இன்றைய சூழலில் விதவைப் பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பது நண்பர்கள்

இன்றைய சூழலில் விதவைப் பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பது நண்பர்கள் !!

தமிழ் வணக்கம் :-

தாயே ! தமிழே ! உனை வணங்குகின்றேன் !
சேயாய் எனை நினைத்து செந்தமிழைத் தருவாய் !

தலைமை வணக்கம் !

மதியால் உலகை ஆளும் மதியழகரே !
உதிக்கும் கதிரோன் ஒளியும் சேர்ந்திட
கவியால் உமை வணங்கித் துவங்குகின்றேன் !

அவையடக்கம் !

நிலாமுற்றம் குழுமத்தில் நிலவும் கீழிறங்கி
உலாவரும் காட்சியினைக் காண்பீர் !
வெண்மேகங்கள் துணையிருக்க நிலாமகள்
பூண்ட வெள்ளைக் கோலம் பாரீர் !
சபையோரே ! சான்றோரே ! ஏற்பீர் என் கவியை !!

இன்றைய சூழலில் விதவைப் பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பது நண்பர்கள் !!

விதவைப் பெண்கள் கண்களில் கண்ணீர் !
கதவு பூட்டப்பட்ட நெஞ்சத்துப் பரிதவிப்பு !
இளமையில் விதவை கொடுமையிலும் கொடுமை !
உறவுகள் துரத்த , வெள்ளைச் சேலையில்
விழி நிறைந்த கண்ணீர்க் கடலில் மிதக்கும்
சமூகத்தால் தள்ளிவைக்கப்படும் அவல நிலை !
மண்ணின் பாவமோ ! இது பெண்ணின் பாவமோ !
மண்ணிற்குள் புதைந்தவன் மீண்டு வரல் இல்லை
விண்ணகம் சென்றால் மீண்டும் உயிர்த்தெழுவார் யார் !
பசிப் பிணிக் கொடுமையிலும் கொடுமை !
இளமையில் கைம்பெண்ணாய் சுமங்கலிக் கோலம்
தீக்கிரையாக்குதல் ! காவல் தர வேண்டிய
காவல் நிலையங்களில் பெண்ணோ விலை பேசப்பட
எங்கே போவாள் பாவிமகள் !
தோழியர் மட்டுமே அவளின் பாதுகாப்பு !
நண்பர்கள் சரியாக அமைந்து விட்டால் போதும் !
பாதுகாப்பு அரணாய் நிற்பார் என்பதே உண்மை !
உற்ற நேரத்தில் உறுதுணையாய் பக்கப் பலமாய்
உற்றார் உறவினரை விடவும் விதவைப் பெண்களைப்
பாதுகாப்பவர்கள் நண்பர்களே ! நண்பர்களே !

நன்றி :-

முற்றத்துக் கவியரங்கில் வாய்ப்பு நல்கியமைக்கு
பெற்றிட்டேன் இன்பம் ! நவில்கின்றேன் நன்றியை !

நன்றி ! வணக்கம் !

ஆக்கம் :- சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (24-Sep-17, 8:03 pm)
பார்வை : 68

மேலே