தலைப்பு தெரியவில்லை

கவிகளின் மனதில்
ஆயிரம் வலிகள்,சில வரிகள்..
எழுதிடும் தாளில் மை என துளிகள்... விழித்துளிகள்.. கோபமும் அதன் கொள்கையும் சில நொடிகள்.... தரும் கணங்கள்...
மறந்திட முனைப்பில்,வரும் தொடர்கள்,கனா தொடர்கள்...
நமக்கென வாழ்வில் பல தடைகள்...அதன் சுமைகள்
அதை உடைத்தெழ துடிக்கும் கரங்கள் என் கரங்கள்
பிறர்கென உடலாய் என்னை பிரிந்தும் ...
நம்கென மனதால் நம்மில் இனைந்தும்
கடந்திடும் இவ்வாழ்க்கை பயணம்...
பிழைகள் தெரியவில்லை
வழிகள் புரியவில்லை..
எதற்காய் எனக்கிந்த பாடம்???
அதை நான் இதுவரை அறியவும் இல்லை.

எழுதியவர் : Psycho@sanjeev (7-Oct-17, 11:38 pm)
சேர்த்தது : சஞ்சீவ்
பார்வை : 277

மேலே