உதயம் தேடும் அஸ்தமனம் --- நெடுந்தொடர் ----- பாகம் 13

"என்......என்ன சொல்ற அனு?" என்று அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாமல் கேட்டான் பிரவீன்.

"ஆமாம், எனக்கு கல்யாணம் ஆயிருச்சு, டைவர்ஸும் ஆயிருச்சு, போதுமா" என்றாள் அனுஷா அழுதுகொண்டே.

அருண் அதிர்ச்சியடைந்து பிரவீனின் தோளில் கை வைத்தான்.

"அருண், நீ கெளம்பு டா, நான் வரேன்" என்றான் பிரவீன்.

சூழ்நிலையை புரிந்துகொண்ட அருண் மறுவார்த்தை பேசாமல் கிளம்பினான்.

"அனு, நீ சொல்றது நம்ப முடியல" என்றான் பிரவீன்.

"நீ நம்பினாலும் நம்பாட்டியும் அதான் உண்மை, இனிமே என் பின்னாடி வராத, லவ் பண்ரானாம் லவ், ப்ளீஸ் என் மனசை கஷ்டப்படுத்தாத இனிமேலாச்சும்" என்றபடி கண்களை துடைத்துக்கொண்டே வீட்டை நோக்கி நடந்தாள் அனு.

"அனு அனு, நான் உன்கிட்ட நெருங்கி வரும்போதெல்லாம் நீ விலகி போனதுக்கு இது தான் காரணமா,?" என்றான் பிரவீன்.

"பிரவீன், எனக்கு மேரேஜ் ஆயிருச்சு, அதான் உண்மை, இனிமே லவ் அது இதுன்னு என் பின்னாடி வராத" என்றாள் அனுஷா.

"சாரி அனு, நீ எவ்ளோ பெரிய பிரச்சனை ல இருக்கன்னு புரியுது, எவ்ளோ மனசு கஷ்டத்துல நீ இருக்க, சாரி. இது தெரியாம நானும் உன்னை அவ்ளோ ஹர்ட் பண்ணிருக்கேன், சரி, இனிமே உன்னை நான் தொந்தரவு பண்ணமாட்டேன்" என்றான் பிரவீன்.

"இது உண்மைன்னு நம்பறேன் பிரவீன்" என்றாள் அனுஷா.

"இன்னிக்கு இப்போ என்கூட நீ ஒரு காபி குடிக்க ஓகே சொல்லு, நாளைல இருந்து கண்டிப்பா உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்" என்றான் பிரவீன்.

"ப்ராமிஸ் பிரவீன்?" என்றாள் அனுஷா.

"கண்டிப்பா" என்றான் பிரவீன்.

முதல் முறையாக ப்ரவீனுடன் காபி குடிக்க அவனோடு நடந்தாள் அனுஷா.

இருந்தாலும் பிரவீன் மனதில் இப்படி ஒரு இடியை இறக்கிய அனுஷா இனி பிரவீன் தன்னை தொந்தரவு செய்வதை இன்றோடு நிறுத்திக்கொள்வான் என்று நம்பி அவனோடு சென்றாள், அனால் ப்ரவீனா மனதில் என்னென்னவோ எண்ணியபடி நடந்தான். கல்யாணம் ஆனா என்ன, டைவர்ஸ் ஆயிருச்சு, என்னால இவளை மறக்க முடியாது" என்று நினைத்தபடி நடந்தான்.

"ஹோட்டல் சீகல்ஸ்"

இருவரும் உள்ளே சென்று தனியாக இருந்த டேபிளில் அமர்ந்தனர்.

இரண்டு காபி ஆர்டர் செய்துவிட்டு பொறுமையாக பிரவீன் ஆரம்பித்தான், "அனு, கேக்கறேன்னு தப்பா நினைக்காத, எனக்கு தெரியும், இது நான் கேக்ககூடாத கேள்வி, உனக்கு என்கிட்டே சொல்லவும் பிடிக்காது, சொல்லணும் னு அவசியமும் இல்ல, ஆனா என்னோட மனச நான் மாத்திக்க இது அவசியம் அனு, உனக்கு எப்போ கல்யாணம் ஆச்சு, ஏன் டைவர்ஸ், நீ எவ்ளோ நல்ல பொண்ணு, ஏன் இப்டி......" என்றான் பிரவீன்.

