கண்ட நாள் முதலாய்-பகுதி-23

.....கண்ட நாள் முதலாய்.....

பகுதி : 23

அவனது அறைக்குள் நுழைந்து கதவைத் தாளிட்டவளுக்கு வியர்த்துக் கொட்டத் தொடங்கியது...கையைப் பிசைந்து கொண்டு கதவருகே நின்றவள்,அருகில் கேட்ட அரவிந்தனின் குரலில் திடுக்கிட்டு விழித்தாள்...

"என்கிட்ட வர உனக்கு இவ்ளோ நேரமாச்சா துளசி...??"தனது குரலைக் கேட்டதும் திடுக்கிட்டு விழித்த துளசியைக் கண்டு தயங்கியவன்...பின் அவளது பயத்தை உணர்ந்தவனாய் அதை போக்கும் முயற்சியில் இறங்கினான்...

"ஹேய்...கூல் துளசி...நீ பயப்படத் தேவையே இல்லை...உன் வீட்டில நீ எப்படி இருப்பியோ அதே மாதிரியே இங்கையும் இருக்கலாம்...இதுவரைக்கும் இது என்னோட ரூமா இருந்திச்சு...இனிமே இது நம்ம ரூம்...சரி நம்மளோட அறை உனக்குப் பிடிச்சிருக்கா...??"

அவன் தன் பயத்தை குறைக்க முனைவதை உணர்ந்து கொண்டவள்...அவளும் அவனோடு சகஜமாகப் பேசத் தொடங்கினாள்...அதுவரை நேரமும் எங்கெங்கோ பார்வைகளை அலைய விட்டுக் கொண்டிருந்தவள்...அவன் கேட்டதும்தான் அறையை நன்றாக பார்வையிட்டாள்...மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் அந்த அறை இருந்ததில்...அவனை பாராட்டவும் அவள் தயங்கவில்லை...

"உண்மையிலேயே உங்க அறை ரொம்ப அழகா இருக்கு...இவ்வளவு நீற்றா இருக்கும்னு நான் எதிர்பார்க்கவேயில்லை..."

"பரவாயில்லையே நீ இவ்ளோ நீளமா கூட பேசுவியா...பாராட்டுக்கு ரொம்ப நன்றி மேடம்..."

"ஹா...ஹா....ஏன் பேசா மடந்தைன்னு நினைச்சுட்டீங்களா...?"

"அட பார்ரா....இதுக்கப்புறமும் உன்னை அப்படி நினைக்க நான் என்ன மடையனா...??அப்புறம் உனக்கு நம்ம அறையில ஏதும் மாற்றங்கள் செய்யனும்னாலும் பண்ணிடலாம்...உனக்கு பிடிச்ச மாதிரி நீ இதை மாத்திக்கலாம்...."

"ம்.."

"மறுபடியும் ம் ஆஆ??..என்று அவன் நெஞ்சைப் பிடிப்பது போல் செய்ய அதைப் பார்த்து நன்றாகச் சிரித்தவள்...

"சரிங்க சேர்...ஏதும் சேன்ஜ் பண்ணனும்னா சொல்றன்....இப்போ ஓகேயா...??

"தங்கள் உத்தரவு மேடம்...அப்புறம் இன்னுமொரு வேண்டுகோள்...?"

"என்ன...?.."

"எனக்கும் இப்படியே நின்னுகிட்டே பேச ஆசையாத்தான் இருக்கு....ஆனால் கால்தான் ஒத்துப்போக மாட்டேன் என்டு அடம்பிடிக்குது....கட்டில்ல உட்கார்ந்துகிட்டே பேசலாமா...??.."

"ஓஓ...சொரி..நானும் கதைச்சிட்டிருந்ததில மறந்திட்டேன்...உட்கார்ந்தே பேசலாம்...எனக்கும் ரொம்ப களைப்பாத்தான் இருக்கு..."

