என் உயிரினும் மேலான நெடுந்தொடர் - - - பாகம் 66

பைக்கில் இருந்து இறங்கியவுடன் முபாரக்கிற்கு போன் செய்தான்,"டேய் நான் ரீச் ஆயிட்டேன் டா" என்றான் பிரவீன்.

"மச்சி, ஆல் தி பெஸ்ட் டா, இன்னிலேந்து நீ லைப் ல எல்லா நாளும் ஹேப்பியா இருப்ப டா இன்ஷா அல்லாஹ், போயிட்டு வா டா, அப்டியே என்னோட விஷசும் சொல்லு, முடிஞ்சா கால் பண்ணு, விஜய்கிட்ட பேசறேன், அவசியம் இல்ல, தனியா இருப்பீங்க, என்ஜாய் யுவர் டே டா, டேக் கேர், நைட் எவ்ளோ நேரம் ஆனாலும் சாப்பிட வந்துடு டா" என்றான் முபாரக்.

"வந்துடறேன் டா, " என்றபடி போனை வைத்துவிட்டு உள்ளே சென்றான், அங்கே விஜியின் அருகில் டேவிட் அமர்ந்திருக்க, சற்றே தயக்கத்துடன் வந்தான்.

"ஹாய் விஜி, அட்வான்ஸ்ட் பர்த்டே விஷஸ், என்றபடி எதிரில் உட்கார்ந்தான், ஹாய் டேவிட், என்ன டா, சர்ப்ரைஸா இருக்கு, நீ எப்படி?" என்றான் பிரவீன்.

"நான் தான் பிரவீன் கூப்பிட்டேன்" என்றாள் விஜி.

"அது சரி, ஏதாவது ஆதார் பண்ணி சாப்பிடலாம் இல்ல, வந்து ரொம்ப நேரம் ஆச்சா" என்றபடி "வெய்ட்டர் அண்ணா" என்று அழைத்தான் பிரவீன்.

"ம்ம், டேவிட் நீ என்ன சாப்பிடற சொல்லு, விஜி, நீ....." என்றான் பிரவீன்.

"பிரவீன், கொஞ்சம் வெய்ட் பண்ணு, அப்புறம் ஆர்டர் தரலாம்" என்றாள் விஜி.

"ஓகே, அண்ணா கொஞ்ச நேரம் கழிச்சு வாங்க" என்றான் பிரவீன்.

"விஜி, வண்டி எப்படி இருக்கு, சொல்லவே இல்ல?" என்றான் பிரவீன்.

"பிரவீன், அந்த வண்டிய எடுத்துட்டு போய்டு, எனக்கு வேணாம்" என்றாள் விஜி.

பிரவீன் அதிர்ந்து போனான்.சற்றும் இதை எதிர்பார்க்கவில்லை.

"ஏ.....ஏன் விஜி, ஏதாவது பிரச்னையா?பிடிக்கலையா?" என்றான் பிரவீன்.

"பிடிக்கிது பிடிக்கல மேட்டர் இல்ல பிரவீன், நீ யாரு எனக்கு இதை கிப்ட் பண்ண?" என்றாள் விஜி.

"விஜி....என்ன விஜி.....ஏன் இப்டி கோச்சுக்கற, நான் உன்னை கேக்காம கிப்ட் பண்ணது தப்பு தான், அதுக்கு சாரி விஜி, ஆனா நீ ஏன் இப்டி கோவப்படற, அப்பா அம்மா ஏதாவது சொன்னாங்களா, சொல்லு, நான் அவங்ககிட்ட பேசறேன்" என்றபடி போனை கையில் எடுத்தான்.

"என் அப்பா அம்மாக்கு போன் பண்ண நீ யாரு" என்று தட்டிவிட்டாள் போனை.

போன் கீழே விழுந்தது, ஆப் ஆனது. டேவிட் அமைதியாக உட்கார்ந்திருந்தான்.