அமைதியாய் இருந்தாள் அனுஷா.

"உனக்கு விருப்பம் இல்லன்னா வேணாம் அனு, ஆனா என் மனசை நான் மாத்திக்க முயற்சி பண்றேன், அதுக்காக தான் கேட்டேன்" என்றான் பிரவீன்.

மூன்று நிமிட மௌனத்திற்கு பிறகு தனது வாயை திறந்தாள் அனுஷா.

"ரெண்டு வருஷம் முன்னாடி, நான் விழுப்புரம் தனலட்சுமி ஸ்ரீநிவாசன் காலேஜ் ல பி.எஸ்.சி. கம்ப்யுட்டர் சயின்ஸ் பைனல் இயர் படிச்சுட்டு இருந்தேன், என் அப்பா கஷ்டப்பட்டாலும் என்னை படிக்க வெச்சாரு, என் தங்கை ஸ்கூல் படிச்சிட்டு இருந்தா, நான் என் குடும்ப கஷ்டம் எல்லாத்தையும் மனசுல வெச்சுகிட்டு எந்த தப்பு தண்டால மாட்டிக்காம சின்சியரா படிச்சுட்டு இருந்தேன். என்னோட காலேஜ் ல பீஜி பைனல் இயர் ல அசோக் னு ஒருத்தர் படிச்சாரு, நல்லா படிப்பாரு, ரொம்ப நல்ல டைப், நல்லா பழகுவார், நெறையா ஹெல்ப் பண்ணிருக்காரு எனக்கு, ஒருநாள் இப்டி தான் காலேஜ் கேண்டின் ல நானும் என் ப்ரெண்டும் உக்காந்துட்டு இருந்தப்போ அசோக் என்கிட்டே வந்தாரு, திடீர்னு என்னை லவ் பண்றேன் னு சொன்னாரு, எனக்கு என்ன பண்றதுன்னு தெரில, எனக்கும் அசோக்கை பிடிச்சிருந்தது, ஆனா அவர் ப்ரபோஸ் பண்ணது, எனக்கு என்ன பண்ணனும் னு தெரில, நான் எதுவுமே சொல்லாம எழுந்து போய்ட்டேன், அன்னிக்கு ஈவினிங் என்னை பஸ் ஸ்டாண்ட் ல என்னை மீட் பண்ணாரு, ரொம்ப நேரம் என்னை கன்வின்ஸ் பண்ணினாரு, என்னை பத்தி ஒவ்வொரு விஷயம் அவரு சொல்லும்போது எனக்கு ஜில்லுனு இருந்துச்சு, அடுத்த ரெண்டு மூணு வாரத்துல என்னை அவரோட காதல் ல விழ வெச்சுட்டாரு, ரெண்டு பெரும் ஒருத்தர ஒருத்தர் லவ் பண்ண ஆரம்பிச்சோம், எனக்கு தோணும், ஒரு சில சமயத்துல அவருக்கு முத்தம் குடுக்கணும், கட்டி புடிச்சுக்கணும் னு எல்லாம் தோணும், ஆனா அவரு என்கிட்டே ரொம்ப கண்ணியமா நடந்துக்கிட்டாரு, அது எனக்கு இன்னும் புடிச்சுது. சாட்டர்டே எவ்ரி வீக் நாங்க விழுப்புரம் காந்தி பார்க் ல ஈவினிங் போர் டு சிக்ஸ் மீட் பண்ணுவோம், காலேஜ் ல டெய்லி ரெண்டு பெரும் லன்ச் ல பிரேக் டைம் ல ன்னு டைம் கிடைக்கும்போதெல்லாம் பேசிக்குவோம்.
