புதிய ஓட்டம்

பள்ளிக்கு தாமதமானதால் -
தாவி தாவி ஒரு ஓட்டம்!
கடைசி மணிஓசைகேட்டு -
கவலை மறந்த ஓட்டம் !

வீடு திரும்பிய மறுகணமே -
வீதியை நோக்கி ஒரு ஓட்டம் !
விளக்கு வைக்கும் வரைதனிலே -
விளையாட்டில் ஒரு ஓட்டம் !

படிப்பை முடித்த நாள்முதலே -
பணத்தை தேடி ஒரு ஓட்டம் !
சேர்த்த பணத்தை சேமிக்க -
செருக்கோடு ஓர் ஓட்டம் !

நிதானத்தை தவறவிட்டு -
நிம்மதியை தேடி ஓர் ஓட்டம் !
நித்தம் நித்தம் ஓட்டமெல்லாம் -
"நான்" எனும் செருக்காளே !

எழுதியவர் : H ஹாஜா மொஹினுதீன் (2-Oct-17, 10:50 am)
Tanglish : puthiya oottam
பார்வை : 81

மேலே