அழகே அது நீ தானா 🌹

அரபு நாடே ஏங்குகிறது உன்
உதட்டை கடிக்க...
தூரி பேரிச்சை அது நீ தானா?

தேனிக் கூட்டமே ஏங்குகிறது உன்னை தீண்ட
எல்விஷ் ஹனி அது நீ தானா?

மலர்த்தோட்டமே தவிக்கிறது உன் கண்ணை பறிக்க....
காஸ்மோ மலர் அது நீ தானா?

அத்திப் பழச் சிவப்பை என் உதட்டில் ஊற்றுகிறாயே?
அத்திப்பழம் அது நீ தானா?

பாவை நீ பார்த்தால் பாவி நான்
பறக்கிறேன்?
இர்மா புயல் அது நீ தானா?

ஆசியக் கண்டத்தை ஆர்பரிக்கும் அழகே!
அந்த ஆழிப்பேரலை நீ தானா?

அழகே அது நீ தானா?

அழகியே!

டேவின்சியின் லா பெல்லி ஓவியம்
அது நீ தானா?

ஜினிவ்ரா பென்சி அது நீ தானா?

பெனோய்ஸ் மடோனா அது நீ தானா?

என் கனவுக் கன்னி

அது நீ தானா?


பெல்லி!

நான் ஆடும் கில்லி அது என்னை சுடுக்கி இழுக்கும் உன் விரல்கள் தானா?


உன்னால் உன் பின்னே ஓடும் பில்லி சூனியம் அது உன் கண்கள் தானா?

அது உன் கண்கள் தானா?

எழுதியவர் : மணிபாலன் (24-Sep-17, 9:57 am)
பார்வை : 291

மேலே