இப்டி தான் காலேஜ் லைப் லவ் ல அவ்ளோ இனிமையா இருந்துது. அப்போ தான் ஒருநாள் என் அப்பா எங்களை பார்க் ல பாத்துட்டாரு, அங்கேயே சத்தம் போட்டாரு, அசோக் எங்க அப்பாவை சமாதான படுத்த ட்ரை பண்ணினாரு, முடில, லாஸ்ட்டா நான் பொறுமையை இழந்து என் அப்பாகிட்ட கல்யாணம் பண்ணிக்கிட்டா இவரை தான் பண்ணிக்குவேன் னு சொன்னேன், கொஞ்ச நாள் எங்க வீட்ல பெரிய பூகம்பமே இருந்துச்சு, எனக்கு வேற மாப்பிள்ளை பாக்க ட்ரை பண்ணினாங்க,ப்ராப்லம் அசோக் வீட்டுக்கும் தெரிஞ்சுது, அவங்க வீட்லயும் பிரச்சனை ஆச்சு, வேற வழி இல்லாம பைனல் எக்ஸாம் முடியாரவரைக்கும் அமைதியா இருந்துட்டு எக்ஸாம் முடிஞ்சதும் வீட்டை விட்டு ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கிட்டு அப்புறம் இவங்க முன்னாடி வந்து நின்னா எதுக்குவாங்கன்னு நெனச்சோம். அப்டியே தான் பண்ணினோம், வீட்டை விட்டு காஞ்சிபுரம் கு போனோம், ஏன் னா ரெண்டு பெரும் ஒண்ணா ஹோட்டல் எடுத்து தங்க வசதி இல்ல, தனித்தனியா ரெண்டு பெரும் திங்கணும், எந்த ஓரள ரெண்டு பேருக்கும் ப்ரெண்ட்ஸ் இருக்காங்கன்னு பாத்தோம், என்னோட பிரென்ட் நர்கீஸ் காஞ்சிபுரம் ல ஒரு ஹாஸ்டல் ல தங்கி இருந்தா, அவகூட நான் தங்கினேன். அசோக்கோட ப்ரெண்ட் முருகேஷ் அங்க இருந்தாரு, அசோக் அவகூட தங்கிட்டாரு, அவங்க ரெண்டு பேருக்கும் விஷயத்தை பொறுமையா சொல்லி அவங்கள சாட்சி கையெழுத்து போட ரெக்வஸ்ட் பண்ணினோம். ரெஜிஸ்டர் ஆபீஸ் ல போய் கல்யாணம் பண்ணிக்கலாம் னு இருந்தோம், ஆனா அங்க போனதுக்கு அப்புறம் தான் தெரியும், ரேகிச்டேர் ஆபீஸ் ல கல்யாணம் பண்ணிக்கறது அவ்ளோ ஈஸி இல்ல, சினிமால காட்டறமாதிரி சும்மா ரெண்டு பேர் போய் சாட்சியோட கல்யாணம் பண்ணிக்கறது எல்லாம் சும்மா, ஆக்சுவலா ரெண்டு குடும்பத்தாரும் சாட்சிக்கு இருக்கணும், நாம எங்க வாழபோறோமோ அந்த அட்ரஸ் குடுக்கணும், நம்மளோட ஐ.டி. ப்ரூப் வேணும், கோவில் இல்லன்னா எந்த இடத்துல கல்யாணம் பண்ணிகிட்டோமோ அந்த ரெசிப்ட் அது இதுன்னு ஏகப்பட்ட பார்மாலிட்டீஸ் சொன்னாங்க, அதுக்குள்ள எங்க ரெண்டு பேர் வீட்லயும் தேட ஆரம்பிச்சாங்க, நாங்க இருக்கற இடமும் அவங்களுக்கு தெரிஞ்சுது. வந்து எங்களை சமாதானப்படுத்தி கூட்டிட்டு போனாங்க, எங்களுக்கு கல்யாணம் பண்ணி வெக்கறதா சொன்னாங்க, ஒரு கோவத்துல எங்க அப்பா என் காதலை