என் உயிரினும் மேலான நெடுந்தொடர் - - - பாகம் 70

முதல் பந்திலேயே ராஜாவை க்ளீன் போல்டாக்கினான் ரியாஸ். நேராக விஜி இருக்கும் திசை நோக்கி கைகள் தூக்கி காட்டி அந்த மகிழ்ச்சியை காட்டினான். அந்த ஓவரில் வெறும் நான்கு ரன்கள் எடுத்தனர் விழுப்புரம் அணி.

இரண்டாவது ஓவரை விஜய் போட வந்தான். பழைய கேப்டன் சதீஷும் புதிய கேப்டன் கணேஷும் விளையாடினர்.விஜய்யின் பந்துவீச்சும் மிக நேர்த்தியாக இருந்தது, அந்த ஓவரின் இரண்டு பந்துகள் சதீஷின் காலில் பட்டு அவனை கதிகலங்க வைத்தது.

விஜி அமைதியாய் பார்த்துக்கொண்டிருந்தாள்.கடலூரில் நடப்பதால் கடலூர் ஆதரவாளர்கள் அதிகம் இருக்க இவர்கள் உட்கார்ந்திருந்த இடத்தில விழுப்புரம் ஆதரவாளர்கள் இருந்தனர்.

அவர்கள் இருவரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விழுப்புரம் அணி திணறியது. ஆறு ஓவர்கள் முடிவில் வெறும் பதினெட்டு ரன்கள் எடுத்து திணறியது விழுப்புரம்.

ஏழாவது ஓவரை வீச வந்தான் முபாரக்.

அவன் வீச வரும்போதே அவனிடம் பிரவீன் சொன்னான்,"எனக்காக எந்த முட்டாள் தனமும் பண்ணிடாத டா, ப்ளீஸ்" என்றான்.

முதல் பந்தை தொடக்கூட முடியாத வேகத்தில் வீசினான் முபாரக்.இந்த வேகத்தை விக்கெட் கீப்பராக இருந்த ஹரி எதிர்பார்க்கவே இல்லை, இப்படி ஒரு வேகமான பந்தை இதுவரை அவன் வீசியதே இல்லை. அடுத்த பந்தில் சதீஷின் விக்கெட் க்ளீன் போல்ட் ஆனது.பல முறை தரையில் பட்டு எகிறியது ஸ்டம்ப்.

அடுத்து ஆடவந்தான் டேவிட்.

பிரவீன் முபாரக்கிடம் வந்து,"அப்டியே மெயின்டெய்ன் பண்ணு, ப்ளீஸ், எந்த எமோஷனல் டெசிஷனும் வேண்டாம், ப்ளீஸ்" என்றான் பிரவீன்.

ஆனால் முபாரக்கால் பிரவீனின் எதிர்காலத்திற்கு துரோகம் செய்ய முடியவில்லை. இதில் நாம் தோற்றால் விஜிக்கு பிரவீன் மேல் இருக்கும் கோபம் குறையும் என்று அவன் நம்பினான்.

அதன்பிறகு மெல்ல ஆட்டம் கடலூர் கையில் இருந்து விழுப்புரம் பக்கம் சாய்ந்தது. முபாரக் பிரவீனை பந்து போட வேண்டாம் என தடுத்தபடி இருந்தான், பிரவீன் போட்டால் டேவிட் அவுட் ஆகிவிடுவான் என அவனுக்கு தெரியும், முபாரக்கின் ஓவர் பல ரன்களை அனாமத்தாக விட்டு கொடுத்தது, கமெட்ரி கூட விழுப்புரத்தில் வெற்றியை நோக்கி ஆட்டம் செல்வதாக பேசியது. முபாரக் வீசிய ஒரு பந்தை தடுக்க பிரவீன் கீழே விழுந்த பொது அவன் கணுக்களில் நல்ல வலுவான காயம் ஏற்பட்டது. ஓடிஏ சிரமப்பட்டான், ஆனாலும் வெற்றி என்பதே அவன் நோக்கமாக இருந்தது.

"ஏய் என்ன டி, இந்த முபாரக் அண்ணா, இப்படி பண்ராரு" என்றாள் காயத்ரி.

விஜி மெளனமாக நின்றிருந்தாள்.