"என்ன விஜி, இப்போ நீ இவ்ளோ கோவப்படற அளவுக்கு என்ன நடந்தது, ப்ளீஸ் சொல்லு விஜி" என்றான் பிரவீன்.

"பிரவீன், ஆரம்பத்துல இருந்தே நீ அதிகமா என்கிட்டே உரிமை எடுத்துக்கிட்டா, என்னை அனாவசியமா ரொம்ப கேர் பண்ணிக்கற மாதிரி என்னை ஒரு சென்டிமென்டல் இடியட் ஆக்கிட்ட, நீ உன்னோட ப்ரெண்ட்ஸ் எல்லாருமே ஒரு கேங்ஸ்டர் மாதிரி, உன்னை அப்டியே பெரிய ஆள் பெரிய ஆள் னு சொல்லி கிரியேட் பண்ணி....ச்ச, நீங்க எல்லாரும் ஒரு சைக்கோ, எஸ்பெஷாலி நீ......நீ ஒரு சைக்கோ, உன்னை பாக்கவே பிடிக்கல, என்னை எமோஷனலா டார்ச்சர் பண்ணி பைத்தியக்கார மாதிரி ஆக்கிட்ட இல்ல நீ" என்றாள் விஜி.

விஜியின் வார்த்தைகளுக்கு ப்ரவீனால் எதுவும் பேச முடியவில்லை. அதிர்ச்சியில் உறைந்து போய் இருந்தான்.

"என்ன பேசாம இருக்க, வேஷம் கலைஞ்சுருச்சா பிரவீன்' என்றாள் விஜி.

"என்ன விஜி, வேஷம் னு எல்லாம் சொல்ற, அப்டின்னா நான் உன்கிட்ட பாசம் காட்றா மாதிரி நடிக்கறேனா விஜி?" என்றான் பிரவீன்.

"நீ பாசம் காட்றா மாதிரி நடிக்க கூட இல்ல, நீ ஒரு பித்தலாட்டக்காரன், நீ ஒரு சைக்கோ, உன்ன மாதிரி அனாதைக்கு எல்லாம் காமனா ஒரு ஹெபிட் இருக்குமே, யாரவது கொஞ்சம் இரக்கம் காட்டினா அவங்களையே நாய் மாதிரி பின்னாடி வந்து பாலோ பண்றது, அது மாதிரி தான், உன்னால நார்மலா ஒரு லைப் வாழ முடியுமா பிரவீன்?" என்றாள் விஜி.

"விஜி, நான் அனாதையா விஜி? நீ இல்லையா விஜி அப்போ என்கூட?" என்றான் பிரவீன்.

"ஒரு இறக்கத்துக்கு ஒரு சப்போர்ட்க்கு நான் சொன்ன வார்த்தை, அதை நீ ஓவர் அட்வான்டேஜ் எடுத்துக்கிட்ட பிரவீன்" என்றாள் விஜி

"விஜி....எப்பவும் போல கோவத்துல ஏதாவது தப்பான முடிவு எடுக்காத விஜி, யோசிச்சு பாரு விஜி" என்றான் பிரவீன்.

"என்ன யோசிக்கணும், நீ சைக்கோ இல்லன்னு நான் யோசிக்கணுமா, உன்னை பத்தி இப்போ நான் என் பிரவீன் யோசிக்கணும், என்னோட கோவம் தான் என் ஐடென்டிட்டி, அதை கூட மாத்த வெச்சுட்ட இல்ல நீ?" பிரவீனின் மனதை வார்த்தைகளால் துளைத்தாள் விஜி.

"உன்னோட இந்த பாவமான மூஞ்சி ரியாக்ஷன் எல்லாம் என்கிட்டே தராத பிரவீன், நீ ஒரு ஆர்பன், அந்த ஐடென்டிடிய மட்டும் வெச்சுக்கோ, ம்ம்ம், உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் னு சொன்னேன் இல்ல, இதான், நான் டிசைட் பண்ணிட்டேன், நான் டேவிடை லவ் பண்றேன், அவனை தான் கல்யாணம் பண்ணிக்கபோறேன், இனிமே நீயோ உன்னோட ப்ரெண்ட்ஸோ என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க" என்றாள் விஜி.