ஏத்துக்கலைன்னாலும் போக போக புரிஞ்சுக்கிட்டாரு, அசோக் வீட்லயும் அப்டி தான், அசோக்கும் ஒரு மிடில் க்ளாஸ் பேமிலி தான், ரெண்டு பேர் வீட்ல இருந்தும் சாட்சியா வந்து எங்க கல்யாணம் சிம்பிளா பரிக்கல் லட்சுமி நரசிம்மர் கோவில் ல நடந்துச்சு, விழுப்புரம் ரெஜிஸ்டர் ஆபீஸ் ல ரிஜிஸ்டரும் ஆச்சு, முதல் மூணு மாசம், யூசுவலா வர்ற சின்ன சின்ன மாமியார் மருமகள் பிரச்சனை வந்துச்சு, அது ஒன்னும் அவ்ளோ பெருசா இல்ல,மூணு மாசம் நான் ப்ரெக்னென்ட் ஆகல, அது எனக்கும் அசோக்கும் இருந்த அக்ரிமெண்ட், அசோக் ஒரு பெரிய வேலைக்கு போகணும், செட்டில் ஆகணும், நானும் ஒரு வேலைக்கு போய் கொஞ்சம் பணம் செத்ததும் குழந்தை பெத்துக்கலாம் னு தான் நெனச்சோம், ஒரு கட்டத்துல, வீட்ல எல்லாரோட பேச்சும் அதிகம் ஆச்சு, இந்த மாசமும் உக்காந்துட்டா, அசோக், என்னன்னு டாக்டர் கிட்ட கூட்டிட்டு போ டா இவளை, என்ன, இப்டியே மாசா மாசம் உக்காந்துட்டே இருந்தா என்ன அர்த்தம்? ன்னு எனக்கு பீரியட்ஸ் வந்துட்டாலே அதுவா இருந்து ஒரு பத்து நாளைக்கு பிரச்னையா இருக்கும், அசோக்கும் எடுத்து சொல்லுவாரு, இது தான் எங்க பிளான் னு, ஆனா அக்கம் பக்கம் பேசுறாங்கன்னு ரொம்ப கேவலமான வார்த்தைகளால் பேசுவாங்க, எனக்கு ஏதோ பிரச்சனை, அதனால எங்க அப்பா அன்னை பிளான் பண்ணி அசோக்கை லவ் பண்ணவெச்சு அவரு தலைல என்னை கட்டிட்டாரு, இதுக்கு பேசாம கூட்டி குடுக்கலாம், வரதட்சணை னு ஒரு பைசா இல்லாம கல்யாண செலவு இல்லாம கோவில் ல பண்ணி காசையும் வீணாக்காம இப்டி ஒரு சீக்கு பொண்ணை எங்க வீட்டுக்கு அனுப்பிட்டாரு ன்னு ரொம்ப அசிங்கமா எல்லாம் பேச ஆரம்பிச்சாங்க, ஆரம்பத்துல எனக்கு அசோக் தான் முக்கியம் னு நெனச்சேன், அதனால அவங்க பேசறதை எல்லாம் நான் அசோக் கிட்ட சொல்லவே இல்ல, அசோக்கும் என்னை ரொம்ப நல்லா பாத்துக்கிட்டாரு, என் விருப்பம் இல்லாம தூக்கத்துல கூட என்மேல கை போடமாட்டார், என்னை கல்யாணத்துக்கு முன்னாடி எவ்ளோ லவ் பண்ணாரு அவ்ளோ லவ் கல்யாணத்துக்கு பிறகும் பண்ணினாரு, ஆனா நாள் ஆகா ஆகா அவங்களோட பேச்சு ஒரு லிமிட்டை தாண்டி போச்சு, என்னால ஏத்துக்க முடில, அப்போ தான் ஒரு முடிவு எடுத்தேன், இனிமேலும் செட்டில் ஆகி தான் பிள்ளை