"இந்த பிரவீன் ஏன் பந்தை போடமாட்டேங்கறாரு?" என்றாள் காயத்ரி.

விஜி இதற்கும் மௌனமாய் இருந்தாள்.

"ஏய், என்ன சைலெண்டா இருக்க" என்றாள் காயத்ரி.

"பிரவீன் போடமாட்டான், இன்னிக்கு கடலூர் தோக்கப்போகுது" என்றாள் விஜி.

"ஏய், என்ன பேசற நீ, லூசு, நம்ம டீம் தோக்கப்போகுதுன்னு சொல்ற" என்றாள் காயத்ரி.

"எது நம்ம டீம், ஹ்ம்ம்....பேசாம பாரு, நான் விழுப்புரம் சப்போர்ட்" என்றாள் விஜி.

காயத்ரி அதிர்ச்சியானாள்.

"விஜி என்ன சொல்ற, எனக்கு அப்பவே தெரியும், உன்னோட பேச்சு நடவடிக்கை எல்லாம் மாறி இருக்கு, ஏதோ தப்பா நடந்திருக்கு, என்ன ஆச்சு சொல்லு விஜி" என்றாள் காயத்ரி.

"இல்ல காயத்ரி, தப்பா நடந்தது, இப்போ தான் சரியா நடக்குது" என்றாள் விஜி.

"என்னன்னு சொல்லு டி" என்றாள் காயத்ரி.

"சொல்றேன், பேசாம மேட்ச் பாரு" என்றாள் விஜி.

"ஏன் பிரவீன் பால் போடமாட்டான் னு சொல்ற, ஏன் கடலூர் தோக்கப்போகுதுன்னு சொல்ற, சொல்லு விஜி" என்றாள் காயத்ரி.

"எல்லாம் காரணமாதான்" என்றாள் விஜி.

பதினெட்டு ஓவர்களில் நூற்றி தொண்ணூறு ரன்களை விளாசியது விழுப்புரம் அணி, இனிமேலும் பொறுக்க முடியாமல், முபாரக்கை கண்ட்ரோல் செய்தான் பிரவீன். "போதும் முபாரக், நாம ஜெயிக்கணும், நான் சுயநலமே இருக்க முடியாது, நான் தான் போடப்போறேன் இந்த ஓவர்" என்றான் பிரவீன்.

"டேய்..."என்று சொல்வதற்குள் பிரவீன் முபாரக்கை ஒரே முறை தான் முறைத்தான், முபாரக்கின் சப்த நாடிகளும் அடங்கிவிட்டன, எந்த மறுவார்த்தை பேசாமல் முபாரக் அமைதியாய் போய் அவன் இடத்தில் நிற்க, டேவிட் பந்தை எதிர்கொண்டான்,

"என்ன விஜி, பிரவீன் பந்து போடமாட்டான் னு சொன்ன?நீ ஏதோ தப்பு பண்ணிருக்க விஜி, கண்டிப்பா ஏதோ நடந்திருக்கு, நீ என்ன சொன்னாலும் சரி, கடலூர் தான் ஜெயிக்கும்" என்றாள் காயத்ரி.

பிரவீன் பந்து போடுவதை சற்றும் விஜி எதிர்பார்க்கவில்லை.

முதல் பந்தை டேவிட்டின் வலது கணுக்காலில் அடித்து தெறிக்க விட்டான் பிரவீன். பாலன்ஸ் இல்லாமல் கீழே விழுந்தான் டேவிட்.

அரை நிமிடம் எழுந்திருக்க முடியவில்லை, அவமானம் தாங்காமல் கோபமாக அடுத்த பந்தை எதிர்நோக்கினான் டேவிட். அடுத்த பந்து அவனது விலாவில் வேகமாக தாக்கியது.

"என்ன விஜி,பிரவீன் பந்து போடமாட்டான் னு சொன்னியே, பாவம் விழுப்புரம் வாங்கி கட்டிக்குது" என்றாள் காயத்ரி.

