அழகியவள்

அவளின் அழகை
எப்படி வர்ணிப்பேன்!
மஞ்சள் பூசிய அழகிய
கிராமத்துப் பெண் அவள்,
நிலவாக!!!

அவளின் சிரிப்புக்குத் தான்,
எத்தனை அடிமைகள்!!
மனதைக்
கொள்ளையடிக்கும் அழகியவள்,
மழையாக!!!

முடிவில்லாத
வண்ணக்கோலம் அவள்!
நதியாக!!!

மென்மையான
உள்ளம் கொண்டவள்!
அவளின் மனம் போல,
அவளின் மணமும் அழகு,
மலராக!!!

பறவைகளின்
சரணாலயம் அவள்,
மரமாக!!!

அவளின் கண்கள்,
ஓவியமும் பேசும்!!
அவளது ,
கோபம் கூட அழகு,
சிவந்த வெயிலாக!!!

எதிர்ப்பார்ப்பு இல்லாத
உண்மையான தோழி அவள்,
ஊற்றாக!!!

அவளின் சத்தம்
இனிமையான யுத்தம்!!!
அவளின் பேச்சு,
உயிரைக் கொல்லும்,
கொட்டும் அருவியாக!!!

இசையை அள்ளித்தரும்
இனியவள் அவள்,
காற்றாக!!!

மொத்தத்தில்
பெண்களின் காதலியும் அவள்!!!
இவ்வுலக உயிர்களின்
தாயும் அவள்!!!
இயற்கையானவள்!!!

எழுதியவர் : பானுமதி (1-Oct-17, 1:50 pm)
சேர்த்தது : மதி
Tanglish : azakiyavaL
பார்வை : 256

மேலே