இருந்தும் இறந்தவனாய் சாய்ந்தான் பிரவீன், அதன்பின் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. தலையை குனிந்தபடி உட்கார்ந்தான்.

நீண்ட மௌனத்திற்கு பிறகு, இது தான் உன்னோட முடிவா விஜி? என்றான் பிரவீன்.

"இது தான் என் ஆரம்பம் பிரவீன், இனிமே என்னை டிஸ்டர்ப் பண்ணாத, " என்றாள் விஜி.

அந்நேரம் முபாரக்கின் போனில் இருந்து விஜி போனுக்கு விடாமல் கால் வந்து கொண்டே இருக்க அதை அட்டென்ட் செய்யாமல் கட் செய்துகொண்டே இருந்தாள் விஜி.

"விஜி, என்னை விட்டு பிரியமாட்டேன் னு சொன்ன, நான் உன்கூட இருக்கும்போது கம்போர்ட்டா இருக்கேன்னு......."பிரவீன் முடிப்பதற்குள் "சொன்னேன் பிரவீன், நீ எனக்காக நெறய ஹெல்ப் பண்ணிருக்க, என்னை கம்போர்ட் சோன் ல வெச்சிருந்த, அதுக்காக என்ன பண்ணனும், ஒரு பெரிய தேங்க்ஸ், அதைவிட்டுட்டு உன்னை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்க முடியுமா?" அனாதைங்கறத விட உன்கிட்ட வேற என்னை ஐடென்டிட்டி இருக்கு பிரவீன்? உன்மேல இரக்கம் தான் வருமே தவிர வேற எந்த ஒரு பீலிங்கும் வராது" என்றாள் விஜி.

அந்த வார்த்தைகள் தனது உயிரை எடுப்பது போல உணர்ந்தான் பிரவீன்.

கண்கள் கலங்க தொடங்கின, "அவ்ளோ தானா இன்னும் ஏதாவது ஹர்ட் பண்ண இருக்கா விஜி?" என்றான் பிரவீன்.

"ஹா நல்ல ஜோக், நீ ஹர்ட் ஆரியா, நான் தான் ஹர்ட் ஆறேன் பிரவீன்" என்றாள் விஜி.

"நான் உன்னை ஹர்ட் பண்றேனா விஜி?" என்றான் பிரவீன்.

"நீ மட்டும் இல்ல, உன்னோட பிரெண்ட்ஸ் எல்லாரும் தான், அவங்கள எல்லாம் பாத்தாலே.......ச்ச.......எல்லாமே ஒரு சென்டிமென்டல் சைகோஸ்" என்றாள் விஜி.

"விஜி, நீ என்னை என்னை வேண்ணாலும் சொல்லு, அவங்கள பத்தி எதுவும் பேசாத" என்றான் பிரவீன்.

"என்ன....பேசினா.....உண்மையா சொன்னா குத்துதோ?" என்றாள் விஜி.

"விஜி, அவங்க எல்லாருமே என்கூட சேந்து உன்னோட சந்தோசம் தான் பெருசுன்னு நெனச்சங்க விஜி, அதுக்கு நீ தர பரிசா இந்த வார்த்தை?" என்றான் பிரவீன்.

"என்ன செஞ்சாங்க....ஏன் சந்தோஷத்துக்காக நீங்க என்ன வேண்ணாலும் பண்ணுவீங்களா.....இப்போ சொல்றேன், நீங்க இந்த டோர்னமெண்ட்ல தோத்துட்டா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன், அதுவும் இன்கேஸ் விழுப்புரம் கூட மேட்ச் வந்து அதுல தோத்தா ரொம்ப ரொம்ப சந்தோஷப்படுவேன், தோக்கறீங்களா?" என்றாள் கோவமாக.

அமைதியாய் இருந்தான் பிரவீன்.

"என்ன சொல்லு பிரவீன், முடியுமா" என்றாள் விஜி.