"இதுக்கு எதுக்கு சொரி எல்லாம்...கணவன் மனைவிக்குள்ள சொரியும் தாங்ஸ்ம் சொல்லனும்னா வாழ்க்கைபூரா அதை மட்டுமேதான் சொல்லிட்டு இருக்கனும்...மத்தவங்க எப்படி வேணும்னாலும் இருக்கட்டும்...நமக்குள்ள இந்த வோர்மாலிட்டி ஒன்னும் வேணாமே..."என்றவாறே அவன் கட்டிலின் ஒரு புறமாய் சென்று அமர்ந்து கொண்டான்...

"அப்போ அந்த சொரியை திருப்பி தந்திடுங்க..."என்றவாறே அவளும் சிறிய இடைவெளிவிட்டு மறுபுறமாய் அமர்ந்து கொண்டாள்...

"ஹா...ஹா...அதுக்கென்ன தந்திட்டாப் போச்சு..."

அவர்கள் நிறையக் கதைத்தார்கள்....ஒருவருடைய விருப்பு வெறுப்புக்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டார்கள்...அவன் தனது பள்ளி கல்லூரி வாழ்க்கை பற்றியும் தான் சிறு வயதில் செய்த சேட்டைகள் குறும்புகள் மற்றும் அவனது வேலைபற்றியும் அனைத்தையும் அவளிடம் பகிர்ந்து கொண்டான்...அவன் சொல்லச் சொல்ல நேரம் போவது தெரியாமல் அவளும் அதை ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தாள்...

அவன் சொல்லி முடித்ததும் அவளும் தன் சிறுவயது முதல் இப்போவரையான அனைத்தையும் சொல்லி முடித்தாள்...அப்போது அவன் உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டுமென்று கூறிய போதுதான் அவளுக்கும் அவனிடம் சொல்ல வேண்டியதெல்லாம் வரிசையாக நினைவிற்கு வந்தது...அப்போதிருந்த அந்த இதமான சூழலை அவள் கலைக்கவும் விரும்பவில்லை...அதே நேரம் இதைப்பற்றி அவனோடு கதைக்காமலிருக்கவும் அவளால் முடியவில்லை...அதனால்...

"நானும் உங்ககிட்ட ஒரு விசயம் சொல்லனும் அரவிந்.."

அவள் தடுமாறித் தடுமாறிச் சொன்னதை வைத்தே ஏதோ இருக்கிறது என்பதை ஊகித்துக் கொண்டவன் அவளையே முதலில் சொல்லுமாறு கூறினான்...

"ம்ம்...எதுவாயிருந்தாலும் தயங்காம சொல்லு துளசி.."

"அது வந்து எப்படி எங்கயிருந்து ஆரம்பிக்கிறதென்டு தெரியல...இதை ஏன் நீ முதலே சொல்லலன்னு என் மேல உங்களுக்கு கோபம் கூட வரலாம்...ஆனால் அப்போ சொல்றதுக்கு எனக்கு தைரியம் வரலை..."என்றவள் பேச்சை நிறுத்தி அவனது முகத்தை கூர்ந்து பார்த்தாள்...அவனோ எந்த உணர்ச்சிகளையும் காட்டாமல் அமர்ந்திருந்தான்...அதனால் அவளே மேலும் தொடர்ந்து சொன்னாள்...