னு நாம இருந்தா வீட்ல நிம்மதி போய்டும் னு நெனச்சேன், அன்னிக்கு நைட் அசோக் கிட்ட சொன்னேன், அசோக்கும் அதுக்கு சரி, உனக்கு என்ன தோணுதோ அப்டியே செய்யலாம் னு சொன்னாரு, அன்னிக்கு தான் எங்க வாழ்க்கை ல முதல்முறை எங்களுக்குள்ள உறவு ஏற்பட்டுச்சு, கல்யாணம் ஆகி நாலு மாசம் புருஷன் பொண்டாட்டி உறவு இல்லாம எப்படி எங்க வாழ்க்கை வாழ்ந்திருப்போம், ஒரு பத்து பதினோரு நாள் போச்சு, எனக்கு ஒரு கம்பெனி ல ரிஷப்ஷனிஸ்ட் வேலை கெடச்சுது, எங்க வீட்ல வேணாம் னு சொன்னாங்க, அசோக்கும் கூட ரிஷப்ஷனிஸ்ட் வேணாம் னு சொன்னாரு, ஆனா நான் தான் குடும்பத்துக்கு சப்போட்டா இருக்கட்டுமேன்னு போறேன் னு அடம்புடிச்சேன், ரொம்ப வாக்குவாதத்துக்கு பிறகு அசோக் ஓகே சொன்னாரு,, அவரோட அப்பா அம்மாவையும் சமாதானப்படுத்தினாரு, வேலைக்கு போறது அவ்ளோ சந்தோஷமா இருந்துச்சு, அந்த மாசம் நான் உக்காரல, நாள் தள்ளிப்போக ஆரம்பிச்சுது, எனக்கு என்னன்னா இப்போ தான் ஒரு வேலைக்கு போக ஆரம்பிச்சோம், இப்போ குழந்தை பார்ம் ஆயிருச்சேன்னு இருந்துது, அசோக் கிட்ட சொன்னேன், இப்போ இந்த குழந்தை வேணாம் னு, அசோக் என்னை கன்வின்ஸ் பண்ணினாரு, பார்ம் ஆனதை இப்டி பண்ணாத, அது தப்பு, ஒரு உயிரை அழிக்க வேணாம் னு சொன்னாரு, நானும் அசோக் சொன்னதை ஏத்துக்கிட்டேன், மூணு மாசம், வேலை வீடு அசோக் செக்கப் னு போயிட்டு இருந்துச்சு, எங்க வீட்லயும் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க, ஒருநாள் சாயந்திரம் வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்துட்டு இருந்தேன், எங்க வீடு ஸ்டாப்பிங்க்ல இறங்கி வந்துட்டு இருந்தப்போ பயங்கரமா தலை சுத்தல், வயிறு பயங்கரமா வலி, எப்டியோ சுதாரிச்சுக்கிட்டு வீட்டுக்கு போய்ட்டேன், ஆனாலும் வலி தாங்கல, மதிய சாப்பாடு தான் புட் பாய்சன் ஆயிருச்சுன்னு நான் வாஷ்ரூம் போனேன், ஒரே ரத்தம், பயந்துட்டேன், என் மாமியாரை கூப்பிட்டேன், அவங்க உடனே நூத்தி எட்டுக்கு போன் பண்ணினாங்க, என் அசோக்கும் ஆஸ்பத்திரிக்கு வந்தாரு, அங்க தான் அவருக்கு ஒரு ஷாக் நியூஸ் இருந்துச்சு, என்னோட குழந்தை அபோர்ட் ஆயிருச்சுன்னு" கண்கள் கலங்கி ஒரு நிமிடம் மௌனமானாள் அனுஷா.