பிரவீன் கோபமாக எழுந்தான்.

"யாரு சொன்னாலும் எவன்கிட்டயும் நான் உயிரோட இருக்கற வரைக்கும் தோக்க மாட்டோம் தோக்க விடமாட்டேன் விஜி" என்றான் பிரவீன்.

"அதான அந்த ஈகோ உனக்கு எப்படி அவ்ளோ முக்கியமோ அதே போல தான் என்னோட இந்த கோபம் எனக்கு முக்கியம், போ, அந்த சைக்கோ கும்பல் கூட போய் சேந்துக்கோ, டேம் இடியாடிக் பீப்பிள்" என்று விஜி சொல்லிக்கொண்டிருக்கும்போதே "இன்னொருவாட்டி அவங்கள பத்தி ஏதாவது பேசின.......அப்புறம் இந்த பிரவீனை எதிரியா பாப்ப விஜி" என்றான் பிரவீன்.

இவ்வளவு நேரம் அமைதியாய் இருந்த டேவிட் பேசினான், "டேய், என்ன பொண்ணுகிட்ட சீன போடற" என்று எழுந்த டேவிட்டுக்கு கன்னத்தில் பளார் என்று ஒன்று கொடுத்தான், ஹோட்டலில் அனைவரும் அந்த சத்தத்தை திரும்பி பார்க்க, அவமானம் தாங்காமல் கன்னத்தை தடவியபடியே உட்கார்ந்துகொண்டான் டேவிட்.

"பொண்ணு கிட்ட சீன போடறேனா, அவ பொண்ணுங்கறதால தான் பேசிட்டு இருந்தேன், நீ என்கிட்டே சீன போட்டதால் தான் இந்த அடி உனக்கு" என்று சொல்லிவிட்டு, "விஜி தேங்க்ஸ் பார் யுவர் பர்த்டே பார்ட்டி, ரொம்ப சந்தோஷமா போறேன், நீ இனிமே என்கிட்டே பேசமாதியா விஜி, என்னை விட்டு போய்ட்டியா விஜி, நான் உன் மனசுல இல்ல?" என்றான் பிரவீன்.

பதில் பேசாமல் கோபமாய் பிரவீனை பார்த்தபடி உட்கார்ந்திருந்தாள் விஜி.

"வார்த்தைகள் கூட மரணத்தை தரும் னு இன்னிக்கு தான் தெரிஞ்சுகிட்டேன் விஜி, இன்னிக்கு தோ, மணி பத்து ஆயிருச்சு, இன்னும் ரெண்டு மணி நேரத்துல உனக்கு பிறந்த நாள், ஹேப்பி பர்த்டே விஜி, உன்னோட இந்த பிறந்தநாள் ரொம்ப சந்தோஷமா உன்னோட அன்பு காதலனோடு இருக்கட்டும்" என்று சொன்னபடியே, "டேவிட், எமோஷன்ல அடிச்சுட்டேன், அதுக்காக மன்னிப்பு கேட்டுக்கறேன், உனக்கு கெடச்சிருக்கற காதலி ரொம்ப நல்ல பொண்ணு டா, குழந்தை மனசு, அடிக்கடி கோவப்படுவா, ஆனா மனசுல எதுவும் வெச்சுக்க தெரியாது, அவளை ஹர்ட் பண்ணிடாத டா, நெஜமாவே நீ ரொம்ப லக்கி டா" என்று டேவிட்டிடம் சொல்லிவிட்டு மீண்டும் விஜியிடம் "நாங்க விழுப்புரம் கூட தோத்தா நீ சந்தோஷப்படுவியா விஜி, நான் தோக்கறது ஏன் மரணத்துக்கு சமம் னு தெரிஞ்சும் நீ சொல்ற இல்ல, ஓகே விஜி, இப்போ சொல்றேன், இன்கேஸ் விழுப்புரம் கூட மேட்ச் வந்தா நான் தோக்கறேன், உன் சந்தோஷத்துக்காக நாங்க தோக்கறோம், ஆனா கண்டிப்பா தோத்ததும் நீ உயிர் இருக்காது கோவத்துல சொல்றேன் னு நினைக்காத, ஒருவேளை நாங்க ஜெயிச்சு அதனால உன் மனசு கஷ்டப்பட்டா கூட உன் மனச கஷ்ட படுத்தற பிரவீன் உயிரோட இருக்க மாட்டான் விஜி, உன்னோட கோவத்துக்கு காரணம் தெரில, உன்னை அணு அணுவா அண்டர்ஸ்டெண்ட் பண்ணிருக்கேன், ஆனா இந்த கோவம் எதுக்குன்னு எனக்கு தெரில, இப்பவும் சொல்றேன் விஜி, உன் சந்தோசம் தான் ஏன் சந்தோசம், நாங்க தோக்கணும் அதுவும் டேவிட் கிட்ட இந்த பிரவீன் தோக்கணும் அதான, நான் டேவிட் கிட்ட இல்ல டா, உன்கிட்ட தோக்கறேன், ஏன் விஜிகிட்ட நான் தோக்கறது எனக்கு சந்தோசம் தான் டா......கண்கள் கலங்க.......நாளைக்கு பேசுவியா மாட்டியானு தெரியாது விஜி, ஹேப்பி பர்த்டே.......வில் மிஸ் யு மோர் டா" என்று அழுதபடியே அர்ச்சனாவை விட்டு வேகமாக வெளியே வந்தான் பிரவீன்.

