ஜீவன் நான்
நீ யார்
என்பது போல
பார்க்கிறாய்
உன் வெறுப்பில்
என் விருப்பம்
செலுத்த துடிக்கும்
அம்பு நான்
உன் கருப்பில்
வண்ணங்கள் பூச
விரும்பும் ஒரு
வானவில் நான்
உன் கருப்பையில்
என் அணுக்கள்
சுமக்க ஆசைப்படும்
காதலன் நான்
உன் உயிருக்குள்
என் உயிர்அணுக்கள்
அனுப்பி கூட்டணி
சேர்க்க நினைக்கும்
மன்மத குதிரை நான்
உன் செருப்பில்
ஒட்டிக் கொண்டு
வாழ்ந்துவிட நினைக்கும்
சிறுதூசி நான்
உன் நெருப்பில்
கொஞ்சம் குளிர்காய்ந்து
சூடேற்றிகொள்ள நினைக்கும்
குளிர்ப்ரதேசத்து
பனிக்கட்டி நான்
உன் முறைப்பில்
மருகி ஓய்ந்துவிடாமல்
மீண்டும் மீண்டும்
உன்னை நோக்கி
பாயும் வற்றாத
நேச ஊற்று
உன் மறைத்தலில்
இதயத்தை மறைத்தலில்
இளமை நொறுங்கி
தினம் தினம்
மரணிக்கும் ஒரு
மயானம் நான்
உன் மறத்தலில்
என்னை மறத்தலில்
உயிர் இருந்தும்
உயிரற்ற ஜடங்களுக்குள்
ஒன்றானவன் ஒரு
ஜீவன் நான்
உன் துரத்தலில்
என்னை தூரம்
போகச்சொன்ன துரத்தலில்
இதயத்தின் ஆசைகள்
எனக்குள் எரித்து
துறவறம் பூண்ட
ஒரு முனி நான்
உன் தூரத்தில்
உன் துரோகத்தில்
எனக்குள் முடிந்து
எனக்குள் மடிந்து
உனக்குள் உயிர்த்து
மீண்டும் பிறக்கும்
ஒரு நேச
பித்தன் நான்