"இந்தக் கல்யாணம் என்னோட முழு சம்மதத்தோட நடக்கலை அரவிந்...என்னோட அப்பாவுக்காகத்தான் இந்தக் கல்யாணத்திற்கு நான் சம்மதிச்சேன்...நான் விருப்பமில்லைன்னு சொல்லியிருந்தா என்னை யாரும் கட்டாயப்படுத்தி இருக்க மாட்டாங்க...ஆனால் உங்க அப்பாகிட்ட வாக்கு கொடுத்திட்டு வந்து என்னோட அப்பா எனக்காக தலைகுனிஞ்சு நின்டிருப்பாரு...அப்படியொரு நாளும் நடந்திடக்கூடாது என்றதுக்காகத்தான் இந்தக் கல்யாணத்துக்கு நான் சம்மதிச்சேன்...ஒவ்வொரு தடவையும் நீங்க என்கிட்ட கேட்கும் போதும் சொல்லிடலாமான்னு தோனும்...ஆனால் ஏனோ தெரியலை உங்களை பார்க்கும் போதெல்லாம் வார்த்தைகள் எனக்குள்ளேயே புதைஞ்சிடும்...இப்போ கூட இதை உங்ககிட்ட சொல்லாம கடமைக்காக உங்களோட என் வாழ்க்கையை நான் ஆரம்பிக்கலாம்...ஆனால் அதுக்கு என் மனசு இடம் கொடுக்கல...என் மனசு முழுமையா உங்களை என்னோட கணவரா ஏத்துக்கிட்டதுக்கப்புறமா நம்ம வாழ்க்கையை ஆரம்பிக்கனும்னு நினைக்கிறேன்...அதுக்கு எனக்கு கொஞ்ச கால இடைவெளி வேணும் அரவிந்...."என்று அவனைப் பார்க்காமலேயே அனைத்தையும் சொல்லி முடித்தவள்...அவனிடமிருந்து எந்த பதிலும் இல்லாமல் போகவே அவனை நிமிர்ந்து பார்த்தாள்....

அவனது முகம் பாறை போலே இறுகியிருந்தது...அவன் கண்களில் தெரிந்த வலியினை அவளால் உணர முடிந்தது..எங்கேயோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவனைப் பார்க்க மனம் தாங்கவில்லை துளசிக்கு...அவனது வலியினைப் போக்கும் வழி தெரியாது தவித்தவள் மெதுவாக அவனை அழைத்தாள்...

"அரவிந்.."

அவளது குரலைக் கேட்டதும் ஏதோ கனவுலகத்திலிருந்து எழுபவன் போல் முழித்துக் கொண்டவன்...அவள் பக்கம் பார்வையைத் திருப்பாமலேயே கட்டிலை விட்டு எழுந்து நின்றவன் சுவரைப் பார்வையிட்டவாறே அவளோடு பேசத் தொடங்கினான்...

"நீ கட்டில்ல படுத்துக்கோ துளசி...நான் இந்த சோபாவில படுத்துக்கிறேன்..."

அவனது குரலில் இருந்த துயரம் அவளை ஏதோ செய்தாலும் அவனது பதில் தெரியாமல் அவள் தூங்க விரும்பவில்லை..

"இப்போ நான் கேட்டதுக்கு நீங்க எந்த பதிலுமே சொல்லலையே அரவிந்.."

அவள் அவ்வாறு கேட்டதும் கவலையை அடக்கி கண்ணை மூடித் திறந்தவன்...

"எதுவாயிருந்தாலும் நாளைக்கு காலையில பேசிக்கலாம் துளசி...இப்போ நான் எதையும் பேசுற நிலைமையில இல்லை...குட்நைட்..."என்றவன் தலையணையையும் போர்வையொன்றையும் எடுத்துக் கொண்டு சோபாவில் தஞ்சம் புகுந்தான்...

அதன் பின்னும் அவனைத் தொந்தரவு செய்ய விரும்பாதவள்...கட்டிலின் ஓரமாய் படுத்துக் கொண்டாள்...

இருள் மட்டுமே சூழ்ந்திருந்த பொழுதில் இருவர் இமைகளுமே மூடிக் கொள்ள அடம்பிடித்துக் கொண்டிருந்தன...தூக்கத்தை துணைக்கழைத்தவர்களுக்கு உறக்கம் தொலைவாகிப் போக ஒருவர் நினைவில் ஒருவர் மூழ்கியவாறே விட்டத்தை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தனர்....



தொடரும்....

எழுதியவர் : அன்புடன் சகி (24-Sep-17, 7:06 am)
பார்வை : 602

மேலே