"அனு, அழாத, எல்லாரும் பாப்பாங்க, ப்ளீஸ், அதுக்கப்புறம் என்ன ஆச்சு" என்றான் பிரவீன்.

"அதுக்கப்புறம் தான் வீட்ல வார்த்தைகள் அதிகமாச்சு, நான் வேற யாருக்கூடையோ போறேன், என்னோட ஆபீஸ் ல எல்லாரும் என்னை மிஷ்கிட் பண்ராங்க அப்டி இப்படின்னு ரொம்ப அதிகமான வார்த்தைகள், நானும் அசோக் கிட்ட சொல்லி அழுவேன், ஒரு கட்டத்துல என்னடா இவ இப்டி டெய்லி கம்ப்ளெயிண்ட் பண்ணிகிட்டே இருக்கான்னு அசோக் நேரடியா என்கிட்டே சொன்னாரு, இந்த பிரச்சனை நீண்டுட்டே இருந்துது, கல்யாணம் ஆகி பத்து மாசத்துல இவ்ளோ பிரச்சனைகள், இதுக்கு மேல என்னால ஒரு நிமிஷம் கூட அங்க வாழ முடியாதுன்னு தோணுச்சு, அசோக் தனியா வர தயாரா இல்ல, வீட்ல இருக்கறவங்களுக்கு எடுத்து சொல்லவும் முடியல, அவரோட இக்கட்டான நிலைமை புரிஞ்சுது, ஒருநாள் ராத்திரி அவர்கிட்ட சொன்னேன், என்னால உங்களுக்கு ரொம்ப பிரச்சனை, நிம்மதி இல்ல, நானே உங்களுக்கு டைவர்ஸ் குடுத்துடறேன், அதுதான் உங்களுக்கும் நிம்மதி, எனக்கும் நிம்மதி அப்டின்னு சொன்னேன், முதல்ல அசோக் கண்டிப்பா முடியாதுன்னு சொன்னாரு, ஆனா என்னோட நிலைமையை புரிஞ்சுகிட்டு எனக்கு டைவர்ஸ் குடுக்க சரின்னு சொன்னாரு, அவங்க அம்மா அப்பா எல்லாரும் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க, சனியன் ஒழியுது ன்னு எல்லாம் பேசினாங்க, ஒரு வருஷம் ஆகலாமா டைவர்ஸ் வாங்க முடியாது, இன்னும் ரெண்டு மாசம் வெய்ட் பண்ணனும் னு சொன்னாங்க, அசோக்கும் கொஞ்சம் கொஞ்சமா எனக்கு சப்போர்ட் பண்றத விட்டுட்டு அவங்க பேரன்ட்ஸ் கு சப்போர்ட் பண்ண ஆரம்பிச்சாரு, ஒரு சில முறை என்னை கை ஓங்கி அடிக்க ஆரம்பிச்சாரு, அவரும் என்னை தப்பான பொண்ணு, அவரை ஏமாத்திட்டேன் னு எல்லாம் சொல்ல ஆரம்பிச்சாரு, நான் அசோக்கோட பர்மிஷன் இல்லாம ஒரு நாள் என்னோட வீட்டை விட்டு எங்க அப்பா அம்மா வீட்டுக்கு போனேன், என்னை முதலில் ஏத்துக்காத அவங்க பின்ன ஏத்துக்கிட்டாங்க, எப்படி இருந்தாலும் அவங்க பொண்ணு தானே, நான் நானா தேடிக்கிட்ட வாழ்க்கை என்னை எப்படி ஏமாத்திருச்சுன்னு ஆரம்பத்துல எங்க அம்மா அப்பா ரொம்ப சுட்டிக்காட்டினாங்க, என்ன தான் ஹர்டிங்கா இருந்தாலும் உண்மை தானே, ரெண்டு மாசம் போச்சு, இன்னும் ஒரு நாலு மாசம் காத்திருந்தேன், ஆறு மாசம் பிரிஞ்சு வாழ்ந்தோம், டைவர்ஸ் அண்டர் மியூச்சுவல் கான்செண்ட், ஒரு மாசத்துல கேஸ் முடிஞ்சுபோச்சு, நாங்களும் விழுப்புரத்தை விட்டுட்டு பாண்டிக்கு வந்துட்டோம், என் அப்பா அம்மாவை ரொம்ப கஷ்டப்படுத்தறேன், படுத்திட்டேன், இனிமே அவங்களுக்காக தான் வாழப்போறேன், என் தங்கச்சிய நல்லா படிக்க வெச்சு ஒரு நல்ல பையனுக்கு கல்யாணம் பண்ணித்தரணும், அது தான் என்னோட ஒரே குறிக்கோள் பிரவீன், எங்க அம்மா எவ்ளவோ இன்னொரு மேரேஜ் கு வற்புறுத்தறாங்க, ஹ்ம்ம், என் மனசுல என்னிக்கு இருந்தாலும் அசோக் தான் இருக்காரு, அசோக் மட்டும் தான் இருப்பாரு, அவரோட குழந்தையை மூணு மாசம் சுமந்திருக்கேன், வாழ்க்கை பூரா அவரை என் மனசுல சுமந்துட்டு வாழ்ந்துக்குவேன்" என்றாள் அனுஷா.