அப்படியே கோபமாக பிரவீன் போகும்வரை அவனையே பார்த்தபடி உட்கார்ந்திருந்தாள் விஜி.

வெளியில் நின்று அர்ச்சனா ஹோட்டல் என்ற போர்டை நிமிர்ந்து பார்த்தான். முன்னாளில் விஜி மற்றும் அணைத்து தோழர்களுடன் மகிழ்ச்சியாக கழித்த பொழுதுகள் அவன் கண்கள் முன் கண்ணோட்டமாக ஓடின. கலங்கிய கண்களோடு வண்டியை ஸ்டார்ட் செய்தான் பிரவீன்.

வண்டி ஒவ்வொரு இடமாக விழுப்புரத்தை கடக்க கடக்க விஜியோடு அவன் அங்கங்கு கழித்த பொழுதுகளை எண்ணியபடியே தான் என்ன தவறு செய்தோம் என்று எண்ணிக்கொண்டே கலங்கிய கண்களோடு கடலூர் நோக்கி வந்தான். வண்டி அவன் கட்டுப்பாட்டில் செல்வதாக தெரியவில்லை. அது அவனுடைய வண்டி, அவனை பழி வாங்காது அல்லவா, ஆனால் விஜியும் அவனுடைய விஜி தானே, ஆனால் இப்படி ஒரு கஷ்டத்தை தருவாள் என பிரவீன் கனவிலும் நினைக்கவில்லை.

அவன் மனதில் ஒன்று தான் ஓடியது. "நான் அனாதை தான், எதற்காக எனக்கு இவ்வளவு பெரிய ஆசை, விஜி ஒரு தேவதை, அவளை ஒரு அதிஷ்டக்காரன் அடைய வேண்டும் என்று தான் கடவுள் அவளை படைத்திருப்பான், நானோ ஒரு துரதிஷ்டசாலி. உண்மை தானே.......ஆனாலும் விஜியின் சந்தோஷத்திற்காக நான் தோற்க தான் வேண்டும்......பிரவீனின் மனம் அவனது வண்டியை விட வேகமாக பயணித்தது.

மனதளவில் மரணித்து வெற்றுடலாய் முபாரக் வீட்டை வந்தடைந்தான் பிரவீன்.

பகுதி 66 முடிந்தது.

-------------------------தொடரும்-------------------------

எழுதியவர் : ஜெயராமன் (24-Sep-17, 5:21 am)
சேர்த்தது : நிழலின் குரல்
பார்வை : 365

மேலே