மூன்றாவது பந்து அவன் தலைக்கு எகிற, தன்னை காத்துக்கொள்ள கீழே குனிந்தான் டேவிட், நான்காவது பந்து வீசுவதற்கு முன்பே டேவிட்டிடம் சொன்னான் பிரவீன், "இந்த பால் உனக்கு லெக் ஸ்டம்ப் போய்டும், முடிஞ்சா தடுத்துக்கோ" என்று சொல்லிவிட்டு அந்த பந்தை வீச, ரிவர்ஸ் ஸ்விங்கில் சொன்னது போல ஸ்டெம்ப் பறந்தது. கடலூர் ஆதராவார் பலத்த கரகோஷம் இட, ஆட்டத்தின் முடிவில், விழுப்புரம் இருநூற்றி ஆறு ரன்கள் முடித்திருந்தது.

முதல் ஆட்டநேரம் முடிந்ததும் விஜய் பிரவீன் ரியாஸ் மூவரும் முபாரக்கை திட்டி தீர்த்தனர்,

"டேய், நான் உன்கிட்ட அவ்ளோ சொல்லியும் ஏன் டா அப்டி பண்ணின, இப்போ இந்த ஸ்கொர் அடிக்கறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா....சரி...முடிஞ்சுது முடிஞ்சுபோச்சு, உனக்கு நான் முக்கியம் னு நெனச்சின்னா எந்த தப்பும் பண்ணாம ஜெயிக்கணும் னு ஆடு, போ, நீயும் விஜயும் எறங்குங்க, போங்க" என்றான் பிரவீன்.

இரண்டாம் கட்ட ஆட்டம் தொடங்கியது. ஆரம்பம் முதலே விஜய் முபாரக் அடித்து ஆட, நல்ல தொடக்கமாக இருந்தது, சங்கர் மற்றும் கிஷோரின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர் இருவரும். பத்து ஓவர்களில் எண்பது ரன்கள் எடுத்து விக்கெட் இழப்பின்றி வலுவாக இருந்தனர்.

துரதிஷ்டவசமாக விஜய் அவுட் ஆகா, பின்பு வந்த ரகு அடுத்த பந்திலேயே றன் அவுட் ஆனான்.

அடுத்த விக்கெட்டிற்கு ரியாஸ் வந்தான், சற்று நிதானமாக விக்கெட் விழாமல் ஆடினர் இருவரும், பதினெட்டு ஓவர்களில் நூற்றி நாற்பத்தி மூன்று ரன்கள் எடுத்தனர் இருவரும்.

நாற்பத்தி இரண்டு பந்துகளில் அறுபத்தி நான்கு ரன்கள் வேண்டும். அப்போது தான் பந்து வீச வந்தான் டேவிட்.

அந்த ஓவரின் இரண்டாம் பந்தில் ரியாஸ் அவுட் ஆக, அடுத்து ஆடவந்தான் வெற்றி.

"ஏன் இந்த பிரவீன் பேட்டிங் பண்ண வரல?, கால் ல அடிபட்டது போல இருக்கு, இப்போ கஷ்டமான சிச்சுவேஷன் ஆச்சே" என்றாள் காயத்ரி.

ஆட்டம் போக்கு மாறியது. விழுப்புரத்தின் கை ஓங்கியது மீண்டும்.

இருபத்தி ஒரு ஓவரின் முடிவில் நூற்றி ஐம்பத்தி எட்டு ரன்கள் எடுத்திருந்தது கடலூர் அணி. அடித்து விளையாடும் அனைவரும் அவுட் ஆக, இன்னும் அடிபட்டிருக்கும் பிரவீன் லெனின் இரண்டு பேர் மட்டுமே நன்றாக ஆடும் ஆட்கள் எஞ்சி இருந்தனர்.

இருபத்தி இரண்டாவது ஓவரை வீச வந்தான் டேவிட், அந்த ஓவரின் முதல் பந்திலேயே வெற்றி அவுட் ஆக, கதிர் வந்தான்.

"என்ன முபாரக், உங்க சிங்கம் வரலியா.....?எங்க காணும்?பயந்துட்டானா?" என்றான் டேவிட்.

"டேவிட் ரொம்ப பேசாத, போய் பந்த போடு" என்றான் முபாரக்.

"அவனுக்கு தான் டா வெயிட்டிங்" என்றபடி அடுத்த மூன்று பந்துகளை கதிர் அடிக்க முடியாமல் விட அதற்கு அடுத்த பந்திலேயே கதிரும் ஆட்டம் இழக்க, அனைவரும் அமைதியின் உச்சத்திற்கு சென்றனர்.