"அனு, உன் கஷ்டம் புரியுது, நீ இவ்ளோ சின்ன பொண்ணு, ஏன் இன்னொரு கல்யாணம் வேண்டாம்னு...கேட்கக்கூடாது தான், விருப்பம் இல்லன்னா சொல்லவேணாம்" என்றான் பிரவீன்.

"என்மனசுல அப்டி ஒரு எண்ணம் வந்தா அது என்னோட காதலுக்கும் என்னோட அசோக்குக்கும் நான் செய்யற துரோகம், அவங்க பேசினது உண்மைன்னு ஆய்டும், நான் உடம்பு சுகத்துக்கு அலையிற பொண்ணுன்னு அவங்க அம்மா அப்பா பேசினது உண்மைன்னு ஆய்டும்" என்றாள் அனுஷா.

"இப்போ உங்க ஹஸ்பெண்ட் சாரி எக்ஸ் ஹஸ்பெண்ட் என்ன பன்றாரு, அவருக்கு இன்னொரு கல்யாணம் ஆயிருச்சா?" என்றான் பிரவீன்.

"என்னிக்கு டைவர்ஸ் ஆச்சோ, அன்னிலேந்து அவருக்கு நான் போன் பண்றதோ அவரை காண்டாக்ட் பண்றதோ இல்லை, அவரும் அப்டி தான், ஆனா எங்க இருந்தாலும் அவரு சந்தோஷமா இருக்கட்டும்" என்றாள் அனுஷா.

"சோ, அவருக்கு என்ன ஆச்சுன்னு கூட தெரியாதா அனு?" என்றான் பிரவீன்.

"அவரு இன்னும் விழுப்புரம் ல டெக்னோ பார்க் ல ப்ரோக்ராமிஸ்ட்டா இருக்காரு, அது மட்டும் தான் தெரியும்" என்றாள் அனுஷா.

"அனு......நான் உன்னை ரொம்ப சின்சியரா லவ் பண்ணேன், ஈவென் பண்றேன், உன்னை என் மனசுல இருந்து தூக்கி போன்றது ரொம்ப கஷ்டம், நியர்லி இம்பாஸிபிள், பட் அதுக்கு நான் முயற்சி செய்யறேன், நான் கிளம்பறேன், உங்க லைப்பை கேட்டு ரொம்ப கஷ்டப்படறேன், உங்களை நான் ரொம்ப ஹர்ட் பண்ணிருக்கேன், அதுக்கு இந்த சாரி இஸ் நாட் இனப், பட் என்னை மன்னிச்சுருங்க" என்றபடி விழியன் ஓரம் இருந்த ஒரு சொட்டு கண்ணீரை துடைத்தபடி எழுந்து வெளியே சென்றான் பிரவீன்.

அவன் போகும்வரை அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் அனுஷா.

பாகம் 13 முடிந்தது.

--------------------------------தொடரும்--------------------------

எழுதியவர் : ஜெயராமன் (30-Sep-17, 8:40 am)
சேர்த்தது : J P
பார்வை : 386

மேலே