நல்ல நண்பன் கனி தரும் மரம் போல

இனிய கனி தரும் மாமரம்
காலம் தவறாது கனிகள் தந்திடும்
தருவது ஒன்றுதான் அதற்கு தெரியும்
நல்ல நண்பன் கனிதரும் மரம் போல
அவன் நட்பில் கிடைப்பது 'நல்லவை எல்லாம்'
பதிலுக்கு அவன் எதிர்பார்ப்பு ஏதும் இல்லை
அவன் எப்போதுமே தியாகிதான்.வேண்டுமெனில்
தன்னையே கூட தந்திடுவான்.நண்பனுக்கு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (26-Sep-17, 1:32 pm)
பார்வை : 450

மேலே