அந்த அமைதிக்கு நடுவில் பிரவீன் உள்ளே வந்தான்.

சற்று காலில் வலி அதிகமாக இருந்தாலும் வெற்றி பெறுவதே அவன் நோக்கமாக இருப்பது அவன் முகத்தில் இருக்கும் கோபம் காட்டியது.

"ஏய் சிங்கம் நொண்டிக்கிட்டு வருது டா, எல்லாரும் பாத்து நில்லுங்க, விழுந்தா தூக்கி விடணும்" என்றான் டேவிட்.

அந்த ஓவரில் ஒரு பந்து மட்டுமே எஞ்சி இருக்க, அதை எதிர்கொண்டான் பிரவீன், எந்த சலனமும் இன்றி அந்த முதல் பந்திலேயே ஒரு அற்புத சிக்ஸரை விளாசினான் பிரவீன்.

இருபத்தி இரண்டு ஓவர் முடிவில், நூற்றி அறுபத்தி நான்கு ரன்கள் எடுத்திருந்தது கடலூர் அணி.

இன்னும் மூன்று ஓவரில் நாற்பத்தி மூன்று ரன்கள் வேண்டும் என்ற கடின நிலையில் இருந்தது கடலூர். ஆனால் இரண்டு வீரர்களும் அனுபவசாலிகள், மேலும் டேவிடுக்கு இன்னும் ஒரு ஓவர் எஞ்சி இருந்தது.

அந்த இருபத்தி மூன்றாவது ஓவரை போட வந்தான் கணேஷ்.

அந்த ஓவரில் முபாரக்கால் இரண்டு பவுண்டரிகள் மட்டுமே எடுக்க முடிந்தது. ப்ரவீனால் ஓடிஏ முடியவில்லை என்பதால் ஓடி எடுக்கும் ஓட்டங்களை முபாரக் வேண்டாம் என முடிவெடுத்தான்.

இருபத்தி மூன்று ஓவர் முடிவில் நூற்றி எழுபத்தி இரண்டு ரன்கள் எடுத்தது கடலூர் அணி.

இருபத்தி நான்காவது ஓவரை வீச டேவிட் வந்தான், பிரவீன் எதிர்கொண்டான்.

முதல் பந்தை ஷாட் பிச்சாக அவன் மார்பில் அடிக்க எந்த ரன்னும் அடிக்கப்படவில்லை.

"என்ன பிரவீன், வலிக்குதா, ஸ்ப்ரே வேணுமா?" என்றான் டேவிட்.

அடுத்த பந்தை மிக வேகமாக வீசி பிரவீன் அடிக்க முடியாமல் செய்தான். ப்ரவீனால் காலை அசைத்து விளையாட முடியாததால், காலை குறி வைத்தே போட்டான் டேவிட்.

அடுத்த பந்தையும் அப்படியே போட பிரவீன் அடிக்க முடியாமல் திணறினான்.

அடுத்த பந்தை மீண்டும் பிரவீனின் காலை பார்த்து போட, இம்முறை பந்தை மட்டையால் தடுக்க தவறினால் பிரவீன், பந்து அவன் காலில் வேகமாக அடித்தது. கீழே விழுந்துவிட்டான், முதலுதவிக்கு ஸ்ப்ரே அடிக்கப்பட்டது.

ஒன்பது பந்துகளுக்கு முப்பத்தி ஐந்து ரன்கள் வேண்டும்.

கமெண்ட்ரி மீண்டும் ஒருமுறை விழுப்புரத்தின் வெற்றி பிரகாசமாய் இருப்பதாக ஒலித்தது.

ஆனால் அடுத்த பந்தை மைதானத்தை விட்டு வெளியே அடித்தான் பிரவீன்.

மீண்டும் கடலூர் ரசிகர்கள் மத்தியில் இருந்து கரகோஷம் வெடித்தது.

எட்டு பந்துகளுக்கு இருபத்தி ஒன்பது ரன்கள் வேண்டும்.........

பகுதி 70 முடிந்தது.

-----------------------தொடரும்-----------------------

எழுதியவர் : ஜெயராமன் (24-Sep-17, 7:06 pm)
பார்வை : 244

மேலே