ஒரு ஏக்கம்
என் விண்ணப்பங்களை அனுப்புகின்றேன் அவற்றை ஆழ்மனக்கண்மோடு ஏற்றுக்கொள்ளுங்கள்
சிறுவர்கள்
எங்கள் சுற்றுவட்ட குழந்தைகள்
இளமை அது ஒரு பசும் பூமி
பூக்கள் பூத்து அழகாகி மீண்டும் விதையாகி பூக்கும்
முகம் பார்க்கும் கண்ணாடி
எதிர்காலத்தை போதிப்பதில்லை
எதிர்காலச்சுவடுகளாக குழந்தைகளை
போதிக்கலாம்
சிற்றின்ப வயதில் அறியா மனங்கள்
சிலேடை செய்யவும் ஆசைப்படும்
காற்றை நிரப்பினால் பலூன்கள் அசையத்தான் முற்படும் - ஆனால்
விட்டுவிடத்தான் முடியுமா?
கற்றுக் கொடுங்கள் உலகம் உருண்டைதான் - கல்வி உருண்டை இல்லையென்று.....
றஜீத்.