மூச்சுக் காற்று

ஓடுகிற காற்றும்
பாடுகிற பாட்டும்
ஆடுகிற கூற்றும்
மாற்றுகிற மாற்றும்

வானத்தில் மேயும் மேகத்தை ஓடவிட்டு துரத்தோத் துரத்தென துரத்துகின்ற காற்று

மானிடத்தின்
சுவாசக் குழாயுள்
மூச்சாய் நுழைந்து

மானிடத்தை
ஓடுகின்ற நாயைக் கண்டால்

துறத்துகிற
நாயைப்போல
துரத்துகின்றது

உழைத்த உழைப்பை
கைவந்த சோற்றை
வாய்ப்போக விடாது
வெள்ளம் மிதக்கிறது

உழைப்பை இழந்து
மார்பில் அடித்திட
கண்ணீர் வடித்திட
வானும் அழுகிறது

•••••••
ஆபிரகாம் வேளாங்கண்ணி

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (30-Sep-17, 3:00 pm)
Tanglish : moochchuk kaatru
பார்வை : 147

மேலே