தோழி

தொப்புள் கொடி உறவென்று கூறுவதற்குமில்லை..
இரத்த உறவென்றும் கூறுவதற்குமில்லை..
காரணமொன்றை தேடாமல்
உருவாகிய உறவுகள் தான் அவர்கள்.

என் கண் கலங்கினால்
அவர்களின் கைக்குட்டைகள் துடைக்க
முன்வரும் காலம் மாறி
அவர்கள் கண்களும் கலங்குகின்ற
கலங்கமில்லா நட்பு இது..

புகைத்தலுக்கு தானே தடை
புகைப்படங்களுக்கில்லையே என்பதனை நிருபிப்பதாய் தொலைபேசியின் நிறையை அதிகரித்த
அந்த நாட்கள் கெஞ்சினாலும் வரப்போவதில்லை...

திசைகாட்டிகள் வழி காட்டுவதில்
குறை கண்டுபிடிக்க துணிந்தாலும்
என் நண்பர்கள் எப்போதும் நேர் வழிகாட்டிகள் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை...

கும்மாளமிட்டு சிரிப்பதற்கு பெரியதாய்
காரணம் தேடியதில்லை
குழுவாய் கவலைப்பட நண்பிக்கமைந்த
கஷ்டங்கள் போதும்...

சண்டைகள் நுழையாமல் இருந்ததில்லை
எம் கூட்டினுள்.. விட்டுகொடுத்து பேசும் அடுத்த நொடியில் விடைபெற்று செல்கின்றன பிடிவாதங்கள்...

காதல் படங்களை ஒதுக்கி விட்டு
கல்லூரி படங்களை தேடி பார்த்து
கழித்த இரவுகளை நினைக்கையில்
இனிக்கிறது..

கவலைகள் கசக்கின்ற வேளையில்
இனித்த ஒரே ஒரு விடயம்
நண்பியின் அறிவுரை மாத்திரமே..
வலிகளை வருடுவதாய் அமைந்த
அவர்களின் வார்தைகள் இன்னும் என் காதில் ஒலிக்கின்றன..

தொலைதூர பயனமானாலும்
தொலைபேசியிலாவது தொடரட்டும்
நம் நட்பு...!

எழுதியவர் : Faari (29-Sep-17, 10:01 pm)
Tanglish : thozhi
பார்வை : 65

மேலே