இதுதான் உலகமா
யார் நிரந்தரம் இந்த மண்ணில்
எது நிரந்தரம் இந்த உலகில்
இன்று நீ அரசன்
நாளை நான்
மறுநாள் இன்னொருவன்
காலத்தின் அடிமைகள் நாம்
இன்றோ நாளையோ
தீயோ ஆறடி மண்ணோ
அதே ஆறடி மண்ணில் இன்னும்
பங்குகேட்க எத்தனை எத்தனை
ஜீவன்கள் காத்திருக்கோ யாரிவார்...
சில உறவுகள் உள்ளத்தில்
சில உறவுகள் உதடுவரை
சில காலம் வசந்தம்
சில காலம் வலிகள்
சில காலம் வறுமை
சில காலம் செழுமை
சில எதிர்பாராத தாழ்வுகள்
சில எதிர்பாராத உயர்வுகள்
இதுதான் வாழ்க்கை என்ற சமரசத்தில் கழிகிறதோ வாழ்நாட்கள்...
நீயா நானா போட்டிகள்
மனித உடல்களை படிகளாக்கி
மேலே ஏறி போகும் மனித மிருகங்கள் எத்தனை எத்தனையோ
அடுத்தவனின் அழுகுரலை
இனிமையான சப்தமாக நினைத்து
நிம்மதியாக உறங்கும் சுயநலஜீவிகள் எத்தனை எத்தனையோ
இதுதான் உலகமா என்ற வருத்தமான வாழ்நாட்கள் கழிந்து போகிறது யார் நிலையையும் பாராமல்...
விட்டுக்கொடுப்பவன்
கெட்டுப்போவதில்லை
குட்டுப்படுபவன் குன்றிபோவதில்லை
பிறப்பு இறப்பு இடைப்பட்ட காலத்தில் வாழ்வது ஒருமுறை
மன்னிப்போம் மறப்போம்
என்ற வாழ்வியல் தத்துவத்தை
பின்பற்றி வாழ்ந்தால்
வாழும் நொடிகள் எல்லாம் வசந்தமே....