சிரிப்புதான் ):):வருகிறது
சிரிப்புதான் வருகிறது
என்னைப் பார்த்து !!!!!!!
யுகம் யுகமாய் ,
எந்தப் பிரதிபலனும் எதிர்பாராது ,
சுழன்று கொண்டே ,சுற்றி வரும்
பூமிப்பந்தை நினைக்கும் போது ,
'ஓயாமல் உழைக்கிறேனே'
என்று அலுத்துக் கொள்ளும்
என்னைப் பார்த்து
சிரிப்புதான் ):):): வருகிறது !!!