அவளின் கரம் பிடிக்காத காதலனின் கண்ணீர்
இறப்பதுமேல் உன்னை என்னுடையவள்
என இனி கூறமுடியாது...!!
காதல் பிறந்தபோது தான் என்பிறப்பே
பறந்தது ஆகாயத்தை தொடும் தும்பி போல
துடித்தது நான் உன்னை காதலிக்கிறேன் என்று...!!!
உன் பிறந்த நாளை உன் பெற்றவர்
மறந்தாலும் மறவாது உன் வீட்டு
வாசலில் மண்டியிடுகிறேன்
மறைத்தமிழின் மார்கழி மாத வைகறை பிறை போல
உன்பிறப்பு இவ்வையகம் அறியட்டும் என்று...!!!
பழகியபோது பக்கத்தில் அமர அடுத்தவர்
ஏசிவிடுவார் என்று யோசித்தவள்
புதியதாய் ஒருவருடன் அமர்ந்து அனைவரையும்
பார்க்கிறாள் மணவறையில் ....!
கன்னத்தில் முத்தமிட ஏங்கியபோது என்
கண்ணை மூடி ஓடியவள்
அவன் அவள் கன்னத்தில் உரச
காதில் கிசு... கிசுகிக்க என்
காதல் கச.... கசக்குதடி...!!!
தாடி வைக்கும் பருவம் இல்லை
ஆடைவிட்டு ஆடி கொண்டுருக்கிறேன்
அரசு மதுபானத்துடன்......உன்
மணக்கோலம் பார்த்து...!
இரவில் தொட்டு உரசிய உன்கைவிரல்
மருதாணி மறக்கத்துடிக்கும் என்
காதலை மறுபிறவி எடுக்க வைக்குதடி....!
உன் கழுத்தில் தாலி கயிறு கட்டுகையில்
என் கழுத்தில் தூக்கு கயிறு கட்டக்கூடாதா
என்ற வாதம் எனக்குள் வாதிடுகிறது....???
உன் திருமணம் அக்னி சாட்சியில் தித்திக்க...!!
என் மனமோ அக்னி குழம்பில் திக்... திக் என
எரிந்து கொண்டு இருக்கிறது.
காதல் கல்லுக்கும் வரும் கள்வனுக்கும் வரும்
காட்டு குயிலுக்கும் வரும் ஆனால்
தோல்வி? மனிதனுக்கு மட்டும் தான் வரும்
எனக்கும் அப்படி தான்...