காதலின் முதல் சந்திப்பு
காதல்!!
வலியோடு என்னை கடந்துபோன
காதல் !!!!
சாரல் !!
அவள் அழகிய மறுப்பெயர்
சாரல் !!!!
கால்கள் அவள் பின்னே
ஓடியது ஏனோ தெரியலையே !
கண்கள் அவள் முகம்
பார்க்க ஏங்குது ஏனோ புரியலையே !
அவபித்தம் தலைக்கேறுதே !
காதல்
அவள் அழகிய மறுப்பெயர்
சாரல் !
கண்டதும் காதலில் கொண்டேன்
நம்பிக்கை..
அவளாலே !
அப்பொழுதே என்னை இழந்தேன்..
கண்திறந்தும்
தன்னாலே !!
காதோடு மின்னிய கம்மல்
காத்துல ஆடியதே !
கன்னம் குழி சிரிப்பும்
என்ன அவக்கைதியா ஆகியதே !!
என் மனம் மாட்டிதவிக்குது !
சாரல்
உயிரோடு உறைந்துபோன
காதல் !!
சாரல் மழையில நானும் நனைகிறேன்
மழை என்றும் தொடரணுமே !!!
காதல் வலையில காணாமப்போகிறேன்
காட்டிக்கொடுக்க வருகனமே !!!!
__கிருஷ் அரி