பிரளயம்
விண்ணதனில் வேகமுடன்,
பறந்திறங்கி வந்திட்ட,
கோளதுவும் புவியதின்,
அண்ணத்தில் இடித்ததிர,
சுற்றிவரும் பூமியதும்,
தாளமது பிசகி நிலை,
முறை தவறித் தடுமாறி,
புதிதொரு முறையதனில்,
வழிவகுத்து வலம்புரிய,
நாற்திசையும் நிலைதவறி,
வடமேற்கு தென்கிழக்காய்,
வரைபடங்கள் மாறிவிட,
வேறிடம் நோக்கி கடல் நீர்,
வழி நகர்ந்து ஊர்ந்துவிட,
இமயமதும் கருநீரில்,
அமிழ்ந்து மறைந்துவிட,
பனிமூடிய பாலைவனத்தில்,
ஒட்டகங்கள் தடுமாற,
கலியுக முடிவதனின்,
பிரளயம் இதுதானோ?
இயற்கையின் நாட்டியத்தை,
இயற்றுபவன் இறைவனெனில்,
நாமே கடவுளென்ற மமதையை
மாற்ற நன் முனைவோம்!
சம்பத்