்தவாறு வெளியேறிய காட்சி மனதிற்கு பெரும் வேதனை அளித்தது.
தீர்ப்பு அன்று மாலை நிரூபணம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
மாலையில் தீர்ப்பை எதிர் பார்த்து கொண்டிருந்த அதிகாரிக்கு ஒரு அதிசயம் காத்திருந்தது . அவர் கடந்த வருடங்களில் தன்னலமற்று செயலாற்றியது,அவரது கடமை தவறாத உழைப்பு,நேர்மை முதலியவற்றை மனதில் கொண்டு அவர் பதவியில் தொடரலாம்,நகருக்கு நேர்ந்த நஷ்டத்தில் பாதியை அவர் பதவியின் மூலம் கிடைக்கும் வருமானத்தினால் கொடுக்க ஏற்பாடு செய்யவேண்டும் எனவும், அவரது மகன், தான் அறியாது செய்த விளைவாகையால்,அவனை மன்னித்து, அவனது வயதுக்கு மீறிய அறிவாற்றலையும் கணினியில் செயல்படும் திறமையையும் மனதில் கொண்டு அவனுக்கு கணினியில் சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதிகாரி மறுநாள் வழக்கம் போல் அலுவலகம் செல்ல புறப்படும் நேரம்,மகன் தானும் வருவதாக கூற, சிரித்தபடி இன்னும் பத்தாண்டுகளில் ஏன் முன்னதாகவே நீயும் வருவாய் என்று பெருமிதத்துடன் கூறிவிட்டு தன் காரில் அமர்ந்தார்.

எழுதியவர் : கே என் ராம் (24-Sep-17, 1:31 am)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 139

மேலே