அகிலம் என் குடும்பம்

என்னால் உன்னை பார்க்க முடியாது.
எனக்கு கவலையில்லை. என்னால் உன்னை பார்க்க முடியாததால் நீ இல்லை என்று நடிக்க என்னால் முடியாது.

இதோ! இவரால் உன்னை பார்க்க முடியாது.
ஆனால், உன்னால் இவரை பார்க்க முடியும்.
அதோ! அவரால் உன்னை பார்க்க முடியாது.
ஆனால், அவர் உன்னை மிகவும் விரும்புகிறார்.

நீ எங்கள் தந்தை. நாங்கள் உன்னால் உன்னுள் வாழ்கிறோம்.
ஆம். எங்களுக்கு தெரியும், நீ மெல்லிய காற்று போலுள்ளதால் உன்னை பார்க்க முடியாது..

எங்களுக்கு கவலையில்லை. எங்களால் உன்னை பார்க்க முடியாது.
மீண்டும் கவலையில்லை.
அவளால் உன்னை பார்க்க முடியாது.
அவள் அழும் இடத்திற்கு நீ வந்தாய்.
அவளால் உன்னை பார்க்க முடியாது. ஆனால், அவள் இன்னும் உன்னை நேசித்துக் கொண்டிருக்கிறாள்..

நாங்கள் ஒரு குடும்பம்.
ஆனால் நாங்கள் முழுமையடையவில்லை.
நாங்கள் ஒரு குடும்பம். அது மிகவும் சரி.
நான் புதிய தாளில் எழுத தொடங்க வேண்டும்.

என்னால் உன்னை பார்க்க முடியாது...
ஆனால், எனக்கு கவலையில்லை.

என்னால் உன்னை பார்க்க முடியாது. ஆனால், நீ எப்போதும் என்னோடு இருக்கின்றாய்.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (30-Sep-17, 6:54 pm)
Tanglish : akilam en kudumbam
பார்வை : 1210

மேலே